புலிகளின் துணுக்காய் கைதி ஒருவரின் துணுக்காய் சிறைச்சாலைக்கான பயணம்

சமீபத்தில் 5 நாள் பயணமாக இலங்கைக்குச் சென்று வர ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. எனது பயணத் திட்டத்தில், துணுக்காய் என்ற இடத்தில் புலிகளின் வதைமுகாம் இருந்த இடத்தைப் போய் பார்ப்பது, அங்கு கொல்லப்பட்ட எமது மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஆகியவை இடம் பெற்றிருந்தது.

(“புலிகளின் துணுக்காய் கைதி ஒருவரின் துணுக்காய் சிறைச்சாலைக்கான பயணம்” தொடர்ந்து வாசிக்க…)

இன்று தேர்தல் …….

எனக்கு நினைவு தெரிந்த முதல் தேர்தல் 1965 தான்.வட்டுக்கோட்டையில் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் எனது தந்தையும் தமிழ் காங்கிரஸ் கட்சியில் திரு சுப்பிரமணியமும், குடைச்சின்னத்தில் திரு தம்மிப்பிள்ளையும் தேர்தலில் நின்றனர். “ எங்கள் லிங்கம் அமிர்தலிங்கம், போடு புள்ளடி வீட்டுக்கு நேரே, எங்கள் அரசு தமிழரசு, தூக்கு மேடை பஞ்சு மெத்தை, சிறைச்சாலை பூஞ்சோலை போன்ற கோஷங்களை முதல் தடவையாக கேட்ட நினைவுகள். இந்த தேர்தலில் எனது தந்தை 11,000 மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது தடவையாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

(“இன்று தேர்தல் …….” தொடர்ந்து வாசிக்க…)

The Economist: எதிர்காலம் குறித்த கேள்விகள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உலகம் அமைதியை விரும்புகிறதா? அப்படியென்றால் எப்படியான அமைதியை விரும்புகிறது? போரற்ற சமத்துவத்தை முன்னிலைப்படுத்தும் அமைதியை விரும்புகிறதா? அல்லது சிலர் கட்டுப்படுத்துவதும் சிலரது நலன்களை முன்னிலைப்படுத்துவதுமான அமைதியை விரும்புகிறதா? உலகத்தின் விருப்பு என்பது யார் சார்ந்தது. வாழும் மக்கள் சார்ந்ததா, ஆட்சியாளர்கள் சார்ந்ததா? இக்கேள்விகளுக்கான பதில்கள் எமக்கு எளிதில் கிடைக்கமாட்டாதவை. ஆனால், எல்லோரும் உலக அமைதி பற்றியும் அதன் தேவை பற்றியும் பேசுவர்.

(“The Economist: எதிர்காலம் குறித்த கேள்விகள்” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் தலைவிதியை தீர்மானிக்கப் போகும் புள்ளடி

(மொஹமட் பாதுஷா)
‘அரசியல் மேய்ப்பர்’களைத் தெரிவு செய்வதற்கான, தீர்க்கமாக முடிவடுக்கும் நிலைக்கு வந்திருக்கின்றோம். இந்தத் தருணம்தான் பொதுவாக எல்லா இனங்களினதும் குறிப்பாக, முஸ்லிம்களின் அரசியல் தலையெழுத்தைத் தீர்மானிக்கப் போகின்றது. இதற்காகவே, நெடுங்காலமாக எல்லாச் சமூகங்களும் காத்துக் கொண்டிருந்தன.

(“அரசியல் தலைவிதியை தீர்மானிக்கப் போகும் புள்ளடி” தொடர்ந்து வாசிக்க…)

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கடிதத் தலைப்புடன் இரு முரண்பட்ட அறிக்கைகள்!

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்ற கடிதத் தலைப்பில் இரு முரண்பட்ட அறிக்கைகள் நேற்று பெப்ரவரி 8 இல் வெளியிடப்பட்டு உள்ளது. முதலாவதாக வந்த அறிக்கை யாழ் பல்கலைக்கழகங்களில் உள்ள துறைசார்ந்த பீடங்களின் மாணர் ஒன்றியங்கள் இணைந்து உடன்பட்டு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறிக்கையாக அப்பீடங்களின் தலைவர்கள் செயலாளர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டது. இதுவே உத்தியோக பூர்வ அறிக்கையாக வெளியிடப்பட்டது.

