வரலாற்றுப் பதிவுகள்:

மரணத்தை கொண்டாடும் மனநிலையை தவிர்ப்போம்! மனித நேயத்தை வளர்போம்!!

(சாகரன்)

கடந்த வாரம் கந்தன் கருணைப் படுகொலை பற்றிய பதிவொன்றை மேற்கொண்டிருந்தேன். இதற்கு கிடைத்த ஆதரவு எதிர்வினைகள் என்னை தொடர்ந்தும் எழுதத் தூண்டியிருக்கின்றது. ஈழவிடுதலை அமைப்புக்களிடையேயான முரண்பாடு நட்பு முரண்பாடே ஒழிய பகை முரண்பாடு அல்ல என்பதை ஏற்றுக்கொண்டதனாலேயே சகோதரப்படுகொலைக்கு எதிரான பாசறையில் தொடர்ந்து பொது வெளியில் வேலை செய்து வருகின்றேன். இதனை இன்றும், இன்னமும் இறுகப் பற்றி வருகின்றேன் ஒரு மனிதனின் உயிர் வாழ்தல் என்ற மனிதாபிமான எதிர்பார்பை பகைவர் புலத்திலும் சீர்தூக்கிப் பார்க்கும் மனப் பக்குவத்தை 40 வருடங்களுக்கு முன்பு மக்களின் வடுதலைக்காக புறப்பட்ட நாட்களிலேயே எனக்குள் வளர்த்துக் கொண்டேன். இது நான் நம்பும், கைகொள்ளும் இடதுசாரி சிந்தனையில் இருந்து உருவானது.

(“வரலாற்றுப் பதிவுகள்:” தொடர்ந்து வாசிக்க…)

உண்மையை அறியுங்கள் உண்மையையே கூறுங்கள்.

அன்புள்ள சுமந்திரன் அவர்களுக்கு,

எனது இச்சிறிய கடிதத்துக்கு மன்னிக்கவும் அன்றேல் இது பல பக்கங்களுக்கு sangary6நீடித்திருக்கும். 1959ம் ஆண்டு கொழும்பு மாநகரசபை வேட்பாளனாக அரசியலில் ஈடுபட்டபோது நீங்கள் பிறந்திருக்கவில்லை. 1991ம் ஆண்டு சட்டத்தரணியாக நீங்கள் சத்தியபிரமாணம் செய்தபோது அத்துறையில் நான் 27 ஆண்டுகளை கடந்துவிட்டேன். நான் ஒரு செல்வந்தன் அல்ல. பெரிய ஒரு குடும்பத்தில் உறுப்பினர் ஆகையால் அன்று எஸ்.எஸ்.சி இன்றைய க.பொ.த(சா.தரம்) வகுப்புக்கு மேல் எனது பெற்றோரால் கல்வியை தர முடியவில்லை. ஓர் ஆரம்ப பாடசாலையில் ஆசிரியனாகவும், பிரத்தியேக வகுப்புக்களை நடாத்தி கிடைத்த வருமானத்திலேயே சொந்த முயற்சியால் சட்டக்கல்லூரியில் கல்வி கற்க முடிந்தது. போதியளவு வருமானம் இன்மையால் அவசிய தேவைகள் பலவற்றைக்கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. எனது அறிவை நூல் நிலையங்கள் மூலமாக பெருக்கிக் கொண்டேனே ஒழிய சட்டப்புத்தகங்கள் ஒன்றையேனும் என்னால் பணம் கொடுத்து பெற்றுக்கொள்ள முடியவில்லை.

(“உண்மையை அறியுங்கள் உண்மையையே கூறுங்கள்.” தொடர்ந்து வாசிக்க…)

பிணங்களுடன் கிடந்து மீண்டேன்

1983 கறுப்பு ஜூலையை ஒத்த “1987 மார்ச் 30 இல் ” கந்தன் கருணை படுகொலை”


இரவுகள் பொதுவாக ஒரே மாதிரித்தான் இருளும் மௌனமும் துயிலும். ஆனால் அன்றைய இரவு 1987 மார்ச் 30ம் திகதிய யாழ்ப்பாணத்து இரவு அப்படி இருக்கவில்லை. அது ஒரு கோர இரவு அது படு கோரமாகத் தமக்கு அமையப் போகின்றது என்பதை உணராமல், நாளாந்தம் கடந்து போகும் சாதாரண இரவு போலக்கருதி மறுநாளைத் தரிசிக்கத் துயில்வதற்காகத் தமது இரவு உணவைப் புசித்து கொண்டிருந்தார்கள்… அவர்கள் புலிகள் இயக்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள்.

