லெபனான் தொடக்கம் ஸ்பெயின் வரை ஹொங்கொங் தொடக்கம் பொலிவியா வரை உலகில் எங்கு பார்த்தாலும் ஆர்ப்பாட்டங்கள். நோக்கங்கள் வேறு, கோசங்கள் வேறு, போராட்ட உத்திகள் வேறு என்றாலும் எல்லாவற்றிலும் பொதுவான அம்சங்கள் இல்லாமல் இல்லை.
Category: அரசியல் சமூக ஆய்வு
Political & Sociology Research
அரசியல் அநாதைகளாக காலி மாவட்ட தமிழர்கள்
காலி மாவட்டத்திலுள்ள தமிழ் பாடசாலைகளின் நிலைமை பின்தங்கியுள்ளது. தமிழ்ப் பிள்ளைகள் கற்பதற்கு போதிய தமிழ்ப் பாடசாலைகள் இல்லை. அதனால் பெருமளவு தோட்டப்புற தமிழ்ப் பிள்ளைகள் சிங்கள மொழிப் பாடசாலைகளில் இணைந்து அம்மொழியிலேயே கற்கின்றனர். கணிசமான பிள்ளைகள் முஸ்லிம் பாடசாலைகளில் கற்று வருகின்றனர்
சோவியத் ஒன்றியத்தின் கலைப்பும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒற்றைத்துருவ தருணமும்
தோழர்களை நினைவுகூர்வோம். …….

தோழர் நடேசலிங்கம் EPRLF இல் களப்பலியான முதலாவது தியாகி.தோழர் நடேசலிங்கம் அவர்கள் EPRLF இன் அமைப்பாளர்களில் ஒருவர். 1981 அக்டோபர் 4ம் திகதி முதல் 11 ம் திகதி வரரை தமிழ்நாடு கும்பகோணத்தில் நடைபெற்ற கட்சியின் அமைப்பாளர் மகாநாட்டில் தோழர் நடேசலிங்கம் மத்திய குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர். “தாடிக் கிழவனின் பாதையில் தாகம் எடுத்து நடப்பேன்” என கவிதை எழுதிய தோழர் நடேசலிங்கதின் வாழ்க்கையின் நினைவுகள் எம் நெஞ்சைவிட்டகலாது .
கைகளால் கழிவகற்றுவோருக்கு எப்போதுதான் விடிவுகாலம்?

மற்றொரு மரணம்; பாதாளக் குழியில் இறங்கி கழிவகற்றும்போது விஷவாயு தாக்கி தமிழ்நாட்டில் மற்றொரு மரணம் சமீபத்தில் நிகழ்ந்திருக்கிறது. கழிவுகளை அகற்றும்போதான உயிரிழப்புகளில் முதலிடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. ‘கைகளால் மனிதக் கழிவகற்றுவோர்’ என்ற சொற்றொடர் இந்தியாவில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது என்கிறது இணையம். ஏன் இந்தத் தனிப் பெரும் பெருமை? ஏனென்றால், இந்த மானுட அவலம் சாதியத்தில் வேர்கொண்டிருப்பதால்; சாதியம் இந்து சமூகம் மட்டுமே சுவீகரித்திருக்கும் ஆயிரம் ஆண்டு கால மாண்பு என்பதால்; தீண்டாமை நம் தனித்துவம் என்பதால்! ‘சாதிய சமூகம் தன் பல்லாண்டு கால மாபாதகத்துக்கு மன்னிப்புக் கேட்பதுடன்தான் இத்தகைய முயற்சிகள் தொடங்க வேண்டும்’ என்கிறார் பி.எஸ்.கிருஷ்ணன். இக்கேவலத்திலிருந்து மீட்கப்படுவோரின் மறு வாழ்வுக்காக அவர் முன்வைத்த பரிந்துரைகளுக்கு இன்னும் முகங்கொடுக்கவில்லை. அவற்றை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறேன்.
பொலிவியா: புதிய நிறப்புரட்சிகளுக்கான களம்
அரசியல் படிப்பினைகள்
கியூபா நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத ஆளுமை
தோழர் பத்மநாபாவின் 68வது (19.11.2019) பிறந்த தினம்.
புதிய ஜனாதிபதி: மீண்டும் ஒரு தோல்வி
(இலட்சுமணன்)
இன, மத, மொழி வேறுபாடுகள் அற்ற ஒரு நாட்டை, நாம் இனிமேலும் எதிர்பார்க்கவே கூடாது என்பதற்கான முடிவு ஒன்று, ஞாயிற்றுக்கிழமை கிடைக்கப் பெற்றிருக்கிறது. இதன்மூலம், தமிழர்கள் மீண்டும் ஒரு தோல்வியைத்தழுவிக் கொண்டுள்ளார்கள். இது நிரந்தரமான தோல்வியாகவும் இருக்கலாம்; இலங்கையின் வரலாறு, 70 வருட தமிழர் போராட்ட வரலாற்றையும் உள்ளடக்கியதேயாகும்.