காரைதீவு மக்களின் ஆணையை துஷ்பிரயோகம் செய்கின்றது மகா சபை! சுதந்திர கட்சி, ஈ. பி. ஆர். எல். எப் தனி வழியில் போட்டியிட திட்சங்கற்பம்

வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை தமிழ் தேசிய கூட்டமைப்பு துஷ்பிரயோகம் செய்து நடப்பது போல காரைதீவு மக்கள் வழங்கி உள்ள ஆணையை காரைதீவு மகா சபை துஷ்பிரயோகம் செய்வதை கண்கூடாக காண முடிகின்றது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான செல்லையா இராசையா, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதி சபையின் முன்னாள் பிரதி தவிசாளருமான வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூட்டாக விடுத்து உள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்கள்.

(“காரைதீவு மக்களின் ஆணையை துஷ்பிரயோகம் செய்கின்றது மகா சபை! சுதந்திர கட்சி, ஈ. பி. ஆர். எல். எப் தனி வழியில் போட்டியிட திட்சங்கற்பம்” தொடர்ந்து வாசிக்க…)

சைக்கிளும் உதயசூரியன் சின்னமும்,

மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்ற மறுபிறவி எடுக்க தயாராகும் உதயசூரியனின் பின்னால் இந்தியாவின்
கொள்கைவகுப்பாளர்கள் பிரசவம் பார்ப்பதாக அறியமுடிகிறது,இந்தியாவை நேரடியாக பகைத்துக்கொள்ளாது பயணிப்பது என்பது இராஜதந்திரம்,இந்தியா எமது சனநாயாக தேர்தலில் யார் எப்படி,எவ்வாறு செயற்படவேண்டும் என முடிவு எடுப்பதற்கு அனுபமதிப்பதென்பது வேறு,ஒன்று இராஜதந்திரம்,மற்றையது அடிமைத்தனம்,தமிழர்களாகிய நாம் அடிமைத்தனத்திற்கு ஒருபோதும் இசைந்துபோககூடாது,அந்தவகையில்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் சிந்திப்பது சரியானதாகவே தெரிகிறது,அவர்கள் அவ்வாறு நினைப்பதற்கு நியாயமானதும்,வலுவானதுமான காரணிகள் இருப்பதும் நிதர்சனமாகும்,

(“சைக்கிளும் உதயசூரியன் சின்னமும்,” தொடர்ந்து வாசிக்க…)

குமரன் பத்மநாதன் வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி !

KP என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வௌிநாடு செல்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. குமரன் பத்மநாதனுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தாக்கல் செய்திருந்த மனுவை நிராகரித்து நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

(“குமரன் பத்மநாதன் வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி !” தொடர்ந்து வாசிக்க…)

என்ன நடக்கின்றது….?

கருணாகரன் சிவராசா – வருசத்துக்கு முந்தி நிராகரிக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட சைக்கிள் சின்னமும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும்

35 வருசத்துக்கு முந்தி நிராகரிக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட வீட்டுச் சின்னமும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும்

30 வருசத்துக்கு முந்தி முந்தி நிராகரிக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட உதய சூரியன் சின்னமும் தமிழர் விடுதலைக் கூட்டணியும்தான்

மீண்டும் தமிழரின் தலை விதியைத் தீர்மானிக்கப்போகின்றன என்றால்…?

இடையில் நடந்தது என்ன?

அதற்கான விலை என்ன?

அவற்றுக்கான மதிப்பு என்ன?

(“என்ன நடக்கின்றது….?” தொடர்ந்து வாசிக்க…)

தேர்தல் களம்….. யுத்த களம் அல்ல?

  • சுரேஸ் + ஆனந்தசங்கரி = தமிழர் விடுதலைக் கூட்டணி
  • தமிழரசுக் கட்சி + வரதர் அணி + PLOT + TELO = தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
  • ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP)
  • சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு + தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி + தமிழ் மக்கள் பேரவை = இன்னும் பெயரிடப்படாத புதிய கூட்டணி.

