பொலிவியாக்குள் மீள நுழைந்த இவா மொராலெஸ்

பொலிவியாவின் முன்னாள் ஜனாதிபதி இவா மொராலெஸ் கடந்தாண்டு இறுதி முதலிருந்த ஆர்ஜென்டீனாவிலிருந்து எல்லையைக் கடந்து நேற்று மீண்டும் பொலிவியாவுக்குச் சென்றுள்ளார்.

செட்டிக்குளம் பிரதே சபையை மீட்க தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றுபடுமா?

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி வசமுள்ள வவுனியா – செட்டிக்குளம் பிரதேச சபையை மீட்க தமிழ்த்; தேசிய கட்சிகள் ஒன்றுபடுமா என்று தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சீன அதிகாரிகள், இந்தியர்களுக்கு கொழும்பில் கொரோனா

இலங்கையில், தொழில் செய்யும் சீன அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியானது. கொழும்பு துறைமுக நகரத்தில் கடமையாற்றுவோரில் 47 பேருக்கு கொ​ரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அதில், சீன அதிகாரிகள் நால்வர் அடங்குகின்றனர்.

இலங்கை: 15 ஆயிரத்தைத் தாண்டியது கொரோனா

நாட்டில் மேலும் 309 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. நாட்டில் மொத்தக் கொரோனா
தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 24ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் நோய்த்தொற்றை ஒழிக்க முடியும் – கோட்டாபய ராஜபக்ஷ

எமது சுகாதார சேவையினால் கொவிட் நோய்த்தொற்றை ஒழிக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதற்காக மக்களின் ஒத்துழைப்பே தேவை மக்களை தெளிவுபடுத்துவது ஊடகங்களின் பொறுப்பும் கடமையுமாகும்சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது மக்களின் கடமையாகும் என்றார்.

கியூபாவைத் தாக்கிய ஈட்டா புயல்

வலுவடைந்து வருகின்ற பருவகால மழைப் புயலான ஈட்டாவானது நேற்று கியூபாவைத் தாக்கியதுடன், ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடாவின் முனையை நோக்கி நகருகிறது. இப்புயலால் பலர் உயிரிழந்ததுடன், மெக்ஸிக்கோ மற்றும் மத்திய அமெரிக்காவை கடந்த வாரம் பெரும் சூறாவளியாகத் தாக்கிய நிலையில் 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

‘கொவிட்-19 தடுப்புமருந்து 90% பயனுள்ளது’

பைஸர் நிறுவனத்தின் சோதனை கொவிட்-19 தடுப்புமருந்தானது ஆரம்பகட்ட முடிவுகளின்படி 90 சதவீதத்துக்கும் அதிகமான பயனுள்ளதாக அந்நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.

பைடனை இதுவரையில் வாழ்த்தாத ரஷ்யா, சீனா

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனை, ரஷ்யா, சீனா, பிரேஸில், வடகொரியா, துருக்கி, மெக்ஸிக்கோ உள்ளிட்டவை இன்னும் வாழ்த்துத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘கோட்டாவுடன் சீன ஜனாதிபதி உரையாடவில்லை’

வார இறுதியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஸும் செயலி மூலம் உரையாடினார் என, இலங்கை ஊடகங்கள் வெளியிட்டிருந்த செய்திக்கு, சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. Zoom செயலியூடாக, இலங்கை ஜனாதிபதியுடன் சீன ஜனாதிபதி, உரையாடியிருந்தார் என, இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.