பொய்மை இருளில்

சகோதரப் படுகொலைகள் தொடர்பாகவோ அல்லது சகோதர சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாகவோ பேசப்படுவதை இற்றைவரை விரும்பாதவர்கள்,முகம் சுழிப்பவர்கள் பலர் தம்மை இற்றை வரை தம்மை மார்க்சியர்கள் என்றும் முற்போக்காளர்கள் என்றும் காட்டிக் கொள்ள முனைகிறார்கள்.
உண்மையில் இவர்கள் நவ பாசிச சாயல் கொண்டவர்கள்.
தேச- இன- குடாநாட்டு -வட்டார குழு அடையாளங்களுக்குள் தம்மை மூழ்கடித்தவர்கள் மார்க்சியர்களாகவோ முற்போக்காளர்களாகவோ சராசரி ஜனநாயக வாதிகளனாகவோ கருதமுடியாது.
இன்று ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறிசபாரட்ணம் படுகொலை செய்யப்பட்ட தினம். (“பொய்மை இருளில்” தொடர்ந்து வாசிக்க…)

அமைதிபடையினை அவமானமாக திருப்பி அனுப்பியதன் பலனே முள்ளிவாய்க்காலில் உலகிற்கு தெரிந்தது.

அமைதிபடை அட்டகாசம் தெரியாமல் பேசுகிறாய் என்கின்றனர் சிலர்.
அமைதிபடைக்கு முன்பே ஜேவிபி கிளர்ச்சியும் அதனை அடக்க இந்திய ராணுவம் கொழும்பிற்கு சென்றதும் இவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ? தெரியாவிட்டால் விட்டுவிடலாம். அதாவது அன்றிலிருதே இன்னொரு மூன்றாம் நாடு இலங்கையில் தலையிடுவதை இந்தியா அனுமதிப்பதில்லை. ஈழ போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் இந்தியாவினை ஒதுக்கிதான் வைத்தார், போராளிகளுக்கு பயிற்சிகள் தொடங்கிய காலத்திலும் வேண்டா வெறுப்பாக இறுதியில் வந்து சம்பிரதாயத்திற்குதான் கலந்து கொண்டனர் புலிகள். அவ்வப்போது இந்தியாவுடன் மோதும் சூழ்நிலை வரலாம் என்று எதிர்பார்த்தேதான் இருந்தார்.

(“அமைதிபடையினை அவமானமாக திருப்பி அனுப்பியதன் பலனே முள்ளிவாய்க்காலில் உலகிற்கு தெரிந்தது.” தொடர்ந்து வாசிக்க…)

உதவி ஆசிரியர்களுக்கு உயர்த்தப்பட்டதாக சொல்லப்பட்ட ரூபா 10000 தொடர்ந்தும் வெறும் வாக்குறுதியாகவே உள்ளது – மக்கள் ஆசிரியர் சங்கம்

ஆசிரிய உதவியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 6,000 ரூபா கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் அது உடனடியாக அமுலுக்கு வரும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டிருந்தார். எனவே, இம்மாதமேனும் தங்களின் மாதாந்த கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருக்கும் என எண்ணிய ஆசிரிய உதவியாளர்களுக்கு வழமை போலவே ஏமாற்றமே மிஞ்சியது. இம்மாதம் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக நாங்கள் சில வலய கல்விக் காரியாலய கணக்காளர்களிடம் கேட்டபோது கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பாக தங்களுக்கு எந்தவித சுற்றறிக்கையும் வரவில்லை எனவும், ஏற்கனவே வழங்கப்பட்ட 6,000 ரூபா கொடுப்பனவே இம்மாதமும் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.

