மரண அறிவித்தல்

எனது உறவினரும்,வகுப்பு நண்பனும்,முன்னாள்கட்சித் தோழருமான (முகுந்தன்)தியாகராசா ரவிச்சந்திரனின் மறைவையிட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன். – Comrade Kiruba

கூட்டமைப்பிற்கூடாகவே மாற்றுத் தலைமை வரவேண்டும் கட்சியை நடத்துவோர் தவறை உணர வேண்டும்

(வாசுகி சிவகுமார்)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாகவே தமிழர் அரசியலின் மாற்றுத்தலைமையொன்று எதிர்பார்க்கப்படுவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். அதற்குக் கூட்டமைப்பைத் தவறாக வழிநடத்திச் செல்பவர்கள் தமது தவறை உணரவேண்டும் என்றும் அவர் வாரமஞ்சரிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தெரிவித்தார்.

(“கூட்டமைப்பிற்கூடாகவே மாற்றுத் தலைமை வரவேண்டும் கட்சியை நடத்துவோர் தவறை உணர வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா?

(கே. சஞ்சயன்)

அண்மையில், மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் வெற்றியளித்திருப்பதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரமுகர்களும் கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஹுல் காந்தியுடனான சந்திப்பு என்பன, ஒன்றிணைந்த எதிரணியை உற்சாகப்படுத்தி இருக்கின்றன.

(“மஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா?” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை வர்த்தகர்களை அழைக்கப்போகிறதா அலிபாபா?

(அனுதினன் சுதந்திரநாதன்)

இன்றைய இலங்கையில் இணைய வணிகமென்பது மிக விரைவாக வளர்ச்சியடைந்து வருகின்ற வணிகமாகும். ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, மிக முன்னேற்றகரமானத் தொழில்நுட்ப வசதிகளும் இணைய அறிவும், இந்த வளர்ச்சிக்கு உச்சதுணையாக அமைந்திருக்கிறது. இதன் காரணமாக, வருடாவருடம் இலங்கையின் இணையவழி வணிகமானது, இருமடங்காக அதிகரித்துச் செல்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இதன் விளைவாக, இலங்கையின் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குபவர்களும் விற்பனை செய்பவர்களும், இணையவழி வர்த்தகத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளார்கள்.

(“இலங்கை வர்த்தகர்களை அழைக்கப்போகிறதா அலிபாபா?” தொடர்ந்து வாசிக்க…)

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியின் பின்னணி

(ச. சந்திரசேகர்)

ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. நேற்றைய தினம் (20) நாணயமாற்று வீதங்களின் பிரகாரம் அமெரிக்க டொலர் ஒன்றை மத்திய வங்கி வாங்கும் விலை ரூ. 162.94 எனவும், விற்பனை செய்யும் விலை ரூ. 171.00 எனவும் பதிவாகியிருந்தது.

(“ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியின் பின்னணி” தொடர்ந்து வாசிக்க…)

பதில் முதலமைச்சராக மறுதபாண்டி​ ராமேஸ்வரன்

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா, உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், அமெரிக்காவுக்குப் பயணமாகியுள்ளமையால், பதில் முதலமைச்சராக, மத்திய மாகாண தமிழ் கல்வி இந்து கலாச்சார மற்றும் விவசாயத்துறை அமைச்சர் மருதுபாண்டி ராமேஸ்வரன், நாளை (21), கடமைகளை பொறுப்பேற்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(“பதில் முதலமைச்சராக மறுதபாண்டி​ ராமேஸ்வரன்” தொடர்ந்து வாசிக்க…)

தேர்தலில் தலையிடவில்லை என்கிறது சீனா

இவ்வாண்டு நவம்பரில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் தலையிடுவதற்கு சீனா முயல்கிறது என்ற, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் விமர்சனத்தை, சீனா நிராகரித்துள்ளது. ஐ.அமெரிக்கப் பொருட்களின் இறக்குமதிக்கான தீர்வையை அதிகரிக்கும் முடிவை சீனா எடுத்தமை மூலமாகவே, அந்நாடு இவ்வாறு முயல்கிறது என, ஜனாதிபதி ட்ரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.

(“தேர்தலில் தலையிடவில்லை என்கிறது சீனா” தொடர்ந்து வாசிக்க…)

‘மீளவும் முன்னிலைக்கு வர வேண்டும்’

கல்வியில் முன்னிலையில் இருந்த யாழ்ப்பாணம் தற்போது பின்னடைவைச் சந்தித்திருக்கின்ற நிலையில் மீளவும் முன்னிலைக்கு வர வேண்டுமென, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். அத்துடன், கல்வி மற்றும் பொருளாதார மற்றும் அபிவிருத்தி ரீதியிலான முன்னேற்றத்துக்கு அரசியல்வாதிகள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

(“‘மீளவும் முன்னிலைக்கு வர வேண்டும்’” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நாளை போராட்டம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில், நாளை (21) காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த அரசியல் கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தக் கவனயீர்ப்புப் போராட்டமானது, யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையத்துக்கு முன்னால், நாளை காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில், அனைவரையும் கலந்துகொள்ளுமாறு, பொது அமைப்புக்களுடன் இணைந்து சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

’ஆவாவை 2 நாள்களுக்குள் அடக்குவோம்’

ஆவா குழுவை, இன்னும் இரண்டு நாள்களுக்குள் அடக்குவோமென, யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். அத்துடன், நாட்டின் சட்டம், ஒழுங்கு என்பவற்றை மதித்தே பொறுமையாக இருக்கின்றோமெனவும் அவர் குறிப்பிட்டார். பலாலி இராணுவ தலைமையகத்தில், இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.