ஹட்டன்-டிக்கோயா நகரசபை இ.தொ.கா வசமானது

ஹட்டன் – டிக்கோய நகரசபைக்கான புதியத் தலைவராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் சடயன் பாலசந்திரனும் உப தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஜே.பாமிஸூம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். புதியத் தலைவருக்கான வாக்கெடுப்பின் போது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சடயன் பாலசந்திரனுக்கு 8 வாக்குகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அழகுமுத்து நந்தகுமாருக்கு 8 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. இதனையடுத்து சபையில் பதற்றமான சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு, பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். இறுதியில் இரு உறுப்பினர்களும் சமமான வாக்குகளை பெற்றிருப்பதால் குலுக்கள் முறையின் மூலம், சடயன் பாலசந்திரன் தெரிவு செய்யப்பட்டார். மேலும் உப தலைவர் பதவிக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரான ஏ.ஜே.எம்.பாஹிம்ஸூம் இ.தொ.காவின் சார்பில் குமார கருணாசிறியும் போட்டியிட்ட நிலையில், ஏ.ஜே.எம்.பாஹிம் உபதலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஆனந்தசுதாகரனின் மகள்…….!

ஆயுள்தண்டனை பெற்ற அரசியல் கைதி ஆனந்தசுதாகரன் தனது மனைவியின் இறுதி நிகழ்வில் சமூகமளிப்பதற்காக பொலீஸாரால் அழைத்துவரப்பட்டார். மூன்று மணி நேரம் மாத்திரம் அவகாசமளிக்கப்பட்ட அந்த இடைவெளியில் ஆனந்தசுகாதரன் தனது மனைவியின் உடலுக்கான இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டார். மனைவியின் உடலத்துக்கு சூடம் காண்பிக்கும்போதுகூட காவல்துறையினர் கடமை தவறாமல் அவரது காலுக்குள்ளேயே நிற்கிறார்கள். தப்பித்தவறி, ஆனந்தசுதாகரன் அவரது மனைவியின் உடலத்தோடு சேர்ந்தழுது அவரது உயிர் பிரிந்துவிட்டால் நல்லாட்சி அரசின் நீதிக்கட்டுமானம் சரிந்து விழுந்துவிடும் என்ற பயம்தான் அந்த காவலாளிகளின் கண்களில் தெரிகிறது. (“ஆனந்தசுதாகரனின் மகள்…….!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை நகரசபை

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை நகரசபை மற்றும் உப்புவெளி பிரதேச சபைக்கான உறுப்பினர்கள் சத்தியபிரமாணத்தின் போது. ..

பறிக்கப்படுமா ரணிலின் பதவி?

(கே. சஞ்சயன்)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், சமர்ப்பித்திருக்கிறது ம ஹிந்த ராஜபக்ஷ ஆதரவு, ஒன்றிணைந்த  எதிரணி.
இந்தமாத முற்பகுதியில், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதும், கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து, அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.   இப்போது அதை அவர்கள், சபாநாயகரிடம் கையளித்திருக்கிறார்கள்.

(“பறிக்கப்படுமா ரணிலின் பதவி?” தொடர்ந்து வாசிக்க…)

பங்களாதேஷ்: அறிவுத்துறையை தாக்கும் மதவாதம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ள, வலுவற்றோர் மலிந்த உலகில் வாழ்கிறோம் என, அங்கும் இங்குமாக உலகின் பல்வேறு மூலைகளில் நடக்கும் நிகழ்வுகள் விடாது நினைவூட்டுகின்றன. சகிப்பின்மையும் மதவாதமும் கருத்துகளை ஒடுக்கும் பிரதான கருவிகளாயுள்ளன. தென்னாசியாவில் கடந்த ஒரு தசாப்தமாக மதவெறி ஒரு வலிய நோயாக வடிவெடுத்துள்ளதோடு, பொதுப்புத்தி மனநிலையை வசப்படுத்திக் காரியங்களைச் சாதிப்பதைக் காண்கிறோம். மதங்கள் வேறுபடினும் அணுகுமுறைகளும் நடைமுறைகளும் ஒரே விதமாக உள்ளன. மதவெறிக்கு மனிதர் புலப்படுவதில்லை. இதை அண்மைய நிலைமைகள் மீண்டும் உணர்த்தியுள்ளன. (“பங்களாதேஷ்: அறிவுத்துறையை தாக்கும் மதவாதம்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழருக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகள் போன்று முஸ்லிம்கள் மீது மத அழிப்பு நடவடிக்கைகள் கட்டவிழ்ப்பு

