என்னை நல் ஆசான் ஆக்கிய ஆசான்களை வணங்கி நிற்கின்றேன்

என்னை நல் மாணாக்கனாக்கிய ஆசிரியர் அனைவருக்கும் ஆசிரியர் தினத்தில் மீண்டும் எனது மரியாதை கலந்த வணக்கங்கள். அருவரியில் ஆரம்பித்து பல்கலைக் கழகம் வரையும் மரத்தடி விளையாட்டுத்திடலில் ஆரம்பித்து மக்களின் விடுதலைக்காகான பொதுவாழ்வில் பயணத்தை மேற்கொள்வதற்கு எனக்கு பல்வேறு ஆசிரியர்களின் வழிகாட்டல் பேருதவியாக இருந்தது. என்னைப் பெற்றெடுத்த என் தந்தையர் எனது இன்று வரையிலானான மாசீக குரு. அவர் தனது காலத்தில் கல்வி கற்றது வெறும் 3ம் வகுப்பு என்றாலும் இன்று சபையில் நான் தலை நிமிர்ந்து நடப்பதற்கான நேர்மை, நீதி, ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்து இவர் வகுத்துக் கொடுத்த வாழ்கைப் பாதை தான் முதல் காரணமாக அமைகின்றது. இதனைத் தொடர்ந்து அவையத்து முன்னிருக்க எனது குஞ்சியப்பு மாமா போன்றவர்கள் பேருதவியாக செயற்பட்டனர். இதில் தான் ஈற்றெடுக்காவிட்டாலும் தனது இரத்தம் என்று எனக்கு வழிகாட்டியாக நின்ற அந்த குஞ்சப்புவையும் மாமாவையும் நான் அடிக்கடி நினைவில் நிறுத்துவதுண்டு.

(“என்னை நல் ஆசான் ஆக்கிய ஆசான்களை வணங்கி நிற்கின்றேன்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழகத்தில் இலங்கை அகதிகளும்,நாடுதிரும்புதலும் பாகம்-2

(தோழர்ஸ்ரனிஸ்)
தமிழகத்தில் முகாம்களில் உள்ள அகதிகளுக்கு தமிழக அரசின் நியாயவிலைகக்டை மூலம் அரிசி, மண்ணெண்ணை, சீனி, பருப்பு, பாமாயில் என்பன வழங்கப்படுகிறது.அத்துடன் மாதாந்தக் கொடுப்பனவும் வழங்கப்படுகிறது. மாதக் கொடுப்பனவாக ஒரு குடுப்பத்தின் தலைவருக்கு ரூ.1000,12வயதுக்கு மேல் ரூ.750,12வயதுக்குக் கீழ் ரூ.450 வழங்கப்படுவதுடன் அரிசி மாதமொன்றுக்கு 08 வயதுக்கு மேல் 12கிலோ,08வயதுக்கு கீழ் 6கிலோ.2கிலோ அரிசி 55 சதத்திற்கே வழங்கப்படுகிறது. மண்ணெண்ணெய் ஒரு குடுப்ப அட்டைக்கு 3லிட்டர்,சீனி 2கிலோ என்பனவும் வழங்கப்படுகிறது.

(“தமிழகத்தில் இலங்கை அகதிகளும்,நாடுதிரும்புதலும் பாகம்-2” தொடர்ந்து வாசிக்க…)

நடுவுக்கு நகருமா நடுவப் பணிமனை?

(காரை துர்க்கா)
இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நெருக்கடி நிலை, பலதசாப்தங்கள் கழிந்தும், தொடர்ச்சியாக அதே கொதிநிலையில் உள்ளது. ஆட்சியாளர்களும் கடந்த கால வரலாற்றை படிப்பினையாகக் கொண்டு, எதிர்கால சந்ததியினருக்காகச் சிறந்த தேசத்தை உருவாக்க, நிகழ்காலத்தில் விருப்பமின்றியே உள்ளனர், என்பதையே நடப்பு நிகழ்வுகள் எடுத்து உரைக்கின்றன.  இனப்பிரச்சினைக்குப் பல்வேறு காலங்களிலும் பல தரப்பாலும் பல தீர்வுத் திட்டங்கள் முன் மொழியப்பட்ட போதும், அவை அனைத்தும் தோல்வியைத் தழுவியதே நாம் அனைவரும் கடந்து வந்த கசப்பான வரலாறு ஆகும்.

(“நடுவுக்கு நகருமா நடுவப் பணிமனை?” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையின் பூர்வகுடிகள் 

(விஜய்)

இலங்கைப் பௌத்த சிங்களவரினதும் இலங்கைத் தமிழரினதும்; புராதன வரலாற்றைக் கூறும் நூல்களில், இலங்கையின் பூர்வ குடிகள் பற்றிக் கூறப்பட்டுள்ள கருத்துக்களை தொகுத்து முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

(“இலங்கையின் பூர்வகுடிகள் ” தொடர்ந்து வாசிக்க…)

தமிழகத்தில் இலங்கை அகதிகளும் நாடு திரும்புதலும். (பாகம் 1)

(தோழர் ஸ்ரனிஸ்)