(“உள்ளாட்சித் தேர்தல் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கடிதத் தலைப்புடன் இரு முரண்பட்ட அறிக்கைகள்!” தொடர்ந்து வாசிக்க…)

இது அஞ்சலி அல்ல

இது அஞ்சலி அல்ல. அதை எழுத எனக்கு அருகதை இல்லை. அஞ்சலிகள் எழுதுவதுமில்லை. கால தூரத்தில் தொங்கி மறைந்த நினைவுத் துகள் ஓன்று ஒரு மரணத்தில் தூசி தட்டி கிளம்பியதன் விளைவு இது. கவிஞர் செழியன் இறந்து போனார் என்றது அறிந்ததும்…ஆ.. இலக்கியத்துக்கு இன்னுமொரு இறப்பும் இழப்பும் என எண்ணத் தோன்றியதே தவிர வேறு எந்த எண்ணமும் தோன்றவில்லை. ஆனால் சில பதிவுகள் அவசியம் – எழுதித்தான் ஆகவேண்டும்.

(“இது அஞ்சலி அல்ல” தொடர்ந்து வாசிக்க…)

சம்பளத்தில் 90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர்! யார் இவர்?

“தற்கொலைக்கு முன் என்னை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்…! “இவை ஏதோ சினிமா டயலாக் அல்ல! இது ஒரு சூப்பர் ஸ்டாரின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள்! நடைமுறையில் நிறைய விவசாயிகளின் தற்கொலை முடிவை மாற்றி வாழ்வதற்கான நம்பிக்கை தந்த உயிரோட்டமுள்ள வார்த்தைகள்! அந்த சூப்பர் ஸ்டார் வேறு யாருமல்ல! இந்தி நடிகர் நானா படேகர் தான்! (தமிழில் இவர் நடித்த படம் : பொம்மலாட்டம்) தனது சம்பாத்தியத்தில் 90 சதவீதத்தை நன்கொடையாக வழங்கிய சூப்பர் ஹீரோ!

(“சம்பளத்தில் 90 சதவீதத்தை விவசாயிகளுக்கு தந்த நடிகர்! யார் இவர்?” தொடர்ந்து வாசிக்க…)

உள்ளுராட்சித் தேர்தலும் அரசியல் கட்சிகள் எதிர்கொள்ளும் சவால்களும்!

(த ஜெயபாலன்)

உள்ளுராட்சித் தேர்தல்கள் மகிந்த ராஜபக்ச, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு இன்றியமையாததொரு தேர்தலாககும். இத்தேர்தலானது நாடு முழவதும் ஒரே நாளில் நடைபெறவுள்ளது. மேலும் என்றுமில்லாத வகையில் கூட்டாட்சியில் இணைந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் இந்தத் தேர்தலில் மீண்டும் தனித் தனியாகப் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலின் பின் இக்கூட்டாட்சியைத் தொடர முடியுமா என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டு உள்ளது. மேலும் இத்தேர்தலில் சுதந்திரக் கட்சி மைத்திரிபால சிறிசேன தலைமையிலும் மகிந்த ராஜபக்ச தலைமையிலும் பிளவுபட்டு ஐக்கிய தேசியக் கட்சியுமாக தெற்கில் மும்முனை போட்டிக் களமாக இந்த உள்ளுராட்சித் தேர்தல் மாறியுள்ளது.

(“உள்ளுராட்சித் தேர்தலும் அரசியல் கட்சிகள் எதிர்கொள்ளும் சவால்களும்!” தொடர்ந்து வாசிக்க…)

நாளை மறுதினம் (10.02.2018) நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபைகளின் தேர்தல் நிலவரம் பற்றிய கண்ணோட்டம்…

யாழ் மாநகர சபை

—————————-

தமிழ்த்தேசியப் பேரவை, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கிடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. எந்தத் தரப்பும் பெரும் பெரும்பான்மையைப் பெறக் கூடிய நிலைமை காணப்படவில்லை. ஆகவே, இதுவரையான வரலாற்றுக்கு மாறான முறையில் இந்த முறை புதியதொரு மாநகராட்சி அமையக் கூடிய வாய்ப்புகளே உள்ளன.

(“நாளை மறுதினம் (10.02.2018) நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபைகளின் தேர்தல் நிலவரம் பற்றிய கண்ணோட்டம்…” தொடர்ந்து வாசிக்க…)

ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்

(சமரன்)

புதிய பதிவுக்காகவும்
புதிய தலைமுறைக்காகவும்
இவற்றைச் சொல்லியே ஆகவேண்டும்.
கால் நூற்றாண்டுகளுக்கு முந்திய நிகழ்வுகளின் நினைவுகள்.

(“ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்” தொடர்ந்து வாசிக்க…)