ஈரோடு அரசு மருத்துவமனை அருகே நோயாளிகளுக்கு ஒரு ரூபாய்க்கு சாப்பாடு: உணவக உரிமையாளரின் உன்னத சேவை

ஈரோடு அரசு மருத்துவமனை அருகே பவர்ஹவுஸ் சாலையில் உள்ள, ‘ஏஎம்வி ஹோம்லி மெஸ்’ முன்பாக காலை, மதியம், மாலை என 3 நேரங்களிலும் வாடிய முகத்துடன் வரும் நோயாளிகளின் உறவினர்கள், மலர்ந்த முகத்துடன் மருத்துவமனைக்குத் திரும்புகின்றனர். ஒருவேளை உணவுக்கு ஒரு ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டு ஏழை நோயாளிகளுக்கு வழங்கப்படும் தரமான உணவுதான் இந்த மலர்ச்சிக்குக் காரணம்.

(“ஈரோடு அரசு மருத்துவமனை அருகே நோயாளிகளுக்கு ஒரு ரூபாய்க்கு சாப்பாடு: உணவக உரிமையாளரின் உன்னத சேவை” தொடர்ந்து வாசிக்க…)

இரோம் ஷர்மிளா ஷானு

2000-ம் ஆண்டு இந்தியாவின் மணிப்பூரில் உள்ள மலோம் என்ற நகரத்தில் பெண்மணி ஒருவர் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார் அப்போது சில ராணுவ வீரர்கள் கையில் துப்பாக்கியுடன் ஓடி வருகின்றனர். பேருந்து நிலையத்தில் நின்ற இளைஞர்களை நோக்கி சராமரியாகச் சுடுகின்றனர். பத்து இளைஞர்களின் உயிரிழந்தனர். அந்த பெண்ணின் கண் முன்னே இந்த சம்பவம் நடக்கிறது.

(“இரோம் ஷர்மிளா ஷானு” தொடர்ந்து வாசிக்க…)

உதிர்கிறதா இரட்டை இலை?

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்தது. ஜானகி அம்மையார் எம்.ஜி.ஆர். மனைவி என்றாலும், எம்.ஜி.ஆருக்குப் பின் அவரைத் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, தோற்கடிக்கப்பட்டார். ஜெயலலிதா 21 தொகுதிகளில் வெற்றிபெற்றார். திமுக ஆட்சியைப் பிடித்தது. கருணாநிதி முதல்வர் ஆனார். இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது.

(“உதிர்கிறதா இரட்டை இலை?” தொடர்ந்து வாசிக்க…)

வியக்க வைத்த உ.பி. தேர்தல் முடிவு!

ஐந்து மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்குப் பொதுத் தேர்தல் நடந்தது. அந்த மாநிலங்கள் அனைத்துக்கும் பொதுவான தேசியப் பிரச்சினை என்று ஏதும் இல்லை. அந்த ஐந்தில் ஒன்று உத்தர பிரதேசம் எனும்போது, இனி 2019 மக்களவைப் பொதுத் தேர்தல் எப்படி இருக்கும் என்ற விவாதம் தொடர்வது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட பெரிய மாநிலம் என்பதுடன் அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது உத்தர பிரதேசம். இங்கு கிடைத்துள்ள வெற்றி பாஜக ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என்ற இருதரப்புக்குமே மலைப்பாக இருக்கிறது.

(“வியக்க வைத்த உ.பி. தேர்தல் முடிவு!” தொடர்ந்து வாசிக்க…)

தலித் முதல்வர் ?

தமிழகத்தின் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் பெரும்பான்மை மக்களை கொண்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஆதுரவு ops தலைமைக்குத்தான் உண்டு என்று பொன்னையா பேட்டியில் சொன்னதிலிருந்தும், சின்னையாவின் அய்யா தலித்குடிதாங்கி என்ற விருதினை பெற எப்படியெல்லாம் நயவஞ்சக நட்புவலை வீசியிருந்தார் என்பதை அறிந்ததிலிருந்தும் , தலித்துகளின் ஓட்டுகள் வெற்றி தோல்வியை தீர்மானிக்க கூடிய சக்தி என்பதை உணர்ந்த கலைஞர் அரசியல் சதுரங்கத்தில் காய்நகர்த்தி சாதித்ததிலிருந்தும்,
32 சதவீத ஓட்டு வங்கியை கொண்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தை MGR ஈர்ப்பை கொண்டு ஏமாற்றிய ஜெயாவின் அரசியல் சூதாட்டத்திலிருந்தும் , தேசிய கட்சிகளான காங்கிரஸ் , பா ஜ க தலித் சமூகத்திற்கு தூண்டில் போட்டால் மட்டுமே அரசியலில் தாக்குபிடிக்க முடியும் என பேசி வருவதிலிந்தும் பார்க்கும்போது “தலித்மக்களே முதல்வரை உருவாக்குபவர்கள்” என்பது அம்மக்களை தவிர எல்லோருக்கும் தெளிவாக தெரிந்தே இருக்கிறது.

