இந்தியாவின் தடுப்பூசியை ஜனாதிபதி பெற்றுக்கொண்டார்

இந்திய அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை தாங்கிய விசேட விமானம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று முற்பகல் 11.30க்கு வந்தடைந்தது. அந்த தடுப்பூசிகளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டார். அதனை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்​கே கையளித்தார்.

சொல்லத் துணிந்தேன்—55

(தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்)

அண்மையில் (06/07.01.2021) இருநாட்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்துக் கூறிய கூற்றுகள் இப்பத்தியின் கவனத்திற்குள்ளாகிறது.

மக்களோடு மக்களாய்…

தம்பலகாமம் கோட்டத்திற்குற்பட்ட வளங்கள் குறைந்த பாலம்போட்டாறு சித்தி விநாயகர் வித்தியாலய அதிபரின் வேண்டுகோளுக்கினங்க புலம் பெயர் தேசத்தில் உள்ள எமது தோழர்களின் நிதிப்பங்களிப்பின் மூலமாக பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் சுகாதார நடைமுறைகளை பின் பற்றி இடம் பெற்றது.இந்நிகழ்வில் எமது தோழர்களின் சார்பாக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தேன். இந்நிகழ்வை பாடசாலை அதிபர் அவர்கள் தலமை தாங்கியதுடன் பிரதம விருந்தினராக வலயக்கல்வி பணிப்பாளர் அவர்களும் மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நேபாள ஆளும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரதமர்

நேபாளத்தின் ஆளும் கட்சியான கம்யூனிசக் கட்சியிலிருந்து அந்நாட்டின் இடைக்காலப் பிரதமர் கே.பி. ஷர்மா ஒளி இன்று வெளியேற்றப்பட்டதாக அவரது எதிரணியினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றது. இம்மாதம் 08ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான ஒருவார காலத்துக்குள் 145 பேர் டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

தடுப்பூசிகளை வழங்க சீனா இணக்கம்

கொவிட் 19 தொற்றுக்கான தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. சீனாவின் சினோபாம் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிகளில் 300,000 தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, இந்த தடுப்பூசியை பெப்ரவரி மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு வழங்க சீனா எதிர்பார்த்துள்ளது.

மூதூர் திருகோணமலைக்கான கடல் பயணங்களும். ஒரு பயணத்தின் துயர மொழிஒரு நினைவுக் குறிப்பு

திருகோணமலைக்கான விரைவுப் பயணம் அன்றைய நாட்களில் கடல் வழியாகவே அமைந்தது இன்று தரை வழியாக பல பாலங்கள் அமைக்கப் ப்ட்டதனால் கடல் வழிப் பயணம் கை விடப் பட்டு தரை வழிப் ப்யணமே சாத்தியமானதாக்கப் பட்டுள்ளது.இது கொட்டியாரப் பிரதேசம் முழுவதுக்குமான வரப் பிரசாதமாகவே நாம் பார்க்க வேண்டும்.

‘சீனத் தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்கும்’

சீனாவில் தயாரிக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கும் இவ்வாரத்துக்கள் அனுமதி கிடைக்கும் என, மருந்து தயாரிப்பு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அவசர பாவனைக்காக, இந்தத் தடுப்பூசியைப் பதிவு செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.