(“உதவி ஆசிரியர்களுக்கு உயர்த்தப்பட்டதாக சொல்லப்பட்ட ரூபா 10000 தொடர்ந்தும் வெறும் வாக்குறுதியாகவே உள்ளது – மக்கள் ஆசிரியர் சங்கம்” தொடர்ந்து வாசிக்க…)

மே 18 (பகுதி 3)

(அருண் நடேசன்)

ஆக மிக மோசமான ஒரு நிலை உருவானது. இதே வேளை படையினரின் முன்னேற்றம் தீவிரமடைந்து கொண்டேயிருந்தது. புலிகள் சேர்த்த பிள்ளைகள் (போராளிகள்) தொகை தொகையாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். ஊர்கள், தெருக்கள் எல்லாம் சாவை அறிவிக்கும் தோரணங்களாலும் சவ ஊர்வலங்களாலும் திணறின. மாவீரர் துயிலும் இல்லம் என்ற கல்லறை மயானங்கள் எல்லை கடந்து பெருத்தபடியே இருந்தன. சாவு ஒன்றுதான் நிச்சயமானதாக இருந்தது. சனங்கள் திகிலடைந்தனர். யுத்தம் மெல்ல மெல்லத் தீவிரமடைய இயல்பு வாழ்க்கை சிதைவடைந்தது.

(“மே 18 (பகுதி 3)” தொடர்ந்து வாசிக்க…)

நமக்கு இராஜதந்திரம் போதாது!

ஐயோ எங்களை காப்பாற்றுங்கள், சிங்களவன் எங்களை கொல்கிறான் என குடாநாட்டில் இருந்து ராஜிவை நோக்கி கூக்குரல் எழுப்பினோம். ஊரடங்கு சட்டம் போட்டு எங்களை பட்டினி போட்டு ஆமியை விட்டு எங்களை சாகடிக்கின்றான். உடனேயே தலையிட்டு அதனை நிறுத்துங்கள் என இரவு பகலாக யாழ் குடாநாடு ஓலமிட்டது. கிட்டத்தட்ட முள்ளிவாய்க்கால் அபயக்குரல்தான் அன்று ஒழித்ததும். எம்ஜிஆரின் தொப்புழ்கொடி தமிழகமும் ராஜிவை யாழ்ப்பாணத்துக்கு உதவுமாறு அந்த மனிதரின் பிறைவேட் டைமில் கூட நெருக்கடி கொடுத்தது.

(“நமக்கு இராஜதந்திரம் போதாது!” தொடர்ந்து வாசிக்க…)

தாங்கொணாத் துயரம்

(தொகுப்பாளர் சதாசிவம் ஜீவாகரன்)

விடுதலைப்புலிகளை நம்பி, பிரபாகரனைத் ‘தம்பி’என வாய் நிரம்பச் சொல்லியபடி அவர்களால் கொலைசெய்யப்பட்டு உயிர் துறந்தவர்களில் எதிர்கட்சித்தலைர் அமிர்தலிங்கம், பத்மநாபா நான் அறிந்தவர்களில் முக்கியமானவர்கள். அதற்கு மாறாக நான் பழகியவர்களில் பல காலமாக பிரபாகரனை சரியாகப் புரிந்து இருந்தவர்களில், முன்னாள் வட- கிழக்கு மாகாண முதல்வர் வரதராஜப்பெருமாள் என். எல். எவ். ரி மற்றும் பிஎல். எவ். ரி யில் இருந்து, தற்பொழுது கனடாவில் வசிக்கும் மனேரஞ்சன், முன்றாவது தாயகம் ஆசிரியர் ஜோர்ஜ் குருசேவ் என்பவர்களாகும். வரதராஜப்பெருமாள் நாங்கள் அறியாக்காலத்திலே அரசியலுக்கு வந்து சிறை சென்றதுடன் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.அதேபோல் மனோரஞ்சன் யாழ்பாணத்தின் புழுதிபடியாதமேனியர். கண்டியில் மூவினங்களோடு படித்து வளர்ந்தவர். ஜோர்ச் குருசேவ் மட்டும் யாழ்பாணத்துச்சாதி, மத, மற்றும் குறிச்சி என்ற குறுநில மன்னவர்கள் மனப்பான்மையை மீறி உருவாகிய ஒரு சுயம்புலிங்கம்.

(“தாங்கொணாத் துயரம்” தொடர்ந்து வாசிக்க…)

உறவுகள் பகிரங்கமாக நினைவுகூர முடிந்ததா….?