(“பிணங்களுடன் கிடந்து மீண்டேன்” தொடர்ந்து வாசிக்க…)

திருச்செல்வம் யாழ்ப்பாணத்தில் முரசொலியில்

(“திருச்செல்வம் யாழ்ப்பாணத்தில் முரசொலியில்” தொடர்ந்து வாசிக்க…)

Canada 150 is a celebration of Indigenous genocide

This year, the federal government plans to spend half a billion dollars on events marking Canada’s 150th anniversary, prompting a great deal of debate about its historical treatment of Indigenous peoples. The majority of Canadians don’t have all the facts about that, while First Nations continue to live the crisis-level effects of that legacy. Perhaps Canada should cancel its celebrations and undertake the hard work necessary to make amends.
(BY PAMELA PALMATER MARCH 29, 2017, NOW)

(“Canada 150 is a celebration of Indigenous genocide” தொடர்ந்து வாசிக்க…)

March 30, 1987

ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் ஓர் கரிய நாள்.  போராளிகளின் இரத்தத்தினால் எழுதப்பட்டு ஈழ விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை கேள்விக்குட்படுத்திய நாள். யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் யாழ். இந்துக் கல்லூரிக்கும் யாழ். மகளிர் கல்லூரிக்கும் இடையே அமைந்திருந்தது ஒரு வீடு. அது பல அறைகளைக் கொண்ட மாடி வீடு. இந்த வீட்டில் 64 ஈழ விடுதலைப் போராளிகள் சிறை வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் அநேகர் ஈ.பி.ஆர்.எல்.எப் போராளிகள்.

(“March 30, 1987” தொடர்ந்து வாசிக்க…)

கோட்டாவும் பொன்சேகாவும் கொலைக் குழுக்களும்

(எம்எஸ்எம் ஐயூப்)

ஐ.நா மனித உரிமைப் பேரிவையின் கூட்டத் தொடர்கள் ஆரம்பிக்கும் போது, உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் பிரிட்டனில் இருந்து இயங்கும் சனல் 4 போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களும் இலங்கையில் அரச படைகளாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமை மீறப்பட்டமையை எடுத்துக் காட்டும் வகையில் பல நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம்.

(“கோட்டாவும் பொன்சேகாவும் கொலைக் குழுக்களும்” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். புலிகளால் பாதிக்கப்பட்ட தமிழன் ஐ.நா வில்.

ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 34 வது மனித உரிமைகள் மாநாட்டில் புலிகளால் பாதிக்கப்பட்ட தமிழன் ஒருவன் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க ஐக்கிய நாடுகள் சபை முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட சம்பவம் வரலாற்றில் முதற்தடவையாக நிறைவேறியுள்ளது. அங்கு பேசிய அவர் நடடைபெற்று முடிந்த யுத்தத்தில் இருதரப்பும் குற்றங்களை புரிந்துள்ளது என்றும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

(“புலிகளின் வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். புலிகளால் பாதிக்கப்பட்ட தமிழன் ஐ.நா வில்.” தொடர்ந்து வாசிக்க…)

பலி ஆடுகள் ஆக்கப்பட்ட தமிழர்கள்

(கே.சஞ்சயன்)

ஆலயத்தில் பலியிடுவதற்காகக் கொண்டு செல்லப்படும் ஆட்டின் தலையில் பூசாரி மஞ்சள் தண்ணீரைத் தெளிப்பார். தண்ணீர் பட்ட சிலிர்ப்பில் ஆடு தலையை ஒருமுறை ஆட்டி அதனை உதற முனையும். அதுதான் ஆடு செய்யும் தவறு. தன்னைப் பலிகொடுப்பதற்கு ஆடு விடை கொடுத்து விட்டதாக யாரோ ஒருவர் கூறுவார். அவ்வளவு தான், அத்தோடு முடிந்தது ஆட்டின் கதை. பலிகொடுப்பதற்குத் தன்னிடம் அனுமதி கேட்பதற்காகத் தான், தன் மீது மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்படுகிறது என்று ஆட்டுக்குத் தெரியாது. அவ்வாறு தெரிந்திருந்தால் ஆடு அதற்கு ஒருபோதும் தலையாட்டியிருக்காது. ஆட்டிடம் கேட்காமலேயே, அதன் ஒப்புதலைப் பெற்றது போலத்தான் இப்போது போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலையும் உள்ளது.

(“பலி ஆடுகள் ஆக்கப்பட்ட தமிழர்கள்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழகத்தில் தமிழீழத்தின் நிலை!

தமிழீழம் குறித்து பேசும் எந்தவொரு தமிழக மேடை பேச்சாள அரசியல்வாதிகளும் திரும்பியே பார்க்காத ஒரு பக்கம்!
தமிழக முகாம்களில் ஈழ அகதிகள் படும் அவலம்! வெளிவராத பல உண்மைகள் அம்பலம்!
தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இந்த 26 வருடங்களில் மூன்று வேளை சாப்பாட்டுக்காக மட்டுமே எங்களுடைய போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது
திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழ் மக்கள் இவ்வாறு தெரிவிக்கின்றனர்.

(“தமிழகத்தில் தமிழீழத்தின் நிலை!” தொடர்ந்து வாசிக்க…)