மத்திய தரைக்கடல் பகுதியில் பாரிய யுத்தம் ஏற்படும் அபாயம்.

(M.N. Mohamed)

துருக்கி ஐ.நா அங்கீகரித்த லிபிய அரசுடன் ஒப்பந்தம் செய்து மத்தியதரைக் கடலின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்து சில மணி நேரத்துக்குள் லிபியாவின் யுத்தப் பிரபு கலீபா ஹப்தாரின் படைகள் லிபியாவின் தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக பாரியயுத்தமொன்றை ஆரம்பித்துள்ளது.

குடியுரிமை சட்டத்திருத்தம் வேண்டாம்!

“குடிமக்கள் பதிவேடு” வேண்டும்!

(ஐயா கி. வெங்கட்ராமன்,)
பொதுச்செயலாளர்,தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

இந்தியா முழுவதும் இந்தியக் குடிமக்களைக் கணக்கெடுக்கும் “தேசிய குடிமக்கள் பதிவேடு” (என்.ஆர்.சி.) செயல்படுத்தப்படும் என இந்திய உள்துறை அமைச்சர் அமித்சா நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இங்கு வாழும் மக்களில் இந்திய நாட்டுக் குடிமக்கள் யார் என்பதற்கான பதிவேடு குடிமக்கள் பதிவேடாகும்.

மரக்கறி விலையில் திடீர் அதிகரிப்பு

மரக்கறிகளின் விலைகளில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பெரிய வெங்காயம் கிலோகிராம் ஒன்றின் விலை 550 ரூபாயாக காணப்படுகிறது. அத்துடன், கரட் கிலோகிராம் ஒன்றின் விலை 250 ரூபாயாகும். அத்துடன், போஞ்சி உள்ளிட்ட ஏனைய மறக்கறிகளின் விலைகளும் சடுதியாக உயர்வடைந்துள்ளன. நிலவுகிற சீரற்ற காலநிலை காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுவிஸ் தூதரக பணியாளர் கைது; நீதிமன்றில் முன்னிலை

இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மனச்சாட்சித் தமிழர்களும் சோம்பேறித் தமிழர்களும்…..

(வேதநாயகம் தபேந்திரன்)

போர் தந்த புலம் பெயர்வால் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் சில கிராமங்களின் தெருக்கள் முற்றாகவே புலம் பெயர்ந்துள்ளன.
பல நாடுகளில் ஓர் குறிப்பிட்ட பிரதேசம் குறித்த ஊரை அடையாளப்படுத்துவதாக உள்ளன. இழப்புகளும் இறப்புகளும் ஆரம்பித்த கட்டத்தில் புலம்பெயர்ந்தவர்கள் பலர்.

அழியாத கோலங்கள் -2.’ பற்றிய விகடனின் பார்வையில் கூறப்படும் குறைகள் சிலவற்றை தாண்டியும்

“பள்ளிக் காதல், பதின்பருவத்துக் காதல், கல்யாணத்துக்குப் பின் காதல் என பார்த்துப்பழகிய கண்களுக்கு, நாற்பது ப்ளஸ் வயதினரின் காதலை, எவ்வித முகச்சுளிவும் ஏற்படாதவாறு இலக்கியமாய்ப் பளிங்குபோல் காட்டப்படுவதும், கௌரிசங்கரும், மோகனாவும் பேசிக்கொள்வதும், கதையின் பிற்பகுதியில் சீதாவும் மோகனாவும் பேசிக்கொள்வதும் தெளிந்த நீரோடையில் ஓர் இலை மெல்ல மிதப்பதைப் போல் அவ்வளவு அழகாய் இருக்கிறது, அற்புதமாக இருக்கிறது…”

விகடனின் பார்வை…..

தன் எழுத்துக்குக் காரணமான நாயகியை 24 ஆண்டுகளுக்குப் பிறகு காணச் செல்லும் எழுத்தாளருக்கு நேரும் சம்பவங்களின் குவியல்தான் இந்த ‘அழியாத கோலங்கள் -2.’

தான் எழுதிய நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் கௌரிசங்கர், சென்னையில் உள்ள தன் கல்லூரிக் காலத்துக் காதலி மோகனாவைப் பார்க்கச் செல்கிறார். இருவருக்குள்ளும் பேச ஆயிரம் கதைகளும், 24 மணி நேரமும் இருக்கின்றன. ஆனால், அன்றிரவு நடக்கும் ஓர் அசம்பாவிதத்தால் மோகனா இந்தச் சமூகத்தால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறாள். மோகனாவை அச்சூழலிலிருந்து யார் மீட்டெடுக்கிறார்கள் என்பதைக் கவித்துவமாக வரைகிறது இந்த அழியாத கோலங்கள்.