கடந்த 30 வருடங்களில் துரோகிகளாக கொல்லப்பட்ட பல்லாயிரம் பேரை அவர்களின் உறவுகள் தான் பகிரங்கமாக நினைவுகூர முடிந்ததா. எங்காவது அவர்களுக்கு நினவுச் சின்னம் தான் அமைக்க முடிந்ததா. சொரணையற்றவர்கள் வெட்கமற்றாவர்கள் நாடக பாணியில் மனித உரிமை பேசுகிறார்களாம் மனித உரிமை. முள்ளி வாய்க்காலில் இருந்து ஜெனிவா வரை. உச்சுக்கொட்டி மாய்மாலக்கண்ணீர் வேறு. விடுதலையின் பேரில் துரோகிகள் நாமத்துடனும் விடுதலை வீரர்கள் நாமத்துடனும் கொல்லப்பட்டவர்களையும் அநியாயமாக அப்பாவிகளாக உயிரிழந்த கொல்லப்பட்ட அனைத்து தரப்புமக்களையும் எம்மால் தீங்கிளைக்கப்பட்ட சக சமூகங்களின் பேரிழப்புக்களையும் படுகொலை செய்யப்பட்ட எமது- மற்றும் அண்டை நாட்டு தலைவர்களையும் அனைத்து கல்வியாளர்கள் எழுத்தாளர்கள் ஒன்றாக நினைவுகூர முடியுமா. பாரதூரமான அழிச்சாட்டியங்கள் அட்டூழியங்கள் எமது சமூகத்தில் நிகழ்ந்திருக்கின்றன என்று எம்மால் ஒப்புக்கொள்ளத்தான் முடியுமா? ஒரு சுயவிசாரணையை நடத்த முடியுமா? நாம் மனந்திறக்காதவரை விமோசனம் இல்லை. இல்லவே இல்லை.

(Comrade Sugu)

மே 18 (பகுதி 2) 

(அருண் நடேசன்)

போர் தொடங்கியவுடன் புலிகள் முதலில் செய்த வேலை கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதுதான். பால், வயது வேறுபாடு இல்லாமல் எல்லாக் குடும்பங்களில் இருந்தும் போருக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்திப் பிள்ளைகளைப் பிடித்துச் சென்றனர். அப்போது இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வன்னியில் இருந்தது. ஐ.நா. உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் பலவும் வன்னியிலிருந்தன. புலிகளின் ஊடகங்கள் கட்டாய ஆள் சேர்ப்பை வலியுறுத்தியும் அதை நியாயப்படுத்தியும் பரப்புரை செய்தன. இவை எதைப்பற்றியும் இந்தச் சர்வ தேச அமைப்புகளும் பிரதிநிதிகளும் எந்தவகையான அபிப்பிராயமும் சொல்லவில்லை. அவை இதில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்தன. புலிகள் இதைத் தமக்கான வசதியாகக் கருதி மெல்லமெல்ல தமது பிடியை இறுக்கி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினர்.

சிறிலங்கா ராணுவம் மன்னார் மாவட்டத்திலிருந்து போரைத் தீவிரப்படுத்தி மெல்லமெல்ல வன்னி மையத்தை நோக்கி நகரத் தொடங்க, புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு மிகத் தீவிரமடையத் தொடங்கியது. ஏற்கனவே கிழக்கையும் அதன் தலைமைக்குரிய கருணாவையும் புலிகள் இழந்ததையும் நினைவிற் கொள்க.
புலிகள் எதிர்பார்த்திராத அளவுக்கு சிறிலங்கா இராணுவத்தின் நடவடிக்கைகள் அமைந்தன. மரபு வழியில் படைக் கட்டமைப்பையும் அதே வகையிலான தாக்குதல் மற்றும் படை நடவடிக்கைகளையும் குலையவிடக் கூடாது என்ற கவனத்தோடு புலிகள் செயல்பட்டனர். ஆனால் சிறிலங்கா ராணுவமோ மரபுவழி ராணுவமாக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதும் அதன் ஒரு பிரதான அம்சமாக ஒரு முக்கிய அலகு கெரில்லா போர்முறையைப் பின்பற்றிப் புலிகளின் மீது நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

