நீரை வெறுக்க வைத்த…? மழை வெள்ளம்…..! (பகுதி 3)

(சாகரன்)

இது வெறும் கேரளாவிற்கான பிரச்சனை அல்ல. ஒவ்வொரு மனிதனும் சிறிது காலம் வாழ்ந்து விட்டு மறைந்து போகும் இந்த பூமிப் பந்து மட்டும் நிலையானது. எமக்கு பின்பு அடுத்த சந்ததி உயிரினங்கள் இங்கு பிறந்து வாழக் காத்திருக்கின்றன. அதுதான் நாம் கூறும் எமது பரம்பரை வாழ்வதற்காக இந்த பூமி காத்திருக்கின்றது. இவர்களின் நியாயமான வாழ்விற்கு இந்த பூமிப் பந்தின் இயல்பான இருக்கை அவசியமாகின்றது. கொந்தளிப்புகளும், குமுறல்களும், எரிமலைகளும், சமுத்திரம், காற்றின் சீற்றங்களும், கொழுத்தும் வெப்பமும் ஏற்புடையன அல்ல.

(“நீரை வெறுக்க வைத்த…? மழை வெள்ளம்…..! (பகுதி 3)” தொடர்ந்து வாசிக்க…)

விக்னேஸ்வரனின் விலகல் உறுதி

(கே. சஞ்சயன்)

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம், கடந்த வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 31) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு தொடர்பாக, அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்புப் பலமாக இருந்தது. ஆனால், அவர் வழக்கம் போலவே, தனது முடிவை உறுதியாக அறிவிக்காமல், நழுவிக் கொண்டிருக்கிறார். ஆனாலும், அவரது உரை, சில தெளிவான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருக்கிறது. அவர் தனது உரையில், தன் முன்பாக உள்ள நான்கு தெரிவுகள் பற்றிக் கூறியிருக்கிறார்.

(“விக்னேஸ்வரனின் விலகல் உறுதி” தொடர்ந்து வாசிக்க…)

தண்ணீர்த் தொழிற்சாலைக்கு எதிராக நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

மட்டக்களப்பு, புல்லுமலை தண்ணீர் போத்தலிடும் தொழிற்சாலைக்கு எதிராக, மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் நாளை (07) நடைபெறுவுள்ள ஹர்த்தாலுக்கு பல்வேறு கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புகள் பல பூரண ஆதரவு தெரிவித்துள்ளனர். குறித்த ஹர்த்தாலுக்கான அழைப்பு, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பால் விடுக்கப்பட்டிருந்தனர். (“தண்ணீர்த் தொழிற்சாலைக்கு எதிராக நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்” தொடர்ந்து வாசிக்க…)

7 பேரை விடுவிக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு: உச்சநீதிமன்றம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தண்டனை அனுபவித்து வருகின்றன பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதற்கான அதிகாரம் தமிழக அரசிற்கு உள்ளனதென, உச்ச நீதிமன்றம் ​அறிவித்துள்ளது.

நல்லூரானும் பொற்கூரையும்

(Gopikrishna Kanagalingam)

நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, வெகுவிமரிசையாக இடம்பெற்று வருகிறது. முக்கியமான திருவிழாக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. சாரை சாரையாக, பல்வேறு பகுதிகளிலிருந்தும், அத்திருவிழாக்களில் பொதுமக்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இவற்றுக்கு மத்தியில் தான், நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட பொற்கூரை, சமூக ஊடக வலையமைப்புகளில் முக்கியமான பேசுபொருளாக அமைந்திருக்கிறது. பொற்கூரையை விமர்சிப்போர் தொடர்ந்தும் விமர்சித்துக் கொண்டிருக்க, அதை நியாயப்படுத்துவோர், அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார்கள்.