    சிறிலங்கா சுதந்திக் கட்சி (மகிந்த அணி)

    சிறிலங்கா சுதந்திரக் கட்சி (மைத்திரி அணி

    ஜே.வி.பி

    பல சுயேட்சைக் குழுக்கள்

    எனப் பல தரப்புகள் வடக்கில் தேர்தல் களமிறங்குவதற்கு (போர்க்களமல்ல) ஆயத்தம்! மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் சில வட்டாரங்களில் முஸ்லிம் கட்சிகளும் முனைப்பு

உள்ளுராட்சி தேர்தல் எமக்கான தீர்வை பெற்றுத் தந்துவிடுமா?

உள்ளுராட்சி தேர்தலில் வென்றால் எமது கோரிக்கைகள் நிறைவேறுமா?

ஏன் இந்த முறன்டுபிடிப்பு? எப்போதும் நாம் ஒரே கொள்கையில் இயங்குவதாக கூறி விட்டுக்கொடுப்புகள் இன்றி இனைந்து போகாமல் தனித்து நின்று சாதிக்கப்போவது என்ன? கொள்கை தவறிப்பயணிக்கும் தமிழரசுக் கட்சியை கடிவாளம் போட்டு நிறுத்த கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிடும் கட்சியின் மேதாவித்தனமானது மிகவும் சிறுமையானது.

(“உள்ளுராட்சி தேர்தல் எமக்கான தீர்வை பெற்றுத் தந்துவிடுமா?” தொடர்ந்து வாசிக்க…)

சுற்றிவளைக்கப்பட்ட பிரபாகரன் கொல்லப்பட்ட இறுதிச்சமரை விபரிக்கிறார் Maj.Gen. கமால் குணரட்ண

வெற்றிக்களிப்புடனும் பதட்டத்துடனும் இருந்த …படையியினர் தாக்குதலை 45 நிமிடங்களுக்குள்ளாகவே முறியடித்திருந்தனர். இருந்தாலும் வேறு ஒரு திசையில் இருந்து மற்றுமொரு தாக்குதல் எம்மீது நடாத்தப்பட்டது. சிறிது நேரத்துக்கள்ளாகவே அந்த தாக்குதல் உக்கிரமான நிலையை எட்டிவிட்டது. பயங்கரவாதிகளின் ஒரு சிறிய அணியினர் விடாமல் தாக்கிக்கொண்டிருந்தனர். இந்த தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் அவர்கள் மறைந்திருந்த அந்த இடத்தின் மீது தரைப்படையினரை தாக்குதலில் ஈடுபடுத்த வேண்டும் என நான் புரிந்துகொண்டேன்.

(“சுற்றிவளைக்கப்பட்ட பிரபாகரன் கொல்லப்பட்ட இறுதிச்சமரை விபரிக்கிறார் Maj.Gen. கமால் குணரட்ண” தொடர்ந்து வாசிக்க…)

கனடாவில் ‘வேட்கை’ புத்தக வெளியீடு… விமர்சனம்…. கலந்துரையாடல்….

