’புதிய அரசமைப்பு மக்கள் அரசமைப்பாக இருக்க வேண்டும்’

புதியதொரு அரசமைப்பை ​கொண்டு வந்தால் அது மக்களின் அரசமைப்பாக இருக்க வேண்டுமேயன்றி அதனூடாக மதம், இனங்களுக்கிடையிலான பிரிவினைவாதத்தை தூண்டும் அரசமைப்பாக அது இருக்க கூடாதென்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். நேற்று மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த 52 நாள்கள் அரசாங்கம் தொடர்பில் பலரும் குற்றஞ்சுமத்துகின்றனர். எனினும் அதனூடாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நிருபிக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போனதாகத் தெரிவித்த அவர், அந்த குறுகிய காலத்திலும் மக்களுக்கான பல நிவாரணங்களை வழங்கியுள்ளதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.

ஐ.நாவின் அமைதிகாக்கும் படை: லெபனான்

(ஜனகன் முத்துக்குமார்)

கடந்தாண்டு இறுதியில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை, மற்றுமொருமுறை ஒருமனதாக லெபனானில் குடிகொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையை இன்னொராண்டு குடியிருக்கச்செய்வய்வதற்கான ஒரு தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது. இஸ்ரேலின் ஐ.நா. தூதர் டேனி டானன், “இத்தீர்மானமானது நிலைமையை மாற்றக்கூடிய ஒரு குறிப்பிடத்தக்க இராஜதந்திர சாதனை” என்றும், ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, குறித்த தீர்மானம் அமைதிகாக்கும் படையினர் தமது செயற்பாட்டை செய்வதற்கு பூரணமான அதிகாரம், உந்துதலை வழங்கும் எனவும் தெரிவித்திருந்தார். எனினும், மேற்குறித்த எதுவுமே குறித்த தீர்மானம் மூலம் நிகழப்போவதில்லை என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும். மேலதிகமாக இத்தகைய கூற்றுக்கள் அமைதிகாக்கும் படை, லெபனிய அரசியலில் கட்டவிழ்க்கப்படவேண்டிய சிக்கல்களை புரிந்து கொள்ளாத நிலைமையையே நிரூபிப்பதாய் அமைகின்றது.

யுத்தம் நிறைவு பெற்று பத்தாண்டுகள்: என்ன செய்து விட்டோம் நாம்?

(கருணாகரன்)

2007 இல் “புலிகள் இல்லாத ஒரு நிலைமை வரப்போகிறது” என்றார் விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகர் ஒருவர். ஆனால், அவர் சொன்னதை அன்று யாரும் நம்பவில்லை. அப்படி நம்பினாலும் அதை ஏற்றுக்கொள்வதற்கு யாரும் தயாரில்லை. ஏற்றுக்கொள்ளத்தான் வேணும் என்று உள்மனது சொன்னாலும் அதை நடைமுறையில் எப்படி ஏற்றுக்கொள்வது என்ற சிக்கல்கள் இருந்தன. இருக்காதே பின்னே, அவ்வளவு பெரிய இயக்கம். நாற்பதாண்டு காலப் போராட்டம். ஏராளம் படையணிகள். உலகமெங்கும் விரிந்த கட்டமைப்பு. வேண்டிய அளவுக்கு நவீன ஆயுதங்கள். போதாதென்று உயிரையே ஆயுதமாக்கிக் கொண்டுள்ள ஆயிரக்கணக்கான போராளிகள். அனுபவம் வாய்ந்த தளபதிகள். ஏறக்குறைய ஒரு நிழல் அரசு என்ற நிலையில் ஆட்சியும் அதற்கான நிலமும் அதிகாரமும். உள்நாட்டிலும் சர்வதேசப் பரப்பிலும் பெருகிய தமிழாதரவுத்தளம். இப்படியெல்லாம் இருக்கும்போது எப்படிப் புலிகள் இல்லாத ஒரு சூழல் வரும்? என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. அவர்கள் இந்த முக்கிய பிரமுகர் சென்னதைக் கேட்டு நகைத்தனர். அப்படிச் சொன்னவரை எண்ணி உள்ளே சிரித்தனர். உலகமே புலிகளைப் பற்றி, அவர்களுடைய வீரதீரச் செயல்களைப்பற்றிச் சரியாக மதிப்பிட முடியாமல் திணறிக் கொண்டிருக்கும்போது இவர் என்ன புதுக்கணக்குச் சொல்கிறார். புதுசாகக் கதை விடுகிறார்கள் என்று எண்ணினார்கள்.

பதுளையில் நிலநடுக்கம்

பதுளை, பஸ்ஸர, ஹாலி-எல பிரதேசங்களில், பாரிய சப்தத்துடன், இன்று காலை 8.20 மணிக்கு நில அதிர்வொன்று ஏற்பட்டதாக, பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் உதய குமார தெரிவித்தார். அதிக சப்தத்துடன், 3 வினாடிகள் நேரம் இந்த நிலஅதிர்வு காணப்பட்டதாக, பிரதேசவாசிகள் குறிப்பிட்டனர்.

‘வன்னி பல்கலைக்கழகம்’ விரைவில்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தை தவிற, வடக்கில் மற்றுமொரு பல்கலைக்கழகத்தை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதற்கு ‘வன்னி பல்கலைக்கழகம்’ என பெயரிடப்படுமெனவும், உயர்க்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில், இன்று (15) பங்கேற்று உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்​போது தொடர்ந்து உரையாற்றிய அவர், இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை விரைவில் சமர்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். யாழ்.பல்கலையின் வவுனியா வளாகமே, வன்னி பல்கலைக்கழகமாக மாற்றப்படவுள்ளது.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என பெயர் சூட்டப்பட்டது; திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிப்பு: வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என ஸ்டாலின் தகவல்

திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று வெளியிட்டார். உடன் திமுக பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள்.

பாலியல் சம்பவத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு; ஸ்டெர்லைட் போராட்டம் போன்று மாற்ற திட்டமா?- உளவுத் துறை தீவிர கண்காணிப்பு

பாலியல் சம்பவத்தைக் கண்டித்து நடக்கும் மாணவர்கள் போராட்டத்தை, ஸ்டெர்லைட் போராட்டத்தைப்போல் மாற்ற சில அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னணியில் செயல்படுவோர் குறித்து மாவட்ட வாரியாக கண்காணித்து அறிக்கை அனுப்பும்படி உளவுத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Cuba’s Ambassador responds to this CBC News tendentious and manipulative article, “Canada at odds with Cuban ‘ally’ over Maduro’s fate.”

To the Editor of CBC News

I reject categorically and in the strongest terms the tendentious and manipulative article “Canada at odds with Cuba ‘ally’ over Maduro’s fate”, written by journalist Evan Dyer and published today, Sunday, March 3, 2019, by CBC News.

தமிழ் மக்கள் கேட்க வேண்டிய கேள்விகள்

ஜெனீவாத் திருவிழா, கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. இதே பத்தியில் சில காலத்துக்கு முன்னர் சொன்னது போல, ‘அடுத்தது என்ன’ என்ற கேள்விக்கு ‘அடுத்த ஜெனீவா’ பதிலாகக் கிடைத்துள்ளது. சர்வதேசத்தின் பெயரால், இன்னமும் எவ்வளவு காலத்துக்குத் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவார்கள் என்பதற்கு, காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.