பொன்ப‌ர‌ப்பி கிராம‌த்தில் சாதிவெறி வ‌ன்முறை. த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் க‌ள்ள‌ மௌன‌ம்.

(Kalai Marx)
ஒரு கால‌த்தில் ந‌க்ச‌லைட்டுகளுட‌ன் இருந்து பிரிந்து சென்ற, தமிழரசன் போன்றோர் த‌னித் த‌மிழ் நாடு காண்ப‌த‌ற்காக‌ ஆயுத‌ப்போராட்ட‌ம் ந‌ட‌த்திய‌ பொன் ப‌ர‌ப்பி கிராம‌த்தில், இந்த‌ சாதிவெறிக் கல‌வ‌ர‌ம் ந‌ட‌ந்துள்ள‌மை குறிப்பிட‌த் த‌க்க‌து. இந்த‌ ச‌ம்ப‌வ‌மான‌து, ஆளும் வ‌ர்க்க‌ம் ம‌க்க‌ளை பிரிப்ப‌த‌ற்கு, ஓட்ட‌ர‌சிய‌ல் எந்த‌ள‌வு ப‌ய‌னுள்ள‌தாக‌ இருக்கிற‌து என்ப‌தை எடுத்துக் காட்டியுள்ள‌து.

லிபியாவின் கடாபி

(Rathan Chandrasekar)

பல்லாண்டுகள் முன்….
லிபியாவின் கடாபி வீட்டின்மீது
அமெரிக்கா குண்டுபோட்டது.

இறந்துபோனவர்களுள் கடாபியின்
ஒன்றரை வயதுக்குழந்தையும் ஒன்று.

வரலாற்றுச் சூழல் அழைக்கிறது மாற்று அரசியல் தலைமைக்காக ஒருங்கிணைவோம்

நேர்காணல்

– முருகேசு சந்திரகுமார்
நேர் கண்டவர் – வாசுகி சிவகுமார்
தமிழரின் அரசியல் நகரமுடியாத நிலையில் மாற்றுத்தலைமையையும், மாற்று அரசியலையும் எதிர்பார்த்து நிற்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அதைக்குறித்துப் பேசுகிறார் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய முருகேசு சந்திரகுமார்.
தமிழ் மிதவாத அரசியல் சக்திகளிடத்திலே இருக்கின்ற எதிர்மறையான அம்சங்களைக் கணக்கில் கொள்ளாமல், ஊடகங்களும் மக்களும் பொது நிறுவனங்களைச் சேர்ந்தோரும் இனவாத அரசியலின் பின்னே கண்ணை மூடிச்செல்லும் அபாயத்தை இந்த நேர்காணலில் அவர் விளக்குகிறார்.
ஒடுக்குமுறையிலிருந்து விடுபட்ட அரசியல் உரையும் வாழ்க்கை மேம்பாடும் சமூக சமத்துவமுமே தமிழ் மக்களுடைய அரசியல் தேவையாகும். இதையே தாம் முன்னெடுப்பதாக வலியுறுத்தும் முருகேசு சந்திரகுமார், மாற்று அணிக்கான கருக்கட்டலை இங்கே கோடி காட்ட முற்படுகிறார்.

வன்னியின் ஆறுகள்.

(Karunakaran Sivarasa)
வன்னியின் வளம் குளமென்றால், குளங்களுக்கு ஆதாரம் ஆறுகள். வன்னியில் ஏறக்குறைய இருபது ஆறுகளுக்கு மேலுண்டு. கனகராயன் ஆறு, குடமுருட்டி ஆறு, மண்டக்கண்ணாறு, கலவரப்பாறு, நாயாறு, பேராறு, அருவியாறு, பறங்கியாறு, பாலியாறு, நெத்தலியாறு, பிரமந்தனாறு, மூங்கிலாறு, என சிறிதும் பெரிதுமாக ஓடுகின்றன.

மட்டக்களப்பு மரணங்கள் மற்றவர்களுக்கானது அல்ல…..! அது எமக்கானதும்தான்….!!

(சாகரன்)

மரணம் வலியானது அதுவும் எதிர்பாராத மரணங்கள் ரணமானது. சுற்றுலா பயணத்தின் நடுவில் உறவுகளுடன் குலாவி மகிழ்ந்திருக்கையில் அது நடைபெற்றால் யாருக்குதான் அதிர்சியை ஏற்படுத்தாது. வாகன விபத்து மரணங்கள் தவிர்க்கப்படக் கூடியவை. வீதிகள் கொள்ளக் கூடியளவு வாகனங்களை விட அதிகமான வாகனப் புழக்கங்கள்… தாங்க முடியாத வேகங்களை அனுமதித்த வீதி வேக அனுமதிப்பு…. போக்குவரத்து விதிகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்காத அரச நிர்வாகம்… விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டினால் காசு கொடுத்து சமாளிக்கலாம் என்ற மனநிலையில் உள்ள வாகனச் சாரதிகள்… இதனை தமக்கு சாதகமாக்கி கையூடுவாங்கும் காவல்துறை என்று போக்குவரத்தில் பாதுகாப்பை காற்றில் பறக்கவிட்ட நிலமை போதியளவு ஓய்வு தூக்கம் கால அவகாசம் இல்லாத வாகனம் செலுத்தும் சூழல் இப்படி பலவும் எம்மை என் உறவுகளிடம் இருந்து எப்போதும் பிரித்தெடுக்கலாம் என்ற சூழல் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் வீதியில் பயணிக்கும் போது நமக்கு ஏற்படும்.

