மக்களோடு மக்களாய் தமிழர் சமூக ஜனநாயக கட்சியினர்

வவுனியாவில் தமிழர் சமூக ஐனநாயகக்கட்சியின் தோழர்களுடனும் புத்திஜீவிகளுடனும் இன்று மாலை 3 மணியளவில் நடைபெற்ற கலந்துரையாடல்

எழுக தமிழ்; சீரழிந்த அரசியலின் கதை

எதிர்வரும் 16ஆம் திகதி நடக்கவுள்ள ‘எழுக தமிழ்’ நிகழ்வு பற்றி, மக்கள் மத்தியில் இல்லாத எதிர்பார்ப்பைத் தமிழ் ஊடகங்களும் எல்லாமறிந்த அரசியல் ஞானிகளும் ஏற்படுத்தி வருகிறார்கள். ‘எழுக தமிழ்’ என்பது தொடக்கமல்ல; சீரழிந்த மக்களை ஏமாற்றும், அரசியல் தலைமைகளின் கூத்துகளின் தொடர்ச்சி ஆகும்.

கொலம்பியத் தாக்குதல் குறித்து எச்சரிக்கும் மதுரோ

கொலம்பிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படக்கூடிய தாக்குதலொன்றுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு ஆயுதப் படைகளுக்கு நேற்று முன்தினம் உத்தரவிட்ட வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ, கொலம்பிய புரட்சிகர ஆயுதப் படைகளின் (ஃபார்க்) முன்னாள் கொரில்லா தளபதிகள் குழுவொன்று ஆயுதந்தரித்ததற்கு மத்தியில் எல்லையில் இராணுவ ஒத்திகைகளை அறிவித்துள்ளார்.

‘புதிய அரசியலமைப்புக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்’

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கூட்டணி உருவாக்கியுள்ள அரசியலமைப்புக்கு அனைத்து அரசியல் கட்சிகளின் அனுமதி கிடைத்துள்ளதாக ஒன்றிணைந்த எதிரணியின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

2020இல் அரசாங்கத்தை உருவாக்குவோம்

“2020 ஆண்டு அரசாங்கத்தை நாங்கள் உருவாக்குவோம்” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது மாநாடு கொழும்பு சுகததாச உள்ளரக அரங்கில் இன்று (03) இடம்பெற்றது. இதன்போது, அங்கு உரையாற்றுகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்தார்.

விமான நிலையத்திலிருந்து ரயில் சேவை

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வியாங்கொடை வரையில் புதிய ரயில் பாதையொன்றை நிர்மாணிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று அசாமில் நாளை எங்கோ….?

(Rathan Chandrasekar)

யூதர்களாயினும்,
பாலஸ்தீனியர்களாயினும்,
ரோஹிங்கியா முஸ்லிம்களாயினும்,
இலங்கைத்தமிழராயினும்,
இன்று –
அசாமில் குலைநடுங்க அச்சுறுத்தப்படும்
புலம்பெயர்ந்த வங்க மக்களாயினும்….
இன்றும் கொத்தடிமைகளாக விற்கப்படும்
கறுப்பினமக்கள் – அவராயினும் –
எவராயினும் ஆகுக!

நாடு திரும்பியதும் வேட்பாளர் அறிவிப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மாலைத்தீவு விஜயத்தின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது. மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாளைய தினம் (02) மாலைத்தீவுக்கு செல்லவுள்ளார்.

’மொட்டு வேட்பாளரில் மாற்றமில்லை’

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமது வேட்பாளர் தொடர்பில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாது என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை கூறியுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவாரத்தைகள் இடம்பெற்றாலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என, கெஹலிய குறிப்பிட்டுள்ளார்.