இலங்கையில் ஏற்பட்ட இனப்பிரச்சினையின் காரணமாக அங்கிருந்து அகதிகளாக 1983 தொடக்கம் 2009 வரை தமிழகத்தில் தஞ்சம் அடைந்து தமிழகத்தில் உள்ள 107 முகாம்களில் 62445 பேரும் வெளியில் 32231 பேரும் வாழ்ந்து வருகிறார்கள்.  தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் நாகபட்டினம், நீலகிரி, திருவாதவூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் நீங்களாக மற்றய மாவட்டங்களில் அகதிகள் முகாம்கள் அமைந்துள்ளது. இதில் செய்யாறு, திருச்சி கொட்டப்பட்டு(கொட்டப்பட்டு சிறைச்சாலையுடன்) விசேட முகாம்களும் உள்ளன.

(“தமிழகத்தில் இலங்கை அகதிகளும் நாடு திரும்புதலும். (பாகம் 1)” தொடர்ந்து வாசிக்க…)

முதலமைச்சர் இல்லாமல் போய் விடவேண்டும் என்று சந்தோசப்படுகின்ற சமூகத்தைப் பார்த்து தான் வெட்கப்படுகின்றேன்

கிழக்கு மாகாண சபையில், முஸ்லிம் முதலமைச்சர் இல்லாமல் போய் விடவேண்டும் என்று சந்தோசப்படுகின்ற சமூகத்தைப் பார்த்து தான் வெட்கப்படுகின்றேன் என்று, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.   மட்டக்களப்பில் உள்ள அவருடைய காரியாலயத்தில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“முதலமைச்சர் இல்லாமல் போய் விடவேண்டும் என்று சந்தோசப்படுகின்ற சமூகத்தைப் பார்த்து தான் வெட்கப்படுகின்றேன்” தொடர்ந்து வாசிக்க…)

சரத் பொன்சேகா சொல்வது உண்மை தானா?

(கே. சஞ்சயன்)
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், அமெரிக்கா செல்வதற்கு தாம் விண்ணப்பித்த போது, வீசா வழங்க அமெரிக்கா மறுத்து விட்டதாக, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல், உண்மையானது தானா என்ற சர்ச்சைகள் உருவாகியிருக்கின்றன. ஜனாதிபதியின் குழுவில், ஐ.நா செல்வதற்கு விண்ணப்பித்திருந்தவர்களில் தனக்கு மாத்திரம், வீசா வழங்கப்படவில்லை என்றும், போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உரிய தீர்வு காணப்படாததே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறியிருந்தார்.

(“சரத் பொன்சேகா சொல்வது உண்மை தானா?” தொடர்ந்து வாசிக்க…)

‘மூலதனம்’ – 150 ஆண்டுகள்: உலகை புரட்டிய புத்தகம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உலகத்தில் ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் மிகச் சிலவே காலம் கடந்தும் நிலைக்கின்றன. அதிலும் வெகுசிலவே பலரால் அறியப்படுகின்றன. வரலாறு தன் கொடுங்கரங்களால், எத்தனையோ நூல்களை அறியப்படாமல் ஆக்கியிருக்கிறது. திட்டமிட்ட பரப்புரைகளும் விஷமத்தனங்களும் பல நூல்களை, மக்களின் வாசிப்புக்கே எட்டாமல் செய்திருக்கின்றன. (“‘மூலதனம்’ – 150 ஆண்டுகள்: உலகை புரட்டிய புத்தகம்” தொடர்ந்து வாசிக்க…)

இன விரோதம் அற்ற அமைதி பூங்காவாக அம்பாறை மாவட்டம் மலர்தல் வேண்டும்!

– நாபீர் பவுண்டேசன் தலைவர் அபிலாசை –
எஸ். அஷ்ரப்கான்
இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதம் என்கிற உயரிய பூட்கையை முன்னிறுத்தி மக்கள் அரசியல் செய்ய கூடிய அரசியல் தலைமைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று நாபீர் பவுண்டேசனின் தலைவரும், அரசியல் விமர்சகருமான பொறியியலாளர் நாபீர் உதுமான்கண்டு தெரிவித்து உள்ளார்.
இவர் இது தொடர்பாக விடுத்து உள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளவை வருமாறு:-

(“இன விரோதம் அற்ற அமைதி பூங்காவாக அம்பாறை மாவட்டம் மலர்தல் வேண்டும்!” தொடர்ந்து வாசிக்க…)

எங்கள் முதுசொம்– அதிபர் பிரின்ஸ் காசிநாதர்

1985 தமிழ் முஸ்லிம் இனச்சங்காரம் அரங்கேறிய சித்திரை மாதத்தின் ஒரு பகற்பொழுதில் நான் இந்த மாமனிதரை எனது மதிப்புக்குரிய ஆசான் திரு. சண்முகநாதன் (கற்குடா) ஐயா அவர்களின் வீட்டில்தான் சந்திக்கிறேன். அன்றிலிருந்து இன்று வரை இவருடனான நட்பும் நெருக்கமும் தொடர்கின்றன.

(“எங்கள் முதுசொம்– அதிபர் பிரின்ஸ் காசிநாதர்” தொடர்ந்து வாசிக்க…)