மருதோடை: எப்படியிருக்கிறது எல்லை?

(ஜெரா)

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில் இருக்கிறது, மருதோடை – நாவலடி எனும் கிராமம். அதாவது, வடமாகாணத்தின் எல்லைக் கிராமம். அதன் மறுகரையில், அநுராதபுரம் ஆரம்பிக்கிறது. தமிழ், சிங்களம் என்ற இரு இனங்களையும் நிலவியல்பு அடிப்படையில் இயற்கையாகவே பிரித்து வைத்திருக்கும் இந்த எல்லைக்கோட்டை சிதைத்தமையால் உண்டானதே, 2009 வரைக்கும் நீடித்த இனப்போர். இப்போது போர் முடிந்து 10 ஆண்டுகளைத் தொட்டிருக்கிறது இலங்கை. இந்நிலையில், இனப்போருக்குத் தூபமிட்ட எல்லைக் கிராமங்களில் ஒன்றான மருதோடை எப்படியிருக்கிறது?

(“மருதோடை: எப்படியிருக்கிறது எல்லை?” தொடர்ந்து வாசிக்க…)

நவதாராளவாதத்துக்கு எதிரான இறையாண்மையைப் பரப்புதல்

(அகிலன் கதிர்காமர்)

மூன்று வாரங்கள் நீடித்த பரிகாசமான அரசாங்கமும் நாடாளுமன்றத்துக்குள் காணப்பட்ட மூர்க்கத்தனமான செயற்பாடுகளும், பாரதூரமான அரசியல் நெருக்கடிக்குள் நாட்டைத் தள்ளியுள்ளன. நாடாளுமன்ற ஜனநாயகம், அரசமைப்புச் சட்டபூர்வத்தன்மை ஆகியன தொடர்பான கேள்விகளிலேயே, ஊடகங்களின் கவனமும் பொதுமக்களின் கலந்துரையாடலும் கவனஞ்செலுத்துகின்ற போதிலும், இந்த நெருக்கடியின் அடிப்படையான காரணங்களாக, பல தசாப்தங்களாகத் தொடர்ந்த நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகள் மூலமாக உருவாக்கப்பட்ட ஸ்திரமற்ற நிலைமையும் உடைமையழிப்பும் காணப்படுகின்றன.

(“நவதாராளவாதத்துக்கு எதிரான இறையாண்மையைப் பரப்புதல்” தொடர்ந்து வாசிக்க…)

மோடி, ராகுல் தலைமைக்கு, சவால் விடும் ஐந்து மாநிலத் தேர்தல்கள்

(எம். காசிநாதன்)

‘குட்டித் தேர்தல்’ போல், ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு கட்டங்களாக, ​டிசெம்பர் மாதம் வரை நடைபெறும் இந்தத் தேர்தல்களில், 669 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். மத்திய பிரதேசம், இராஜஸ்தான், தெலுங்கானா, சட்டிஷ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடக்கும் தேர்தல்கள், பாரதிய ஜனதாக் கட்சிக்கும், (பா.ஜ.க) காங்கிரஸ் கட்சிக்கும், ஏழாம் பொருத்தமான போட்டியை உருவாக்கியுள்ளன.

(“மோடி, ராகுல் தலைமைக்கு, சவால் விடும் ஐந்து மாநிலத் தேர்தல்கள்” தொடர்ந்து வாசிக்க…)

19 நவம்பர்

நாபா என்ற மானிடன்
அந்த மனிதர் மிக மிக எளிமையானவர். மனித குலத்தின் மகத்தான லட்சியங்களை கனவுகளில் நிறைத்தவர்.
அந்த கனவுகள் நபாவை மானிடவிடிவு என்னும் மகத்தான தேடலுடன் ஒன்றுரை தசாப்தங்கள் அலைய வைத்தது.
எளிமையும் ,சமூக மாற்றம் கருதிய பேரார்வமும்- சர்வதேச சகோதரத்துவமும் நபாவின் நெஞ்சில் நிரம்பி வழிந்தன.
மாபெரும் தலைவர் மாத்திரமல்ல . மனிதர்களின் சின்ன சின்ன விடயங்களையும் புரிந்து கொண்ட மானிடன்.
(“19 நவம்பர்” தொடர்ந்து வாசிக்க…)