–  இந்தியாவில் முஸ்லிம் தலைவர்களை சந்தித்து தெளிவூட்டினார் பஷீர் 

இலங்கையில் நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட வகையில் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ள வன்செயல்கள் குறித்து இந்தியாவை சேர்ந்த முஸ்லிம் தலைவர்களுக்கு முன்னாள் அமைச்சரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகு தாவூத் நேரில் சென்று விபரமாக தெரிவித்து உள்ளார்.

(“தமிழருக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகள் போன்று முஸ்லிம்கள் மீது மத அழிப்பு நடவடிக்கைகள் கட்டவிழ்ப்பு” தொடர்ந்து வாசிக்க…)

உறவுமுறைகள் ஓராயிரம் இருந்தது…??? #இன்று ஒன்றுகூட இல்லையே…!!!

*அண்ணன், தம்பி, அக்கா,* *தங்கை, சின்ன அண்ணன்,* *பெரிய அண்ணன், சின்ன அக்கா,* *பெரிய அக்கா,*
*சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான்,* *மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார்,* *தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு,*
*பெரியப்பா பையன்,*
*பெரியப்பா பொண்ணு,*
*அத்தை பையன்,*
*அத்தை பொண்ணு,* *மாமன்* *பொண்ணு,*
*மாமன் பையன்,*

(“உறவுமுறைகள் ஓராயிரம் இருந்தது…??? #இன்று ஒன்றுகூட இல்லையே…!!!” தொடர்ந்து வாசிக்க…)

“இதோ இன்னொரு வாழும் கக்கன்”.

தலைவாசல் ஒன்றியம் சாத்தப்பாடி என்ற ஊரைச் சார்ந்த இளங்கோவன் அய்யா…

1984ல் தலைவாசல் ஒன்றிய குழு கவுன்சிலர், 2001-2006ல் தலைவாசல் ஒன்றிய பெருந்தலைவர் (தலித்தாக இருந்தாலும் பொது தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்),
2011-2016 ல் சேலம் மாவட்ட கவுன்சிலர், 2006ல் தலைவாசல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்.

(““இதோ இன்னொரு வாழும் கக்கன்”.” தொடர்ந்து வாசிக்க…)

ஸ்டீபன் ஹாக்கின்: மனித குலத்தின் இருப்பை நேசித்த விஞ்ஞானி

(சாகரன்)

மூளையின் உயிர்பு இருக்கும் வரை வளர்ச்சியடைந்த உயிரினமான மனிதனால் இந்த மனித குல மேம்பாட்டிற்கு இருப்பிற்காக பணியாற்றமுடியும் என்று நிரூபித்தவர் ஸ்டீபன் ஹாக்கின்.
சேர் ஐசாக் நியூட்டனின் பிறந்த மாதத்தில் அல்லது பூமி தட்டையானது அல்ல உருண்டையானது என்று நிறுவி தண்டனைக்குள்ளான கலிலியோவின் பிறந்த தினத்தில் பிறந்தவர். சார்பு இயங்கியலின் தந்தை ஐன்ஸ்ரைன் பிறந்த நாளில் தனது முளைச் செயற்பாட்டை நிறுத்திக் கொண்டவர் இதே தினம் சமூக முன்னேற்றத்திற்கான கம்யூனிச சமூக விஞ்ஞான தத்துவத்தின் தந்தை கார்ல் மாக்ஸ் இன் பிறந்த நாளும் இதே நாள் தான்.

(“ஸ்டீபன் ஹாக்கின்: மனித குலத்தின் இருப்பை நேசித்த விஞ்ஞானி” தொடர்ந்து வாசிக்க…)