இயற்கையுடன் வாழ்ந்த மூக்குப்பேணியர்!

அந்தப் பெரியவர் தன் 95 வயதில் இயற்கை எய்தினார் என்ற சோகச் செய்தி இன்று கிடைத்தது. அன்று அவர் உண்ட தேனில் ஊறிய காட்டு மாடு, மான் மரை வத்தல், உடன் பிடித்து சமைத்த உடும்பு கறி, கைக்குத்தல் அரிசிச் சோறு, அவரது தோட்டத்து மரக்கறி, பூநகரி கடலில் பிடித்த குட்டன் மீன், கணவாய், இறால், நண்டு, திருக்கை, சுறா, கூடவே உளுத்தம்மா கழி, அவித்த பனங்கிழங்கு, எள் உருண்டை, ராசவள்ளி அவியல், என அத்தனையும் உண்ட  பலத்தால்,

(“இயற்கையுடன் வாழ்ந்த மூக்குப்பேணியர்!” தொடர்ந்து வாசிக்க…)

சோமாலியா: அரங்கேறும் பட்டினிப் பேரவலம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சில நாடுகள், சபிக்கப்பட்டவையோ எனச் சிந்திக்க வைக்கும் வகையில், மனிதாபிமான அவலங்கள், அந்நாடுகளில் தொடர்ந்தும் அரங்கேறுகின்றன. நாடுகள், பல்வேறு காரணங்களுக்காக அறியப்படுகின்றன. அதில் சில, அவலங்களுக்காக மட்டுமே அறியப்பட்டன. அவை சபிக்கப்பட்ட நாடுகளன்று, மாறாக, திட்டமிட்டுச் சரிக்கப்பட்ட நாடுகள். உலகின் ஒரு மூலையில் பட்டினியால் மக்கள் சாகையில், இன்னொரு மூலையில் பல்லாயிரக்கணக்கானோருக்குப் பயனுள்ள உணவு வீணாக்கப்படுகிறது. உலகம் இவ்வாறுதான், நியாயமற்றவொன்றாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பசியால் ஒரு மனிதன் சாவதென்பது கொடுமையானது.

(“சோமாலியா: அரங்கேறும் பட்டினிப் பேரவலம்” தொடர்ந்து வாசிக்க…)

2036ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்,இருக்காது ??

25 வருஷத்துக்கு முன்னாடி மன்மோகன் சிங் கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்தம் தான் நமக்கு இதுவரை சோறு போடுது…ஆனா நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது முட்டாள்தனம், நாம நம்மள மாத்திக்கணும்…! அவருடைய வார்த்தைகள் முழுவதும் எனக்கு உடன்படாவிட்டாலும், அதில் நிதர்சனம் இருக்கிறது என்றே பட்டது. 1998ல தொடங்கின kotak நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது…! இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல…! வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்கமுடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல.

(“2036ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்,இருக்காது ??” தொடர்ந்து வாசிக்க…)

யார் யாருக்கு ஆப்பு வைக்கிறார்கள்?

போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதை நியாயப்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்திருக்கும் கருத்துக்களை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக தமிழீழ விடுதலை இயக்கம் நேற்று (07) செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
‘போர்க்குற்ற விசாரணைக்காக அரசாங்கத்தினால் கோரப்படும் இரண்டு வருட கால அவகாசத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில், அதன் தலைவர் சம்பந்தனும் பேச்சாளர் சுமந்திரனும் ஆதரித்து நிற்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய மூன்று கட்சிகளின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் எதிரானது.

(“யார் யாருக்கு ஆப்பு வைக்கிறார்கள்?” தொடர்ந்து வாசிக்க…)

சர்வதேச பெண்கள் தினம்

(சாகரன்)
பிறப்பிற்கு முன்பு தன் குழந்தையை கற்பத்திற்குள் சுமப்பவள் பெண். இதனால் தாயாக மதிக்கப்படுகின்றாள். இதன் தொடர்சியாக குழந்தையின் வளர்சிக்காக பிறப்பிற்கு பின்பும் சுமக்கின்றார் தான் பெற்ற பிள்ளைகளை. இந்த பிறப்பிற்கு சரிபாதி காரணமாக இருக்கும் ஆண் பிறப்பிற்கு பின்பு தன் குழந்தைகளை பெண் அளவிற்கு சுமப்பதில்லை. இதனை உலகம் பொது நியதியாக்கி பெண் மீதான மேலாதிக்கத்திற்கு அத்திவாரம் இடுகின்றது. தொடர்ந்து வரும் வாழ்க்கை பயணத்திலும் குடும்ப சுமையை சுமக்கும் உயிரினமாக மாற்றப்பட்டு சுதந்திரத்தை சமூகம் மறுக்கின்றது. இந்த ஆண் மேலாதிக்க சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் பயணிப்பவள் தனது தேடலுக்காக புறப்பட எத்தனிக்கும் போது ஏளனமாகப் பார்க்கப்படுகின்றார். மேலும் இந்தப் பார்வை பெண் குழந்தையாக இருக்கும் போதே ஆணை விடக் கீழானவள் என்ற கருத்தியலையும் ஒழுக்கம் என்பது பெண்ணுக்கு மட்டும் உரித்தானது என்று சமூக கட்டுப்பாடு, மதக்கட்டுப்பாடு என்றும் தடை போட்டு நியாயப்படுத்த முயலுகின்றது.