19.11. அன்னை இந்திராகாந்தி ,தோழர்பத்மநாபா பிறந்த தினம்

(தோழர் ஸ்ரனிஸ்)
அன்னை இந்திராகாந்தி அலகாபாத்தில் 1917 ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் திகதி பிறந்தார். ,இந்தியாவின் நலன்களுக்கும்,பிராந்திய நலன்களுக்கும்,உலக அமைதிக்காவும்; அயராது பாடுபட்ட மாபெரும் தலைவர் அவர். தோழர் பத்மநாபா இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை எனும் இத்தில் நவம்பர் 19, 1951 இல் பிறந்தார். இலங்கையின் பல்லின மக்களின் வளர்ச்சிக்காகவும்,பிராந்திய நலன்களுக்காகவும்,உலக அமைதிக்காகவும் அயாராது பாடுபட்ட மாபெரும் தலைவராவார்.
அன்னை இந்திராவும்,தோழர்பத்மநாபாவும் நாளும் பொழுதும் மக்களைப்ற்றியே சிந்திப்பதாலும் சாதாரண மக்கள் தொடர்பாகவும,;,அவர்களது வாழ்வின் உயர்வுக்கு அயராது பாடுபட்டதாலும்,அவர்களுக்கு ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் தொடர்பாகவோ,அவர்களது பாதுகாப்பு தொடர்பாகவோ அக்கறை கொள்ளவில்லை. (“19.11. அன்னை இந்திராகாந்தி ,தோழர்பத்மநாபா பிறந்த தினம்” தொடர்ந்து வாசிக்க…)

ரணில் எனும் பச்சைக் கள்ளன்?

இலங்கை அரசியலில் சுமார் நாற்பதாண்டுகளிற்கு மேலான அனுபவமுள்ள ரணில் விக்கிரமசிங்க இதுவரை அரசியலில் சாதித்தது தான் என்ன? இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவல்ல முதிர்ச்சிடைந்த தலைமைப் பண்பு (statesmanship) அவரிடம் இருக்கிறதா? இலங்கையையின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்த வல்ல ஆற்றல் (ability) அவரிடம் இருக்கிறதா போன்ற கேள்விகள் வியாபிக்கத் தொடங்கியிருக்கிறது.

(“ரணில் எனும் பச்சைக் கள்ளன்?” தொடர்ந்து வாசிக்க…)

தோழமை தினம்

திருகோணமலையில் நாளை (19.11.2018) தோழர் பத்தமநாபாவின் 67வது பிறந்த நாளையொட்டி தோழமை தினம் நினைவு கூரப்படுகின்றது. வருடம் தோறும் நினைவுகூரப்படும் இத்தோழமை தினம் இம்முறை திருகோணமலையில் நினைவு கூரப்படுவதுடன் தோழர் பத்மநாபாவின் உருவச்சிலையும் திறந்து வைக்கப்படவிருக்கின்றது.இதற்கான செயற்பாடுகளை தமிழர் சமுக ஜனநாயக கட்சியின்(SDPT) திருமலை மாவட்ட செயலாளர் தோழர் சத்தியன்( சி.சிவகுமார் ) தலைமையில் தோழர்கள் முன்னெடுத்து வருகின்றார்கள்.

பொறுமை இழக்கலாமா?

நாட்டில் இப்போது என்ன நடக்கிறது? ஒவ்வொரு பிரஜையும் எழுப்புகின்ற கேள்வி இது. உயரிய மக்கள் சபையான பாராளுமன்றம் கூட்டப்படுவதும், அடிதடி சண்டைகளுடன் ஒத்திவைக்கப்படுவதும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. மக்கள் பிரதிநிதிகள் சபையொன்றில் நடக்கின்ற மயிர்க் கூச்செறியும் சண்டைக் காட்சிகளை மக்கள் தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்றாலும் ஏக்கப் பெருமூச்சு ஒன்றுதான் அவர்களது உணர்வு வெளிப்பாடாக இருக்கின்றது.

(“பொறுமை இழக்கலாமா?” தொடர்ந்து வாசிக்க…)

ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் செயற்பட வேண்டும்

தங்கள் ஏழ்மையை ஓரளவுக்கு இது துடைக்கும் என்கிறார்கள் இப்பகுதி மக்கள்

(யது பாஸ்கரன்)

இலங்கையின் மிகவும் வறுமை மிகுந்த மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது. இவ்வாறு இந்த மாவட்டத்தின் வறுமைக்கு, முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் பதினேழாயிரத்துக்கும் அதிகளவான இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பின்றி இருப்பதே காரணமாக அறிய முடிகின்றது. அதுபோல மாவட்டத்தில் தொழில் வாய்ப்பின்மை காரணமாக வறிய மற்றும் நடுத்தர குடும்பங்கள் அல்லப்படுகின்றன.

(“ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் செயற்பட வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

இன்றைய உடனடித் தேவை பரந்துபட்ட கூட்டணியே

70 ஆண்டு சுதந்திரத்தின் உச்ச கட்ட சீரழிவு

(சிராஜ் மஷ்ஹூர்)

1948 இல் இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. இப்போது 2018 இல் இருக்கிறோம். இந்த 70 ஆண்டு கால சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையின் அரசியல் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், தீர்க்க முடியாத பாரிய இழப்புகளும் வேதனைகளுமே எஞ்சியிருக்கின்றன. மிகப்பெரும் சீரழிவுகளே தொடர்கதையாகி வருகிறது. ஐ.தே.க. வும், சு.க வுமே இந்தச் சீரழிவின் பிரதான பங்குதாரர்கள்.

(“இன்றைய உடனடித் தேவை பரந்துபட்ட கூட்டணியே” தொடர்ந்து வாசிக்க…)