புலிகளை நிலைகுலைய வைக்கும் தாக்குதல்களை சிறிலங்கா ராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகள் மிகக் கச்சிதமாக நடத்தின. இந்தத் தாக்குதல்களில் புலிகளின் முக்கியத் தளபதிகள் பலரும் கொல்லப்பட்டனர். இவ்வாறான ஒரு தாக்குதலின்போது புலிகளின் கொழும்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சார்ள்ஸ் என்பவர் (கேனல் சார்ள்ஸ்) மூன்று உதவியாளர்களுடன் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வன்னியின் புவியியல் அமைப்பு (காடும் ஆறுகளும் பெருங்குளங்களும்) இராணுவத்துக்கு வாய்ப்பாகியது. புலிகள் தமது திறன் வாய்ந்த கெரில்லாப் போர்முறையை முழுதாகக் கைவிட்டு முற்று முழுதாக மரபுவழிப் போர்முறையைக் கையாண்டனர். இதே வேளை புலிகளின் கடல்வழி ஆயுத வருகையை-விநியோகத்தை, சிறிலங்கா விமானப் படையும் கடற்படையும் இணைந்து முழுமையாகத் தடுத்திருந்தன. புலிகளின் நான்கு ஆயுதக் கப்பல்கள் கடலில் தாக்கி அழிக்கப்பட்டிருந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது. இதன் பின்னணியில் இந்தியாவும் அமெரிக்காவும் இருந்ததாக நம்பப்படுகிறது.

முக்கியமாக நான்காம் கட்ட ஈழப்போர் என்று வர்ணிக்கப்படும் இந்தக் காலகட்டப் போரில் புலிகளின் கடற்படை அல்லது கடற்புலிகளின் பலம் முற்றாகச் சிதைக்கப்பட்டது. அத்துடன் புலனாய்வுத் துறையும் அவர்களின் கரும்புலிகளின் அணியும் செயலற்ற நிலமைக்குத் தள்ளப்பட்டன. கொழும்பு நடவடிக்கைகளுக்கு இடமளிக்காமல் சிறிலங்கா அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டன. தவிர வன்னிக்கு வெளியே யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்கிளப்பு, அம்பாறை மாவட்டங்களின் சிறு அளவிலான ராணுவ நடவடிக்கைகளையோ அரசியல் செயல்பாடுகளையோ மேற்கொள்ள முடியாதவாறு சிறிலங்கா அரசின் புலனாய்வு நடவடிக்கைகளும் இறுக்கமும் இருந்தன. அத்துடன் கேனல் கருணா என்ற விநாயக மூர்த்தி முரளிதரனின் பிரிவோடு கிழக்கில் புலிகளின் ஆதிக்கமும் அதன் வழியான எல்லா வளங்களும் பாதிக்கப்பட்டன. குறிப்பாகப் புலிகளின் போருக்குக் கிழக்கு இளைஞர்கள் பெரும் பலமாக இருந்தனர். கருணாவின் பிரிவோடு இது தடைப்பட்டது.

இதேவேளை கடலையும் காட்டுப்பகுதியையும் மெல்லமெல்ல தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் சிறிலங்கா ராணுவம் கொண்டுவந்தது. படைத்தரப்பு மன்னாரிலிருந்து நடவடிக்கையை மேற்கொண்டு வன்னி மேற்கின் காட்டுப் பகுதிகளையும் சிறுபட்டணங்களையும் முதலில் கைப்பற்றியது. ராணுவரீதியில் புலிகளின் ஆயுதமும் கவசமும் கடலும் காடுமே. மறுபுறத்தில் மக்கள். படைத்தரப்பின் போர் உத்தியாகக் காட்டையும் கடலையும் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்ததன் மூலம் புலிகளைப் பாதுகாப்பற்ற வெளிக்குள் தள்ளிவிட்டனர். இதனால் புலிகள் சனங்களை அரணாகப் பயன்படுத்தத் தொடங்கினர். புலிகளின் அழிவு என்பது இது போன்ற ஏனைய பல தவறான நடவடிக்கைகள் மூலம் ஏற்கனவே நிகழ்ந்திருந்தாலும் சனங்களைக் கட்டாயப்படுத்திப் போருக்கு இழுத்ததன் மூலம் மேலும் பாதகமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். சனங்களுக்கும் புலிகளுக்குமான முரண் ஒரு கட்டத்தில் உச்சநிலைக்குப் போய்விட்டது.