(“சர்வதேச பெண்கள் தினம்” தொடர்ந்து வாசிக்க…)

பெண் விடுதலையில் அம்பேத்கர்

* 1919 – பெண்களுக்கான சிறப்பு மாநாடுகளில் அம்பேத்கர் கலந்து கொண்டு, தலித் சமூகம் விடுதலை பெற, அதன் முன் தேவையாக தலித் சமூகப் பெண்கள் விடுதலை பெற வேண்டும் என்றார்.
* 1921 – சாதிப் பெயர்களை ஆண்கள் தங்கள் பெயர்களின் பின்னால் இணைத்துக் கொண்டு அதை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், பெண்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் அத்தகைய பெயர்களைத் தவிர்க்கின்றனர். அதே நேரம் திருமணம் போன்ற நிகழ்வுகளால் சாதி உணர்வை வலியுறுத்த வேண்டிய சூழலில் பெண்கள் உள்ளனர். இதைக் களைந்தெறிய, பெண்கள் போதுமான அளவு பொதுத் தளத்திற்கு வர வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றார் அம்பேத்கர்.

(“பெண் விடுதலையில் அம்பேத்கர்” தொடர்ந்து வாசிக்க…)

வட  கொரியா-மலேஷியா: போர் மூளுமா?

(எஸ். ஹமீத்.)
வட கொரியாவுக்கும் மலேசியாவிற்குமிடையில் போர் ஒன்று மூளும் அபாயத்தை அவ்வளவு இலகுவில் மறுதலித்துவிட முடியாத நிலைமைகளே தற்போது காணப்படுகின்றன. வட கொரியாவின் சர்வாதிகார  அதிபர் கிம் ஜாங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரரான கிம் ஜாங் நம் என்பவர் அண்மையில் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்துக் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்தக் கொலைக்கு உலக நாடுகளினால் தடை செய்யப்பட VX  என்ற இரசாயனம் பயன்படுத்தப்பட்டிருந்தது. சர்வதேசத்தையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இக்கொலையைத் தொடர்ந்து, மலேஷிய போலீசார் சந்தேகத்திற்குரியவர்கள் சிலருடன் மேலும் இரண்டு பெண்களைக் கைது செய்திருந்தனர்.

(“வட  கொரியா-மலேஷியா: போர் மூளுமா?” தொடர்ந்து வாசிக்க…)

சிறப்புக் கட்டுரை: காலத்தைத் தோற்கடித்த கலைஞர்

(ரவிக்குமார்)

மார்ச் 2ஆம் தேதி இரவு எட்டு மணி. கோபாலபுரம் – திமுக தலைவர் கலைஞரின் இல்லம். நானும் எமது கட்சியின் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களும் அங்கு போவது முதன்முறையல்ல. திமுக கூட்டணியில் நாங்கள் இடம்பெற்றிருந்தபோது அடிக்கடி அங்கு சென்று தலைவர் கலைஞரைச் சந்தித்து எத்தனையோ செய்திகளை பகிர்ந்துகொண்டிருக்கிறோம். எங்களை தமது உடன்பிறப்புகளாகவே கருதி திமுக-வின் உள்கட்சிப் பிரச்னைகளைக்கூட அவர் எங்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். ஒவ்வொருமுறை அவரை சந்தித்துத் திரும்பும்போதும் ஏதாவது ஒரு புதிய செய்தியை, ஒரு அனுபவத்தை நாங்கள் உள்வாங்கி வந்திருக்கிறோம். இன்று, கோபாலபுரம் இல்லத்தில் நுழையும்போது தலைவர் கலைஞரை பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியைவிட, அவர் எப்படி இருக்கிறாரோ என்ற தவிப்புதான் என் உள்ளத்தில் மேலோங்கியிருந்தது.

(“சிறப்புக் கட்டுரை: காலத்தைத் தோற்கடித்த கலைஞர்” தொடர்ந்து வாசிக்க…)

கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல்லெறியும் சுமந்திரன்!

“அப்படி விசாரிக்கும் போது, தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தை மேடையில் வைத்துக் கொண்டு, அவரது ஆட்சேபனை எதுவும் இல்லாமல், “தமிழ் துரோகிகளுக்கு இயற்கை மரணம் கிடையாது” என்று பேசிய அன்றைய தமிழ் இளைஞர் பேரவைத் தலைவர்களின் (மாவை சேனாதிராசா, வண்ணை ஆனந்தன் போன்றவர்கள் அன்றைய பிரபல தலைவர்கள்) உரைகள், எப்படி புலிகளின் மிக மோசமான அராஜகம் வரை இட்டுச் சென்றது என்பதை வரலாறு பதிவு செய்வதுடன், சுமந்திரன் இன்று அங்கம் வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும்.

(“கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல்லெறியும் சுமந்திரன்!” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை வெளியானது! ஈழத்தமிழர்கள் அதிர்ச்சியில்

ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஈழத்தமிழர் தரப்புக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்த்திருந்த குறித்த அறிக்கை, தமிழர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. இதில் இலங்கை அரசை காப்பாற்றும் வகையிலேயே இலங்கை தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.