(“தலித் முதல்வர் ?” தொடர்ந்து வாசிக்க…)

அல்பிரட் துரையப்பா

1982 இல் தொழிற்பயிற்சிக்காக யாழ் கட்டிட திணைக்களத்தில் சேர்ந்தேன்.அப்போது நாவாந்துறை பகுதில் ஒரு பொது நூலகம் கடும் காற்றினால் சேதமடைந்ததாக தகவல்கள் வந்தன.இதைப் பார்வையிட கட்டிட திணைக்கள ஊழியர்களுடன் நானும் போனேன்.அவர்கள் பார்வையிட நான் அங்கு நின்றவரகளுடன் உரையாடினேன்.

(“அல்பிரட் துரையப்பா” தொடர்ந்து வாசிக்க…)

பொறுப்புக்கூறலில் இரட்டை வேடம்

ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் செயிட் ராட் அல் ஹுஸைன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையின் முற்கூட்டிய பிரதி, கடந்த மூன்றாம் திகதி வெளியிடப்பட்டது. இதற்குப் பின்னர் கலப்பு விசாரணைப் பொறிமுறையை நிராகரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இருவேறு கோணங்களில் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

(“பொறுப்புக்கூறலில் இரட்டை வேடம்” தொடர்ந்து வாசிக்க…)

ஐரோம் ஷர்மிளா பெயரில் இருக்கும் அழகியல் வசீகரம்

நடந்து முடிந்திருக்கும் ஐந்து மாநில தேர்தல்களில் உத்தரப் பிரதேசத்தில் பெரும் வெற்றியை ஈட்டியதன் மூலம் மற்றைய மாநிலங்களில் அது தவறவிட்ட செய்தியை இல்லாமல் ஆக்கியிருக்கிறது பிஜேபி. இந்த வெற்றி குறித்து தெரிவிக்கப்படுவது அச்சம் என்றால், மணிப்பூரின் ‘ஐரோம் ஷர்மிளா’ வெறும் தொண்ணூறு வாக்குகள் மட்டுமே வாங்கி தோல்வியைத் தழுவியிருப்பது நாடு முழுக்க ஆழ்ந்த கசப்பை உருவாக்கிவிட்டிருக்கிறது.

(“ஐரோம் ஷர்மிளா பெயரில் இருக்கும் அழகியல் வசீகரம்” தொடர்ந்து வாசிக்க…)

ஹேரோயின் வர்த்தகம் உச்சத்தை அடைகிறது – 15 வருட ஆக்கிரமிப்பின் எதிர் விளைவு

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தனது ஆக்கிரமிப்பு யுத்தத்தை ஆரம்பித்து பதினைந்து வருடங்கள் நிறைவடைகின்றன. அமெரிக்காவில் வாழ்வதும் மடிவதும் ஒரு அழகிய கனவு என்று அமெரிக்காவின் கொத்துக்குண்டுகளிலிருந்து தப்பிய அப்பாவிகள் முகநூலில் அங்கலாய்த்துக்கொள்ளும் அளவிற்கு தகவல்கள் உறை நிலையில் வைக்கப்பட்டுள்ள சமூகத்திற்கு இப் பதினைந்து வருடங்களில் கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள் தான். பச்சிழம் குழந்தைகளும், முதியவர்களும் கூட…

(“ஹேரோயின் வர்த்தகம் உச்சத்தை அடைகிறது – 15 வருட ஆக்கிரமிப்பின் எதிர் விளைவு” தொடர்ந்து வாசிக்க…)

இயற்கையுடன் வாழ்ந்த மூக்குப்பேணியர்!

அந்தப் பெரியவர் தன் 95 வயதில் இயற்கை எய்தினார் என்ற சோகச் செய்தி இன்று கிடைத்தது. அன்று அவர் உண்ட தேனில் ஊறிய காட்டு மாடு, மான் மரை வத்தல், உடன் பிடித்து சமைத்த உடும்பு கறி, கைக்குத்தல் அரிசிச் சோறு, அவரது தோட்டத்து மரக்கறி, பூநகரி கடலில் பிடித்த குட்டன் மீன், கணவாய், இறால், நண்டு, திருக்கை, சுறா, கூடவே உளுத்தம்மா கழி, அவித்த பனங்கிழங்கு, எள் உருண்டை, ராசவள்ளி அவியல், என அத்தனையும் உண்ட  பலத்தால்,

(“இயற்கையுடன் வாழ்ந்த மூக்குப்பேணியர்!” தொடர்ந்து வாசிக்க…)