அரசியல் நாகரீகம் வெட்கித் தலைகவிழ்ந்த இழிதருணம்.

இதுஎந்தத் துரோகத்திற்குள்ளும் அடங்காது இலங்கை அரசுடன் இணைந்து பிணைந்து செயற்பட்ட விடுதலை அமைப்பு புலிகளே. இதனை இராஜதந்திரம் என்று மட்டும் சொல்லாதீங்கோ இதன் பின்பே தமிழ் அமைச்சர்கள் ‘அவர்’ உடன் இணைந்தனர். இது மகிந்த காலம் வரை தொடர்ந்தது. இன்று அது தமிழ்த் தேசியக் கூட்டடைப்பால் பிரதியீ செய்யப்பட்டுள்ளது இதன் விதிவிலக்காக நிற்பவர்கள் யார் என்பதை மக்கள் அதிகம் அறியார்.

(“அரசியல் நாகரீகம் வெட்கித் தலைகவிழ்ந்த இழிதருணம்.” தொடர்ந்து வாசிக்க…)

மாவீரர் நாள்: கற்க வேண்டிய பாடங்கள்

(கே. சஞ்சயன்)

மாவீரர் நாள் முடிந்து விட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக விசாரணை மிரட்டல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. மாவீரர் நாளுக்கு முன்னதாக அரச தரப்பில் இருந்து அதற்கு எதிரான கருத்துகள் எதுவும் வெளியாகியிருக்கவில்லை. மாவீரர் நாளை அனுஷ்டித்தால், புலிகளை நினைவு கூர்ந்தால், சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னரே எச்சரிக்கைகள் எதுவும் அரச தரப்பிலோ பொலிஸ் தரப்பிலோ வெளியிடப்படவில்லை. ஆனாலும், நிகழ்வுகள் அனைத்தும் முடிந்த பின்னர், புலிகளை நினைவு கூர்ந்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியிருக்கிறார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன.

(“மாவீரர் நாள்: கற்க வேண்டிய பாடங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

உள்ளூராட்சி தேர்தலில் திடீர் திருப்பம்

(மொஹமட் பாதுஷா)
இந்த மழைக்காலத்திலும் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. ஆரம்பத்தில் அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கு பின்வாங்கிய நிலையில், மாகாண சபைத் தேர்தலோ அன்றேல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலோ இப்போதைக்கு நடைபெறாது என்று மக்கள் கருதியிருந்தனர்.

(“உள்ளூராட்சி தேர்தலில் திடீர் திருப்பம்” தொடர்ந்து வாசிக்க…)

யார் இவர்? இவர் இப்போது எங்கே இருக்கிறார்?

இவர் பெயர் கௌரிபால் சாத்திரி. புலிகளின் கண்ணிவெடிப்பிரிவில் (சக்கை) முக்கியஸ்தர்.

விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக நீங்கள் நேரடியாக எத்தனை கொலைகள் செய்துள்ளீர்கள்?

ஏனிந்த கொலை வெறிக் கேள்வி?, நான் எனக்காக எந்தக் கொலையையும் செய்திருக்கவில்லை. நான் செய்த கொலைகள் அனைத்துமே நான் சார்ந்து இயங்கிய அமைப்பிற்காகவே செய்யப்பட்டன. நான் நேரடியாக செய்த கொலைகள் இந்திய அமைதிப் படைக் காலத்தில்தான் நடந்தன. இந்தியப் படைகளிற்கு எங்களை அல்லது நாங்கள் பதுங்கியிருக்கும் இடங்களை. எங்களிற்கு உணவளித்து எம்மை பாதுகாத்தவர்களை காட்டிக் கொடுத்து இந்தியப் படைகளோடு சேர்ந்து இயங்கியவர்களை அழிக்கவேண்டிய தேவை இருந்தது. அப்படி எனது பொறுப்பில் இருந்த கிராமங்களில் பதினைந்து அல்லது பதினாறு பேர் என்னால் நேரடியாக அழிக்கப்பட்டிருக்கலாம். (“யார் இவர்? இவர் இப்போது எங்கே இருக்கிறார்?” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரனுக்கே ஆப்பு

கிளிநொச்சியில் நடக்கும் தகிடுதத்தங்கள்!
(காந்தரூபன் அறிவுச் சோலைக்கு நேர்ந்த கதி)

–     கருணாகரன்

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மகிந்த ராஜபக்ஸதான் தோற்கடித்தார் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கக்கூடும். இல்லையில்லை, இலங்கைப் படைகளே புலிகளைத் தோற்கடித்தன என்று சிலர் சொல்லலாம். சர்வதேச சமூகமே புலிகளைத் தோற்கடித்தது என்று சொல்வோரும் உள்ளனர். இதெல்லாம் உண்மையாக இருக்கலாம்.