பத்து பேரை பலியெடுத்த கோர விபத்து

மகியங்கனையில் நடந்த விபத்தில் பலியான பத்து பேரில் 4 வயது இரட்டை சிறுமிகளும் பலியாகியுள்ளதுடன் அவர்களது பெற்றோரும் குறித்த விபத்தில் மரணமடைந்துள்ளனர். பதுளை மகியங்கனை பிரதேசத்தில் 17.04.2019 அன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதுடன், 6 பேர் படுங்காயங்களுக்கு உள்ளாகி சம்பவம் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாரிஸின் புகழ்பெற்ற 850 ஆண்டு பழமையான நாட்ரே டாம் தேவாலயத்தில் பயங்கர தீவிபத்து

நாட்ரே-டாம் தேவாலயத்தில் தீ விபத்தின் போது தீ கொளுந்து விட்டு எரிந்த காட்சி: படம்: ஜூலி கேரியாட் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான 850 ஆண்டு பழமையான நாட்ரே-டாம் தேவாலயத்தில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டு, நீண்ட போராட்டத்துக்குப் பின் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

ஏய்யா.. நீதான் சீமானா….?

ஆமாய்யா… மறக்காம விவசாயி சின்னத்துல ஓட்டு போடுங்க

போன தடவ ரெட்ட மெழுகுவர்த்திக்கு ஓட்டு கேட்டு வந்தியேய்யா

இப்ப அது இல்ல வேற மாத்திட்டோம்யா, விவசாயி சின்னத்துல ஓட்டு போடுங்க

அதுக்கு முன்ன இரட்டைஇலைக்கு ஓட்டு கேட்டு வந்தியேயய்யா..

அதெல்லாம் அப்போ.. இப்போ மறக்காம விவசாயி சின்னத்தில் ஓட்டு போடுங்க..

அதுக்கு முன்னாடி உதய சூரியனுக்கும் ஓட்டு கேட்டு வந்தியேயய்யா..

அதெல்லாம் இல்லேங்கய்யா.. நம்ம முப்பாட்டன் முருகன் கரும்பு விவசாயம் பண்ணதால விவசாயி சின்னத்துல ஓட்டு போடுங்க..

அதுக்கு முன்னாடி கடவுளே இல்லைன்னு வந்து பேசிட்டு போனியேய்யா..

ங்கோத்தா நீ ஓட்டே போட வேணாம் போடா லூசு…

#யாரோ

விஜய் ரீவியின் சுப்பர் சிங்கரும்… இலங்கை தமிழர்களும்….

(சாகரன்)
இலங்கை தமிழ் மக்களுக்கு பிரச்சனைகள் உள்ளன இலங்கையில் வாழும் சகல சமூகங்களும் சம உரிமை பெற்று வாழவில்லை. பேரினவாதம் இனப் படுகொலைகளை கடந்த காலத்தில் நடாத்தி இதன் தொடர்சியாக தனது பேரினவாத சிந்தனையில் தொடர்ந்தும் பயணித்துக் கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம் என்பதை அழிப்பதற்கான செயற்பாடுகளை தொடர்ந்தும் செய்து வருகின்றது. இதற்கு எதிரான சாத்வீக போராடங்களும், ஆயுதப் போராடங்களும் நடைபெற்றன. பலன்… கிடைத்தது என்னமோ சட்டரீதியான அதிகாரப் பரவலாக்கலுக்கு 13ம் திருத்தச் சட்டமும் இதன் அடிப்படையில் அமைந்த மாகாண சபையும் தான்.

வெருகல் படுகொலை: ஈழவிடுதலைப் போராட்டதின் அதியுச்ச கொலைக் களம்

(சாகரன்)

கந்தன் கருணை படுகொலை, துணுக்காய் வதை முகாம் படுகொலை, காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை என பல பரிணாமங்களில் அரங்கேறி வந்த படுகொலைகளின் உச்ச கட்டமாக நடந்தேறியதே வெருகல் படுகொலை. ஆனால் முதல் மூன்று படுகொலைகளும் பொதுவெளியில் பேசப்பட்ட அளவிற்கு வெருகல் படு கொலை பேசப்படவில்லை. கூடவே இருந்து பின்பு பிரிந்து சென்ற துரோகத்திற்கு கண்டனம் என்னத்திற்கு..? என்ற நியாயமற்ற பார்வையும், கிழக்கிற்கு கிடைத்த கொலைப் பரிசு என்ற பிரதேசவாதமும், வெருகல் என்ற மறைவான காட்டுப்பகுதியிற்குள் நடைபெற்ற கொலைகள் என்ற சூழலும் இதனை அதிகம் அம்பலப்படுத்தும் நிலையில் இருந்த கருணா பிரிவின் கருணாவிற்கு ஏற்பட்ட கொலை அச்சுறுத்தல்கள் என்ற பல காரணிகள் இதற்கு காரணமாக இருந்தாலும் ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஒரு இரு தினங்களில் மக்களின் விடிவிற்காக போராட வந்த போராளிகள் சகோதரப்படுகொலை வடிவில் அதிகம் அரகேற்றிய நிகழ்வு இதுதான்.