கட்டாய ஆள்சேர்ப்பை வலியுறுத்திய புலிகளின் ஊடகங்கள் மறுபக்கத்தில் மக்கள் தாமாக முன்வந்தே போரில் இணைகின்றனர் என்று ஒன்றுக்கொன்று முரணான செய்திகளை வெளியிட்டன. சிறிலங்கா அரசு சர்வதேசத் தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதைப் புலிகள் இன்னும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டனர். வெளியே எந்தச் செய்திகளும் வர மாட்டாது என்பது உறுதியானவுடன் முழு அட்டகாசமாகத் தமது நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டனர். புலிகளின் மூத்த உறுப்பினர்கள் கட்டாய ஆள் பிடிப்பை வலியுறுத்திப் பேசியும் எழுதியும் வந்தனர். இந்த ஆள் சேர்ப்புக்கு (இதை வன்னி மக்கள் ‘லபக்’, ‘ஆள்பிடி’, ‘கொள்ளை’ என்ற சங்கேதப் பெயர்களில் குறிப்பிட்டனர்) எதிராகச் செயல்படுவோருக்கு மரண தண்டனை வழங்கலாம் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர். வன்னியிலிருந்து வெளிவந்த புலிகளின் ‘ஈழநாதம்’ பத்திரிகையும் ‘புலிகளின் குரல்’ வானொலியும் விடுதலைப் புலிகள் என்ற கொள்கை விளக்க ஏடும் இது தொடர்பான கட்டுரைகளையும் நிகழ்ச்சிகளையும் வெளிப்படுத்தின.

(தொடரும்….)

முள்ளிவாய்காலில் அரசியல் பேசுவதை தடைபோடும் அக்கா

நேற்று ஆர்ப்பாட்டம் போட்ட அக்கா ஆற்ற ஆள் என்று பாருங்கள்…. அங்க அனந்திய அரசியல் பேசவிட்டுட்டு இங்குவந்து சொல்லுறா யாரும் அரசியல் பேசக்கூடாதாம். இவர்கள்தான் மக்களாம்…முள்ளிவாய்க்காலில் மக்கள் சம்மந்தன் ஐயாவை திட்டித் தீர்தார்களாம்…இது ஊடகங்களின் செய்தி…நீங்களே தீர்மாணியுங்கள் மக்களா அல்லது இந்த மாணம்கெட்ட பிழைப்புகளா என்று….ஜனநாயகம் பற்றி அறிந்திராத அனந்தி போன்றவர்கள் ஜனநாயகத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி ஜனநாயக துஸ்பிரயோகம் செய்வது மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலுக்கே வழிவகுக்கும்…இதை மக்கள் புரிந்துகொள்ள முடியாதவர்கள் அல்ல…

முள்ளிவாய்காலில் பல நிகழ்வுகள்

“போர்க்காலத்திலும் தாங்கள் கைவிடப்பட்டிருந்தோம். இப்போதும் அப்படியான ஒரு நிலைதான் உருவாகியிருக்கு. ஆளாளுக்குப் போட்டி போட்டுக்கொண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தப்பார்க்கினம். கொல்லப்பட்டவைக்கு உண்மையில அஞ்சலி செலுத்திறதெண்டால், எல்லாருமாகக் கூடி, ஒண்டா நிண்டு அதைச் செய்யலாமே! அப்பிடிச் செய்யாமல், ஏனிப்பிடி ஆளுக்கு ஒரு இடமாக நிண்டு கொண்டாடுகினம்? இது எனக்குச் சரியாகப் படேல்ல. எல்லாரும் எங்களுடைய கண்ணீரையும் கவலைகளையும் இழப்புகளையும் தங்கடை அரசியலுக்குப் பயன்படுத்த முயற்சிக்கினம். இதுதான் நடக்குது”. என்று சொல்லிக் கவலைப்பட்டார் முள்ளிவாய்க்கால் பகுதியில் 2009 மே 17 இல் தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் பலி கொடுத்த தந்தையொருவர்.

(“முள்ளிவாய்காலில் பல நிகழ்வுகள்” தொடர்ந்து வாசிக்க…)