எழுத்தாளர் கௌரிசங்கராக பிரகாஷ்ராஜ். நெற்றி வியர்வை உணர்த்தும் சமிக்ஞையிலிருந்து, படுக்கையில் வீழ்வது வரை மனிதர் தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை உணர்த்துகிறார். கௌரிசங்கரின் மனைவி சீதாவாக ரேவதி, கணவருக்காகவே வாழும் கதாபாத்திரம். முதல் காட்சியிலிருந்து இறுதிவரை படத்தைத் தாங்கி நிற்கும் மோகனா கதாபாத்திரத்தில் அர்ச்சனா. எல்லாம் முடிந்து வாழ்வின் விளம்பில் எந்த சுவாரஸ்யமுமின்றிக் காத்திருக்கும் ஒருவருக்கு, தான் எல்லாமுமாய் நேசித்த ஒருவரின் வருகை எவ்வளவு மகிழ்ச்சியைத் தரும். அதை அப்படியே திரையில் கடத்துகிறார் அர்ச்சனா. சில இடங்களில் வெளிப்படுத்தும் அந்த மிகை நடிப்பை அர்ச்சனா குறைத்திருக்கலாம். போலீஸ் அதிகாரியாக நாசர். கச்சிதமாக நடித்திருக்கிறார்.

பள்ளிக் காதல், பதின்பருவத்துக் காதல், கல்யாணத்துக்குப் பின் காதல் என பார்த்துப்பழகிய கண்களுக்கு, நாற்பது ப்ளஸ் வயதினரின் காதலை, எவ்வித முகச்சுளிவும் ஏற்படாதவாறு இலக்கியமாய்ப் பளிங்குபோல் காட்டியதற்கு இயக்குநர் எம்.ஆர். பாரதிக்கு வாழ்த்துகள். கௌரிசங்கரும், மோகனாவும் பேசிக்கொள்வதும், கதையின் பிற்பகுதியில் சீதாவும் மோகனாவும் பேசிக்கொள்வதும் தெளிந்த நீரோடையில் ஓர் இலை மெல்ல மிதப்பதைப் போல் அவ்வளவு அழகாய் இருக்கிறது.

வங்க மொழியில் வெளியான சௌமிக் மித்ராவின் கதையை அழியாத கோலங்களாக எடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர், ஆனால், அதில் கடக்க முடியாத பக்கங்களாய் அத்தனை லாஜிக் மீறல்கள். எட்டு மாடிக்கு ஓடிச் சென்று வாட்ச் மேனை எழுப்புவது முதல் கேமரா இல்லாமலேயே சுற்றிக் கொண்டிருக்கும் செய்தியாளர்கள் வரை அத்தனை செயற்கைகள். ராஜேஷ் நாயரின் ஒளிப்பதிவோ, காசி விஸ்வநாதனின் படத்தொகுப்போ படத்துக்கு எந்தவிதத்திலும் துணைநிற்கவில்லை. படத்தின் பெரும்பகுதியைக் காப்பாற்றுவது அனுபவமிக்க நடிகர்கள்தாம். மற்றவர்கள் வரும் காட்சிகள் அனைத்தும் ஏதோ மேடை நாடகம் போல் திரைமொழியற்று ஏமாற்றமளிக்கின்றன.

ஓர் ஆத்மார்த்தமான கதையை இன்னும் சிரத்தையோடு எடுத்திருந்தால், என்றென்றைக்கும் அழியாத கோலங்களாய் நிலைத்திருக்கும்.!

தமிழர்சமூகஐனநாயகக்கட்சியின் (SDPT) தோழமை தினம்

திருகோணமலை மூதூர் கங்குவேலியில் தமிழர்சமூகஐனநாயகக்கட்சியின் (SDPT) தோழமை தினம், இலவச கண் ப‌ரிசோதனை முகாம்நடைபெற்று இலவச மூக்கு கண்ணாடியும் வழங்கபட்டது,

திருகோணமலையில் தோழமை தினம்

திருகோணமலை தோழர்களினால் மூதூர் முத்துச்சேனை R.D.S கட்டடத்தில் தோழமை தினம் நடத்தப்பட்டது.
தோழர் பத்மநாபா 30 வருடங்களுக்கு முன் தீர்க்க தரிசனமாக எடுத்த முடிவின் அமைவாக 13வது திருத்த சட்டத்தை ஏற்றுக்கொண்டு வடகிழக்கு மாகாண அரசு அமைக்கப்பட்டது. தொடர்ந்து அது இயங்குவதற்கு தமிழ் தலைவர்கள் யாவரும் ஏற்று கொள்ளாததன் விளைவு குறுகிய காலத்தில் மாகாண அரசு சிதைக்கப்பட்டு விட்டன. அன்று மறுத்த தலைவர்களும் 13வது திருத்த சட்டத்தை இன்று உள்ள தலைவர்களும் அமுல்படுத்துமாறு போராட்ட வீரர்கள் போல் மாயை காட்டுகிறார்கள். இலகுவாக கிடைத்ததை போட்டு உடைத்துவிட்டு ஒட்டுவதற்கு பாடு படுவதாக பாசாங்கு செய்கின்றனர். இவை யாவும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்து நினைவு கூறப்பட்டது .