இன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்!

தனது வெற்றிக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன் இன மற்றும் மத வேறுபாடுகள் இன்றி நாட்டில் வாழும் அனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

கோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் – சி.வி.விக்கினேஸ்வரன்

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோத்தாபய ராஜபக்சவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரம் அவர் தமது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திடுவார் என்று நம்புகின்றேன்.

பயம், அச்சம் இன்றி வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும்

கோட்டாபய வின் வெற்றிக்காக வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவரும் பயம், அச்சம் இன்றி வாழக்கூடிய, பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயல்படுவார் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ 13 இலட்சத்துக்கும் அதிக வாக்குகளினால் வெற்றி பெற்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நிதியமைச்சர் மங்கள சமரவீர இராஜினாமா

நிதியமைச்சர் மங்கள சமரவீர, தமது அமைச்சு பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக தெரிவித்து, தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமது அமைச்சு பதவியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்வதாக அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார். எனினும், ஜனாநாயகத்துக்கான போராட்டத்தில் தொடர்ந்தும் ஐ.தே.கவுடன் இணைந்து போராடவுள்ளதாகவும் அவர் டுவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை: ஜனாதிபதித் தேர்தல் 2019 முடிவுகள்

கோட்டாபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்


இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டதாக உத்தியோகப்பற்றற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. அவருக்கு தனது வாழ்த்துகளை சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கூடவே ஐதே கட்சியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து ராஜினமா சஜித்செய்துள்ளார். தமிழ் பிரதேசம் எங்கும் தனது வெற்றியை உறுதி செய்த சஜித் பிரேமதாச சிங்களப் பகுதிகளில் அதனை உறுதி செய்ய முடியவில்லை. தமிழ் பகுதிகளில் கோட்டபாய பெற்ற மிகக் குறைவான வாக்குகள் தமிழ் மக்களின் எண்ணைக் கருத்தை வெளிப்படுத்துவதாக அமைகின்றன. இதே வேளை அனுர குமார திசநாயக்க விற்கு கூடிய கூட்டம் அவருக்கான ஆதரவான வாக்குகளாக மாறவில்லை என்பதையும் உணர முடிகின்றது

இலங்கை: ஜனாதிபதித் தேர்தல் 2019 முடிவுகள்

கோட்டாபய ராஜபக்‌ஷ
வாக்குகள் – 3,983,787
50.66%

சஜித் பிரேமதாஸ
வாக்குகள் – 3,411,350
43.38%

இலங்கை: ஜனாதிபதித் தேர்தல் 2019 முடிவுகள்

கோட்டாபய ராஜபக்‌ஷ
வாக்குகள் – 4,283,432
50.42%

சஜித் பிரேமதாஸ
வாக்குகள் – 3,707,296
43.64%

இலங்கை: ஜனாதிபதித் தேர்தல் 2019 முடிவுகள்

கோட்டாபய ராஜபக்‌ஷ
வாக்குகள் – 3,589,731
50.27%

சஜித் பிரேமதாஸ
வாக்குகள் – 3,123,748
43.75%

அடுத்த ஜனாதிபதி: அதிகாரமும் வகிபாகமும்

(என்.கே. அஷோக்பரன்)
அத்துடன், தன்னுடைய அமைச்சரவையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் எனவும் இயன்றவரைவில் விரைவாகப் பொதுத்தேர்தலை நடத்தி, ஸ்திரமான புதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தமை, பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.