பெண்களின் சட்ட உரிமைகள் செயல்வடிவத்தில் உருப்பெற அனைவரும் ஒத்துழைப்பு நல்குங்கள்! இளையோர் சக்தி அமைப்பு வேண்டுகோள்.

சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடுவதில் அக்கறை செலுத்துமளவு பெண்களினுடைய உரிமைகளுக்கான செயல்வடிவத்தை பெற்றுக் கொடுப்பதில் கருசனைகாட்டப்படுவதில்லை என இளையோர் சக்தி அமைப்பின் தேசிய அமைப்பாளர் தவராசா தர்ஸன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அனுப்பிவைத்துள்ள சர்வதேச மகளிர் தின வாழ்த்துச்செய்தியில் போரின் வடுக்களை சுமந்து அவற்றிலிருந்து மீண்டு எழுவதற்காக ஒவ்வொரு பெண்களும் தன்னை தயார்படுத்தி வரும் நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூகத்தின் உள்ளிருந்தே முன்னெடுக்கப்படுவது மிகுந்த கவலையளித்து வருகிறது.

(“பெண்களின் சட்ட உரிமைகள் செயல்வடிவத்தில் உருப்பெற அனைவரும் ஒத்துழைப்பு நல்குங்கள்! இளையோர் சக்தி அமைப்பு வேண்டுகோள்.” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி19)

எமது போராளிகளின் வழக்கு நமக்கு சாதகமாக முடிந்தபின் மாணிக்கம் ராசன் கிளிநொச்சிக்கும்,சோலையன் செல்லப்பா பளைக்கும் இடம்பெயர்ந்தனர்.சேகரித்த நிதி தொடர்பான விவகாரம் கொஞ்சம் பகை முரண்பாடாக மாறியது.நடராசா தனக்கும் சார்பாக ஆட்பலம் கொண்டிருந்தார். இக் காலகட்டத்தில் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயப் பிரவேசம் உச்சகட்டமான நிலையில் இருந்தது.இது தொடர்பாக மட்டுவில் மோகன்தாஸ் சனசமூக நிலையம், மானாவளை மக்கள் சகல இடத்து மக்களின் ஆதரவுகளை கோரியிருந்தனர்.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி19)” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 18)

நான்,இதைப் பதிவு செய்ய தவறிவிட்டேன்.எமது ஊரில் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் நடைபெற்ற வேளையில் ஆசிரியர் அ.பொ.செல்லையா மட்டுவில் மகா வித்தியாலயத்தில் தமிழக பாணியில்,பாவாடை தாவணி மாணவிகள், அணியவேண்டும் என வற்புறுத்தினார்.அங்கே படிக்கும் மாணவர்கள் வறியவர்கள் எனவே பொருளாதார நெருக்கடியை அவர்களுக்கு கொடுக்கும்.எனவே இது வேண்டாம் என அராலியூர்ந.சுந்தரம்பிள்ளை வாதாட இது பெரும் மோதலுக்கு வழிவகுத்தது.இந்த மோதலில் தமிழரசுக்,கட்சி காடையர்கள் மாணவரகளோடு மோதினர்.இதில் மந்துவில்-மட்டுவில் வடக்கு மாணவர்கள் ஒன்றிணைந்து பலமாக போராடி வென்றனர்.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 18)” தொடர்ந்து வாசிக்க…)

மன நோய் [2] உள்ளமும் உடம்பும்!

றுதிமிக்க மனம்தான் மனிதனின் உண்மைப் பலம். யானையின் பலம் தும்பிக்கையிலே, மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்று, அடுக்கு வசனமாய்ப் பலர் மேடையில் பேசக் கேட்டிருக்கிறேன். பேசுவது சுலபம், செயல்படுத்துவதுதான் கடினம். ஆனாலும், மனம் மட்டும் உறுதியாகிவிட்டால், நாம் நினைத்ததைச் சாதிக்கலாம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. மனதை ‘அகம்’ என்றும் உடம்பைப் ‘புறம்’ என்றும், நம் இலக்கியங்கள் பேசுகின்றன. அத்திவாரத்தின் பலம் தான் கட்டிடத்தின் பலம். அகம்தான் புறத்தின் வலிமையை உறுதி செய்கிறது. அதனாற்றான், உள்ளத்தனைய உயர்வு என்கிறார் வள்ளுவர். இன்று பலரும் உடம்பைப் பற்றிக் கவலைப் படுகின்றனரே தவிர, உள்ளத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை ஆண்கள் உடலை உறுதிசெய்ய நினைந்து, ‘ஜிம்’களில் குவிகின்றனர்.

