பாதை சேவை ஆரம்பம்…

திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இலங்கைத்துறைக் கிராமத்திலிருந்து இலங்கைத்துறை முகத்துவாரத்துக்கான போக்குவரத்து இழுவைப் பாதை, இன்று (27) சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. திருகோணமலை ரொட்டரிக் கழகத்தின் 11 இலட்சம் ரூபாய் செலவில் இந்தப் பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

’லங்கா சமசமாஜ கட்சி வடக்கிலும் வேட்பாளர்களை களமிறக்கும்’

பொதுத் தேர்தலில், லங்கா சமசமாஜ கட்சி வடக்கிலும் வேட்பாளர்களை களமிறக்கவுள்ளதாக தெரிவித்த அக்கட்சியின் பொதுச்செயலாளரும் வட மத்திய மாகாண ஆளுநருமான திஸ்ஸ விதாரண, வடக்கில் வாழும் தமிழ் மக்கள் ஐக்கிய தேசிய கட்சி,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போலிப் பிரச்சாரங்களை நம்பி ஏமாறது எமக்கு வாக்களித்து மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தை பலப்படுத்த அணிதிரளுமாறும் அழைப்பு விடுத்தார்.

சோழமுத்தன் உம் பாம்புக் காய்சலும்

(சாகரன்)

50 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்து கிராமங்களில் எல்லாம் விடியற்காலையில் வண்டில் சில்லு பூட்டிய தகரத்தால் ஆன மனிதனால் இழுத்து வரப்படும் வண்டில் ஒன்று ‘கடக்கட்டி முடக்கட்டி’ என்று தார் பதிக்காத கல்லு வீதிகளின் அதிக சத்தத்துடன் தினமும் வலம் இடமாக வருவதை எம்மவர்கள் தினமும் காணும் நடைமுறையாக இருந்தது.

மக்கள் ஒன்றுகூடம் இடங்களில் நடமாடாதீர் – சீனர்களுக்கு அறிவுரை

பொதுமக்கள் அதிகம் ஒன்றுகூடும் இடங்களில் அதிகமாக நடமாட வேண்டமென இலங்கையில் உள்ள சீனப் பிர​ஜைகளுக்கு குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

2020 இன் திசைவழி: சோசலிசத்தின் மீள்வருகை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
காலத்தின் திசைவழிகளைக் காலமே தீர்மானிக்கும் பொழுதுகளில், வரலாறு திருப்பித் தாக்கும். எதுவெல்லாம் முடிந்துவிட்டது என்று முடிவானதோ, அது மீண்டும் புத்தெழுச்சியோடு எழுந்து மீண்டும் வரும். அது முன்பிலும் வலுவாக, உறுதியாக மீளும்.

கொரோனா தொற்று: சீனப் பெண் இன்று வெளியேறுவார்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீன பெண் முழுமையாக குணமடைந்துள்ளதால் நாளைய தினம் வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவார் என சுகாதார​ பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

‘ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இன்று நள்ளிரவில் வெளியேறும் பிரித்தானியா’

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)

இரண்டாம் உலக யுத்தத்தின்பின்,ஐரோப்பிய நாடுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு தங்களையழித்துக்;கொள்ளக் கூடாது என்பதைச் செயற்படுத்தவதற்காக ‘ஐரோப்பிய எக்கனாமிக் கொம்யூனிட்டி’ ஆரம்பிக்கப் பட்டது. அதில் பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, இத்தாலி என்ற ஐந்து நாடுகள் மட்டுமே இருந்தன. 1961ம் ஆண்டு சோவியத் யூனியனுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையிலான ‘பனிப்போர்’ உச்ச நிலையிலிருந்தது. பிரித்தானியாவின் ஆளுமையிலிருந்த பல காலனித்துவ நாடுகள் சுதந்திரம் அடைந்ததால்,பிரித்தானியாவின் பொருளாதாரநிலை மிகவும் சிதைந்த நிலையிலிருந்தது.

தந்தையரும், மகளும்…. கோபி பிறையன்ர்(Kobe Bryant) உம் அவர் மகளும்(Gianna)….

(சாகரன்)

எல்லா தந்தையருக்கும் தனது மகள் என்றால் ஒருவகையான விசேட உறவு பாசப்பிணப்பு இருப்பது இயல்பானதே. பிறக்கும் முதல் குழந்தை மகளாக இருக்க வேண்டும் எதிர்பார்ப்புதான் தந்தையரிடம் இருக்கின்றது. என் வீட்டிற்கு ஒரு தேவதை புதிதாக வரவேண்டும் என்று மனதிற்குள் குதூகலித்து இருப்பர் தந்தையர்.

கொக்கட்டிச்சோலைப் படுகொலையின் 33ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்

பாவப்பட்ட வரலாறு

கொக்கட்டிப் பிரதேசமே குருதியில் நனைந்த கொக்கட்டிச்சோலைப் படுகொலையை மட்டக்களப்பு இறால்பண்ணை படுகொலை என்றும் நினைவுகூறப்படுகிறது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் திட்டமிட்ட அன அழிப்பு நடவடிக்கைளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒரு குரூரமாகும்.

பத்திரிகை மகாநாட்டில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினர் -வவுனியா

சுயாதீனமான பரந்த மாற்று அணியொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் தி.சிறிதரன் தெரிவித்துள்ளார். (காணொளியை காண…….)