(“நல்லூரானும் பொற்கூரையும்” தொடர்ந்து வாசிக்க…)

துருக்கியின் பொருளாதார நெருக்கடி: கட்டவிழும் கோலங்கள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உலக நாடுகள் வெவ்வேறு வடிவங்களில் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குகின்றன. அவை பற்றிய பல கதைகள் எமக்குச் சொல்லப்பட்டாலும், பொருளாதார நெருக்கடி என்பது, உலகின் பெரும்பான்மையான நாடுகளில் நிலவுகின்றது என்பது உண்மையே. இதை அரசாங்கங்களும் அறிவுஜீவிகளும் பொருளாதார வல்லுநர்களும் தொடர்ந்து மறுத்து வந்தாலும், உலக நிலைவரங்கள், பொருளாதார நெருக்கடியின் நிகழ்நிலையை, தொடர்ந்து காட்டிக் கொண்டேயுள்ளன.

(“துருக்கியின் பொருளாதார நெருக்கடி: கட்டவிழும் கோலங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

விக்கியின் தெரிவு: பேரவை உரையை முன்வைத்து

(புருஜோத்தமன் தங்கமயில்)

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள நிலையில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தன்னுடைய அடுத்த கட்ட நகர்வுகள் பற்றிப் பேசியிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அணிக்கு, அவர் தலைமையேற்க வேண்டும் என்று, தமிழ் மக்கள் பேரவையிலுள்ள சில கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் புத்திஜீவிகளும் தொடர்ந்து விடுத்துவரும் கோரிக்கைகளுக்குச் சாதகமான பதிலொன்றை வழங்கும் கட்டத்துக்கு, அவர் வந்திருக்கின்றார்.

(“விக்கியின் தெரிவு: பேரவை உரையை முன்வைத்து” தொடர்ந்து வாசிக்க…)

இனி பரதத்தை தெருவில் ஆட முடியாது – வடமாகாண கல்வி அமைச்சர்

இனி பரதத்தை தெருவில் ஆட முடியாது என்றொரு சுற்றுநிருபத்தை வடமாகாண கல்வியமைச்சு அறிவிக்கப் போவதாக கல்வியமைச்சர் சர்வேஸ்வரன் சொல்லியிருக்கிறார். எந்தக் கலை வடிவத்தை எங்கு, யார் நிகழ்த்த விரும்புகிறார்களோ அவர்கள் அங்கு அப்படி நிகழ்த்துவதை தடை செய்யவோ, கட்டுப்படுத்தவோ அமைச்சுகளுக்கும் அமைச்சர்களுக்கும் அதிகாரமில்லை. ஆடும் கலைஞர்கள் தான் அதைத் தீர்மானிக்க வேண்டும்.

(“இனி பரதத்தை தெருவில் ஆட முடியாது – வடமாகாண கல்வி அமைச்சர்” தொடர்ந்து வாசிக்க…)

மனதில் வருத்தத்தை ஏற்படுத்தாத இயற்கை மரணம்

(சாகரன்)

அண்மையில் உலகத்தின் ‘முக்கிய” இராஜதந்திரி ஒருவரின் இயற்கை மரணம் நிகழ்ந்தது. ஊடகங்கள் இவரின் மரணத்திற்கு வானளவில் புகழாஞ்சி சூட்டி தமது கடமை முடிந்தது என்றும் திருப்திப்பட்டுக் கொண்டனர். உலக வரலாற்றில் இன்று வரை ‘அடிமைகள்’ என்ற அடைமொழி ஒடுக்கு முறையை சந்தித்து வந்த கறுப்பின மக்களின் வழித் தோன்றல் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கோபி அனான் அவர்களையே குறிப்பிடுகின்றேன். உலகத்தின் பல நாடுகளில் வலிந்த தாக்குத்தலை மேற்கத்தேய கூட்டணி நடாத்திய போது இதனை தடுக்காது இதற்கு அனுமதியும் கொடுத்த கால கட்டம் இவரின் செயலாளர் கால கட்டம்.

(“மனதில் வருத்தத்தை ஏற்படுத்தாத இயற்கை மரணம்” தொடர்ந்து வாசிக்க…)