(“மன நோய் [2] உள்ளமும் உடம்பும்!” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 17)

1965 பொதுத் தேர்தலின் பின் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சன்னியர் செல்லையாவுக்கு எதிராக வெள்ளையன் சின்னதம்பி என்பவர் எமது வட்டாரத்தில் களத்தில் இறக்கப்பட்டார்.இவர் மிகவும் சரச்சைக்குரியவர்.சின்னதுரையின் தங்கையின் கணவர்.நடராசாவின் மைத்துனரின் மாமனார் .இத்தேர்தலில் செல்லையா தோற்கடிக்கப்பட்டார் .அவரால் இயக்கப்பட்ட வெல்ல தொழிற்சாலை செயலிழந்தது.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 17)” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி16)

எமது ஊரில் 1921 இல் றோ.க.பாடசாலை சுவாமி ஞானப்பிரகாசர் என்பவரால் உருவாக்கப்பட்டது.ஆனாலும் மதம் மாற விரும்பாத காரணங்களால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை .நீண்ட காலங்களுக்கு பின் நடராசா,சின்னத்தம்பி,சிங்கபாகு ஆகிய மூவரும் மட்டுவில் மகாவித்தியாலயத்தில் உயர்தர கல்வி படிக்க புறப்பட்டனர்.நடராசா 9 வது வகுப்புடன் நிறுத்திவிட்டார்.பின்னர் சில காலத்தின்பின் சங்கத்தானையில் படித்தார்.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி16)” தொடர்ந்து வாசிக்க…)

ஐரோப்பிய ஒன்றியம்: கேள்விக்குறியான எதிர்காலம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

எதிர்காலம் எதிர்வுகூறவியலாதது. நிகழ்காலம் நிச்சயமற்றது. இறந்தகாலம் மீளாது. இம் மூன்று காலங்கட்குமிடையான உறவும் முரணுமே நிகழ்வுகள் யாவையும் தீர்மானிக்கின்றன. நடந்தவை நடப்பவற்றுக்குத் தளமிடுகின்றன. நடப்பது நடக்கவுள்ளதன் திசைவழியின் வரைபடத்தை நடந்ததின் உதவியுடன் வரைகிறது. கடந்த இரு வாரங்களாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வெளிப்படையாகத் தம்முள் கொள்கையளவில் முரண்பட்டிருப்பதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்புப் பற்றி ஐயம் வெளியிட்டிருப்பதும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளார்ந்த நெருக்கடிகளை இன்னொரு முறை பொதுவெளிக்குக் கொணர்ந்துள்ளன.

(“ஐரோப்பிய ஒன்றியம்: கேள்விக்குறியான எதிர்காலம்” தொடர்ந்து வாசிக்க…)

மகிந்தரை வருத்திக் கொண்டிருப்பது எது?

நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பலன் கிடைக்கும். அது பாவச் செயலாக இருந்தாலும் சரி நல்ல செயலாக இருந்தாலும் சரி ஏதோ ஒருவகையில் அதற்கான பெறுபேறு கிடைக்கும். இலங்கை நாட்டின் அரசியல் வரலாற்றில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒருவகையில் செய்(த)வினை செய்தவர்களாகவே இருக்கின்றார்கள். இந்த நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு கிடைக்க கூடிய அதிகாரங்களை கிடைக்க விடாமல் செய்வதற்கு அவர்கள் பட்டபாடுகள் கொஞ்சமல்ல,எந்த வகையில் எல்லாம் அரசியல் தீர்வு கிடைக்க கூடாது என்று நினைத்தார்களோ அதை எல்லாம் இழுத்து மூடினார்கள். இதன் விளைவு தான் முப்பது ஆண்டுகால ஆயுத போராட்டம். அதுவும் இறுதியில் இரத்த ஆற்றோடு முடிவுக்கு வந்தது.

(“மகிந்தரை வருத்திக் கொண்டிருப்பது எது?” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்- மந்துவில்(பகுதி 15 )

அச்சுவேலியில் ஏற்பட்ட சம்பவத்தில் அரியரத்தினம் கொல்லப்பட்டார். இது தொடர்பாக யாரும் எந்த தகவலும் பொலிசாருக்கு கொடுக்கவில்லை.உண்மை விபரங்களை வெளியிடவும் இல்லை.எனக்குத் தெரிந்த விசயங்களை பகிரவிரும்பவில்லை.இறப்பதற்கு முதல்நாள் எங்கள் வீட்டுக்கு வந்து தன் தோட்டத்துக்கு பனை ஓலை வாங்கிக்கொண்டு போனார். மறுநாள் இந்த தகவல் கிடைத்தது.அவர் பிரபாகரன் பாணியில் செயற்பட முனைந்தார்.புரிந்தவரகள் விளங்கிக் கொள்ளவும்.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்- மந்துவில்(பகுதி 15 )” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்- மந்துவில்(பகுதி 14)

வேலாயதம் வளவு கொலையைத் தொடர்ந்து மீளவும் அவர்கள் தமது ஊர் மீது தாக்குதல் நடாத்தினால் இம்முறை கைக்குண்டை வீசலாம் என தீர்மானித்து கைக்குண்டை தேடிப்போக சில நாட்களுக்குள்ளேயே அதை சுற்றி புற்று கிளம்பிவிட்டது.அதை எடுக்க முடியவில்லை .ஒரு குண்டு கொஞ்சம் தெரியவே அதை துப்பாக்கியால் சுட்டு வெடிக்க வைக்கப்பட்டது.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்- மந்துவில்(பகுதி 14)” தொடர்ந்து வாசிக்க…)