மார்கழி ஞாயிறு 2ம் நாள் கனடாவின் ரொரன்ரோ மாநகரின் மண்டபம் ஒன்றில் பிப. 2:30 இல் இருந்து பி.ப 6 மணிவரை நடைபெற்றது. கிழக்கு மாகாண மைந்தரகளினால் ஒழுங்கு செய்யப்பட்டது. சக்கரவர்த்தி கர்ணன் போன்றவர்கள் இந்நிகழ்விற்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தனர். இந்நிகழ்வு தோழர் ஜேம்ஸ் இன் தலமையில் நடைபெற்றது. புத்தக விமர்சகர்களாக வளவன் யோகராசா, ஜீவா, முரளிதரன் நடராசா. பரதன் ஆகியோர் தமது கருத்துக்களைப் பதிவு செய்தனர.; கூட்டத்திற்கு பல்வேறு முன்னாள் விடுதலை அமைப்பு உறுப்பினர்கள் கட்சிப் பிரமுகர்கள், இடதுசாரி செயற்பாடாளர்கள் பொது மக்கள் என சற்று வித்தியாசமான பிரிவினர் கலந்து கொண்டனர். தோழர் ஜேம்ஸ் இன் தலைமையுரையுடன் ஆரம்பித்த இந்த நிகழ்வு பல்வேறு கருத்து பரிமாற்ற மோதல்களை கொண்டதாக அமைந்திருந்தது. இதில் போராட்ட காலத்தில் இருந்து சம கால அரசியல் என்று சகல விடயங்களையும் புத்தக விமர்சனத்துடன் இணைத்து பேசப்பட்டது நிகழ்வின் சிறப்பு அம்சம். பேச்சாளர்களும் பல்வேறு அரசியல் நிலைபாடுகளைக் கொண்டவர்கள் என்பதுவும் இங்கு கவனத்தில் பார்வையாளர்களால் அறியப்பட்டது. நிகழ்வை குழப்ப முற்பட்டவர்கள் கருத்துகளை சந்திக்க முடியாமல் வெளியேறி சம்பவம் இந்த நிகழ்வின் முக்கிய அம்சம் ஆகும். நிகழ்வின் முழுமையான ஒலிப்பதிவை கீழுள்ள இணைப்பில் காண முடியும்.

கனடா ஸ்கார்புரோவில் பிள்ளையானின் “வேட்கை” நூல் வெளியீடும் கருத்தாடலும்.

Posted by Rahu Rahu Kathiravelu on Sunday, December 3, 2017

சுரேஷ் பிரேமச்சந்திரனும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும்

(அபிமன்யு)
“தமிழரசுக் கட்சியுடன் இனியும் சேர்ந்து இயங்க முடியாது; அவர்கள் சின்னத்தில் போட்டியிட முடியாது” என்று ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மிகவும் காட்டமாகத் தெரிவித்துள்ளார். தனது முடிவிற்குக் காரணமாக “புதிய அரசியல் சாசனம் தொடர்பில் வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி போன்ற விடயங்களில் தமிழரசுக் கட்சி எடுத்த முடிவு தவறானது; அதனால், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க புதிய முன்னணியில், புதிய தலைமை தேவை” என்று கூறியிருக்கின்றார்.

(“சுரேஷ் பிரேமச்சந்திரனும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும்” தொடர்ந்து வாசிக்க…)

கல்யாணம் ஹில்டன் ஹோட்டலில் ,அழித்து முடித்தபின் ஒரு ஆறுதல் வேண்டி

இந்தக் காதலை கவர் பண்ண விஜிதரன் கொலை பின்பு விமலேஸ்வரன் கொலை தொடர்ந்து விஜதரனை விடுவிக்க மக்கள் நடாத்திய போராட்டங்களில் மக்கள் மிரட்டல் இறுதியல் கை குண்டால் கால் உடைபட கந்தன் கருணையில் அடைத்து வைக்கப்பட்டிருந்து மாற்று இயக்கப் போராளிகள் இருவர் தவிர ஏனை 53 பேர் அருணா கோஸ்டியால் கிட்டு விசுவாசத்தால் கொலை. இதனை கோபாலரத்தினம் சமூக விரோதிகளை கொலை செய்ததாக ஈழநாடுபத்திரிகையில் எழுதி பத்திரிகை தர்மத்தை குழி தோண்டிப் புதைப்பு. தொடர்ந்து சூரியத் தேவனிடம் கேடயம் வாங்கி கௌரவிப்பு. இத்தனை மனித விரோதங்கள் இந்த கல்யாண மாலைக்கு பின்னால்…..! இன்று என்னடாவென்றால் மனித உரிமை பற்றி பேசுகின்றார்கள் பேச்சு