தமிழ் மக்களை வன்மையாக கையாண்டதை போல் அல்லாமல் முஸ்லிம் மக்களை அரசாங்கம் மென்மையாக நடத்த வேண்டும்

  • முன்னாள் அமைச்சர் பஷீர் கோரிக்கை

பாதுகாப்பை விஸ்தரிக்கின்ற விடயங்களை அரசாங்கம் மிக அவதானமாக, நேர்மையாக மேற்கொள்ள வேண்டி உள்ளது, சாதாரண மக்களை மென்மையாக நடத்த வேண்டும், தமிழ் மக்களை வன்மையாக கையாண்ட வரலாற்று தவறு மீண்டும் செய்யப்படவே கூடாது என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், உற்பத்தி திறன்கள் ஊக்குவிப்பு முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்தார்.

சஹ்ரானின் மற்றுமொரு பயிற்சி முகாம் நுவரெலியாவில்

நுவரெலியா பிளக்பூல் பாடசாலைக்கு அருகிலுள்ள இரண்டு மாடிக் கட்டடம், பொலிஸார் தலைமையிலான படையினரால், இன்று(06) சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அம்பாறை, சாய்ந்தமருது பிரதேசத்தில், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் வழங்கிய தகவலையடுத்தே, இந்த கட்டடம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் இடைநிறுத்தம்?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன், உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் செயலாளர் கடிதம் மூலமாக இதனை அறிவித்துள்ளார் என்றும் குறித்த கடிதம் இன்று (06) தொலைநகல் மூலமாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் செயலாளரால் கையொப்பம் இடப்பட்ட குறித்த கடிதத்தில், பதவி இடைநிறுத்தல் தொடர்பான காரணங்கள் அல்லது வேறு தகவல்கள் எவையும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Sam Tambimuttu

29 years ago (on 7 May 1990), my father Sam Tambimuttu, MP for Batticaloa, was assassinated in front of Canadian High Commission at Gregory’s Road, Colombo 7…

…My mother Kala was critically injured and died 9 days later (on 16 May 1990), but not before saying her final goodbye to her husband, as she forced herself to be brought in a stretcher…

…I was 14 then, years have passed but memories are still raw. I still remember, for some reason, my eyes were dried up that day. Today, the tears are flowing 😭…

– Arun Tambimuttu

வெற்றியை அறுவடை செய்வாரா கோட்டா?

(கே. சஞ்சயன்)
உயிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்புகள், அதன் தொடர்ச்சியாகக் கல்முனைப் பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை, அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வதற்கு, உச்சக்கட்ட முயற்சிகள் இப்போது நடந்தேறி வருகின்றன.

தீவிரவாதத்தால் நிலை குலைந்த கிழக்கு

(இலட்சுமணன்)

ஆளாளுக்கு ஊடக சந்திப்புகளை நடத்தி தமிழ், முஸ்லிம் அமைப்புகள் அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கின்றன. சோதனைச்சாவடிகள், கடந்து போன யுத்த காலத்தைப் போல முளைத்து, நிரந்தரமாகிக் கொண்டிருக்கின்றன. “முகத்தாடியை வழித்துவிட்டு, பொட்டு ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்” என்று பொலிஸ் நண்பர் ஒருவர் சொல்கிறார்.

சஹ்ரானின் மைத்துனன் சவூதியில் கைது

உயிர்த்த ஞாயிறு (21) தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹஸீமின் மைத்துனர் என்று குறிப்பிடப்படும் மௌலவி சாந்தவாஜ் எனப்படும் நபர், சவூதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளாரென, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையிலுள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகள், இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கைதுசெய்யப்பட்ட பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணியுள்ளார்களா என்பது தொடர்பில், இந்தியாவின் புலனாய்வு நிறுவனமொன்று, சவூதி அரேபிய அதிகாரிகள் சிலருடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், அந்தச் செய்திகளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஸ்ரீ லங்கன் விமானத்தில் விமானப்படை அதிகாரி

ஸ்ரீ லங்கன் விமானச் சேவையின், தெரிவு செய்யப்பட்ட சில விமானப் பயணங்களுக்காக, விமானப் படை அதிகாரியொருவரை எதிர்வரும் காலங்களில் இணைப்பதற்குத் திட்டமிடப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மேற்படி விமானச் சேவையின் பிர​தான நிறைவேற்று அதிகாரி விபுல குணதிலக்க, எதிர்வரும் நாள்களில், ஸ்ரீ லங்கன் விமானச் சேவைக்குச் சொந்தமான விமானங்களின் பணியாளர்கள் குழுவில், விமானப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளடக்கப்படுவர் என்றும் கூறினார். கட்டுநாயக்காவிலுள்ள பண்டாரநாயக்கா விமான நிலையத்தில், தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.

காத்தான்குடியில் ஐ.எஸ் முகாம்

இலங்கையில், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிரதான முகாமாகவும், உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதல்களின் பிரதான பயிற்சி கூடமாகவும் இருந்த, பயிற்சி முகாமொன்று, விசேட அதிரடிப்படையினரால், மட்டக்களப்பில் முற்றுகையிடப்பட்டது. மட்டக்களப்பு- காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்மனை, ஒல்லிக்குளம் பகுதியிலேயே இந்தமுகாம் மு​ற்றுகையிடப்பட்டது. தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த​வர் என்ற சந்தேகத்தின் பேரில்​ கைது செய்யப்பட்ட, அப்துல் ரவூப் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த முகாம் கைப்பற்றப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசுக்கு ஓர் ஆலோசனை:

ஒரு ஜேசிபி மெசினின் விலை 30 லட்சம்….
40 மெசின்களின் விலை 12 கோடி ரூபாய்.
அதில் ஒரு மெசினில் வேலை செய்பவருக்கு ஊதியம் மாதம் 20 ஆயிரம்.
ஒரு மாதம் இரண்டு ஷிப்டில் வேலை செய்ய இரண்டுபேர் வீதம் 40 மெசினுக்கு 16 லட்சம்.