(“பிரபாகரனுக்கே ஆப்பு” தொடர்ந்து வாசிக்க…)

மாவீரர் நினைவேந்தலும் “போராளிகளின்” இன்றைய நிலையும் 

தமிழ்தேசத்தின் மீதான ஒடுக்குமுறைக்கெதிராக தமிழ் தேசத்தின் காவலர்களாக மக்களின் உரிமைக்காகப் போராடி மடிந்த அனைத்துப் போராளிகளும் தமிழ் மக்களின் வணக்கத்திற்குரிய தமிழ் தேசிய வீரர்கள். அந்தவகையில் தமிழ் தேசத்தின் தேசிய உரிமைக்கான போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தமிழீழ விடுதலை புலிகளின் படையணி வீரர்களின் நினைவு தினத்தில் அவர்களுக்கு எமது வீரவணக்கத்தை செலுத்துகின்றோம். புலிகள் வழிவந்த போராளிகள் நினைவேந்தல் நிகழ்வாக மாவீரர் தினம் கொண்டாடப் படுகிறது. விடுதலைப் புலிகளில் இருந்து உயிர் நீத்த போராளிகள் உள்ளடங்கலாக தமிழ் தேசத்திற்காக உயிர் கொடுத்த அனைத்து அமைப்புகளையும் சேர்ந்த போராளிகளின் நினைவேந்தலையும் பொது நாள் ஒன்றில் கொண்டாட தமிழ் சமூகம் இன்னும் தன்னை புடம்போட வேண்டிய நிலையிலேயே உள்ளது. (“மாவீரர் நினைவேந்தலும் “போராளிகளின்” இன்றைய நிலையும் ” தொடர்ந்து வாசிக்க…)

பிரித்தானிய அரச குடும்பத்தினரின் காதலுக்கு மரியாதை

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)

மிகப் பிரமாண்டமான வளத்தையும் வசதியையும் கொண்ட பிரித்தானிய இளவரசர் ஹரி,இதுவரை பிரித்தானிய அரச பரம்பரை நினைத்தும் பார்க்காத விதத்தில் தனது திருமணத்தை மேகன் மெர்கில் என்ற அமெரிக்க கலப்பு இனப்பெண்ணுடன் நடத்தப் போகிறார். அவரின் மனைவியாக வரவிருக்கும் மெகனின்; தாய்; ஒருகாலத்தில் பிரித்தானியரால் அடிமைகளாக அமெரிக்காவுக்கு இழுத்துச் செல்லப் பட்ட ஆபிரிக்க கறுப்பு இனப் பரம்பரையைச் சேர்ந்தவர்.தகப்பன் ஒரு வெள்ளையர்- ஐரிஸ்,டச் கலப்புடையவர்.

(“பிரித்தானிய அரச குடும்பத்தினரின் காதலுக்கு மரியாதை” தொடர்ந்து வாசிக்க…)

மறக்கமுடியுமா?

எத்தனை வருடம்? எத்தனை மரணங்கள்? ஒரு அழகான தேசத்தின் அமைதியைக் கெடுத்த கொடியவர்கள். மறக்கமுடியுமா? திருநெல்வேலி சந்தியில் தொடங்கிய வெறியாட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றது. முடிக்கப்பட்டது. முப்பது வருடங்களாக எவராலும் எங்கேயும் நிம்மதியாக உறங்கவிடாமல் கெடுத்தவர்களை எப்படி மறப்பது? நாங்கள் மரணிக்கும்வரை அவர்களின் பயங்கர வெறியாட்டங்கள் மறக்கமுடியாது.

(“மறக்கமுடியுமா?” தொடர்ந்து வாசிக்க…)

புதுக்குடியிருப்பு மணல் குளம் (சுவாமி குளம்) காப்பாற்றப்பட வேண்டும்

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் ஏ 35 வீதியின் அருகாமையில் சுமார் பத்து ஏக்கர் பரப்பளவை கொண்டதும் வாகனம் போய்வரக்கூடியதும் சுமார் பத்து அடி உயர முமானஅணைக்கட்டை கொண்ட குளம் மணல் குளம் (சுவாமி குளம்)இன்று அக்குளம் தேய்ந்து குளத்துக்குரிய காணிகள் கபளீகரம் செய்யப்பட்டு அரச அதிகாரிகளால் கவனிக்கப்படாமல் இருப்பது ஆச்சரியத்துக்குரியதொன்று. (“புதுக்குடியிருப்பு மணல் குளம் (சுவாமி குளம்) காப்பாற்றப்பட வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

வரதராஜபெருமாள் 

எனக்கு இவரைப்பற்றி அதிகம் தெரியாது.தகவல்கள் மூலமாகவே அதிகம் அறிந்திருக்கிறேன்.முன்னாள் பொருளாதார விரிவுரையாளரான இவர் வடகிழக்கு மாகாண முதல்வராக பதவி ஏற்றதன்மூலம் உலகறிந்த ஒரு மனிதராக பிரபலம் ஆனவர். இவரின் கீழே எனது சகோதரன் பணியாற்றிய காலங்களில் இவரைப் பற்றி கூறியிருக்கிறார்.நல்ல நிர்வாகி.நல்ல ஆக்கபூர்வமான செயற்பாட்டாளர்.இவரது செயலாளர் தாஜ் சமுத்திராவில் தங்குவார்.இவரோ செவன் ஐலன்ட விடுதியில் இருந்து கொண்டே வடகிழக்கு மாகாண சபையை எப்படி கட்டி எழுப்புவதென்றே யோசித்தவர். (“வரதராஜபெருமாள் ” தொடர்ந்து வாசிக்க…)