கஜனின் தொடர் அழைப்பு; விக்கியின் நிராகரிப்பு; சுரேஷின் தயக்கம்

தமிழ்த் தேசியப் பரப்புக்குள் ‘புதிய தலைமையாக உருமாறுவார்’ என்று பல தரப்புகளும் நம்பியிருக்க, அதனைத் தவிடுபொடியாக்கிவிட்டு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையோடு தங்கிவிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கவனம் பெறும் வகையிலான கலகக்குரல்களை எழுப்பியவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன் ஆகியோர் முக்கியமானவர்கள். அந்த வரிசையில், இறுதியாக இணைந்தவர் சி.வி.விக்னேஸ்வரன். 2015 ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான காலத்தில் அவரின் கலகக்குரல் சற்று பலமாகவே ஒலித்தது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலகக்குரல் எழுப்பியதோடு நின்றுவிடாமல், கூட்டமைப்பிலிருந்து விலகிவந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் அமைத்துக் கொண்டார்.

(“கஜனின் தொடர் அழைப்பு; விக்கியின் நிராகரிப்பு; சுரேஷின் தயக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

பந்தாடப்படும் கேப்பாப்புலவு

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு, சூரியபுரம், சீனியாமோட்டை மற்றும் பிரம்படி ஆகிய பகுதியில் வசித்த மக்கள், யுத்தம் காரணமாக அப்பகுதிகளில் இருந்து கடந்த 2008ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இடம்பெயர்ந்த நிலையில், 2009 ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதிகளில், இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கிச் செல்லத் தொடங்கினர். இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற மக்கள், வவுனியா, செட்டிகுளம் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், நலன்புரி நிலையங்களை மூட அரசாங்கம் தீர்மானித்த நிலையில், அம்மக்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

(“பந்தாடப்படும் கேப்பாப்புலவு” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் (பகுதி 106 )

திரு வின்சன்ட் பெரேரா அவர்கள் ஜே.வி.பி யின் செயற்பாடுகள் காரணமாக அவர்களின் அச்சுறுத்தல்களில் இருந்து தப்பவே மறைவாக அந்த வீட்டில் குடியிருந்தார்.அவர் அங்கே இருப்பது யாருக்கும் தெரியாது.நாங்கள் நேரே சந்தித்தால் சிரிப்பார்.அவருடன் உறவாட யாரும் போவதில்லை.அவர் மனைவி என் மனைவியுடன் கதைப்பார்.அவ்வளவு தான்.சில நேரங்களில் மனைவியுடன் பஸ்சில் சந்தைக்கு செல்வது அவருக்குப் பிடிக்கும்.செல்வார்.அப்போது என் திட்டம் நாட்டைவிட்டு வெளியேறுவதாக இருந்தது.இது அவர் மனைவிக்கு தெரியும்.

(“பற்குணம் (பகுதி 106 )” தொடர்ந்து வாசிக்க…)

குழந்தைகளைக் குதறும் கழுகுகள்: அவதானம் மிக அவசியம்!

(எஸ். ஹமீத்)
அண்மைக் காலங்களில் குழந்தைகள் மீதான காமுகர்களினதும் கள்வர்களினதும் வக்கிரங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. ஒன்றுமேயறியாத பச்சிளம் குழந்தைகள் தொடக்கம் பதின்ம வயதுடைய சிறார்களின் மீதான-குறிப்பாகச் சிறுமிகள் மீதான  கொடுமைகளும் கொடூரங்களும் பாலியல் வன்மங்களும் அதன் விளைவான கொலைகளும் எல்லா நாடுகளிலும் ஒப்பீட்டளவில் கூடிக் கொண்டே வருகின்றன. இந்த நிலைமையில் தமது குழந்தைகளின் மீது பெற்றோரும் உடன் பிறப்புகளும் மிக அவதானமாக இருப்பது அத்தியாவசியமாகும்.

(“குழந்தைகளைக் குதறும் கழுகுகள்: அவதானம் மிக அவசியம்!” தொடர்ந்து வாசிக்க…)

மல்கம் எக்ஸ் – நினைவுப் பதிவு.

21 பெப்ரவரி.

அமெரிக்காவில் கறுப்பின மக்களின் எழுச்சியின் குறியீடான “மல்கம் எக்ஸ்” இன் நினைவு தினம்.
*
கடைசிக் காலத்தில் சதா தொலைபேசி மிரட்லுடன் தனது மரணத்தை எந்நேரமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மல்கம் எக்ஸ் இதே நாளில் (1965) மேடையில் வைத்து கொடுரமான முறையில் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். அவரது மூன்று குழந்தைகள், மனைவி முன்னிலையில் அவர் மரணமானார். 40 வயதை எட்டிப்பிடிக்கும் காலத்தில் அவர் வாழ்வு பறிக்கப்பட்டது. 22000 பேர் அவரது உடலைப் பார்த்து அஞ்சலி செலுத்தினர். 21 வயதில் பூச்சியத்திலிருந்து தொடங்கிய அவரது இனவொதுக்கலுக்கு எதிரான அரசியல் முப்பத்தொன்பது வயதில் இந்தளவு அபரிதமான வளர்ச்சியைக் கண்டது வியப்பூட்டுகிறது. வீதிகள் தொடங்கி பல்கலைக் கழகங்கள் வரை ஒலித்த அந்த கலகக் குரலை மரணம் அடக்கியது.அவர் இன்னும் கொஞ்சக் காலமாவது வாழ்ந்திருக்கக்கூடாதா என கறுப்பின மக்கள் ஒவ்வொருவரும் ஏங்கினர். கதறி அழுதனர்.

(“மல்கம் எக்ஸ் – நினைவுப் பதிவு.” தொடர்ந்து வாசிக்க…)

கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துடன் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினர்(SDPT)

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்சியாக கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துடன் இணைந்து செயற்பட்டுவருகின்றனர். தமது கட்சியை மன்னிலைப்படுத்தாது அந்த மக்களுடன் மக்களாக இணைந்து போராட்டத்தில் ஈடபட்டுவருகின்றனர். அங்கிருந்து எமது நிருபருக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில்: குடும்பம் ஒன்றிற்கு கால் ஏக்கர் படி வழங்கப்பட்ட காணிகளில் 83 குடும்பங்கள் வசித்து வந்ததாக கேப்பாபுலவு பிலகுடியிருப்பில் வசித்த மக்கள் தெரிவித்தனர். தமது காணிகளை விடுவிக்குமாற கோரி போராடிவரும் இவர்கள் தமது காணிகளுக்கான அனுமதிப்பத்திரமும் சட்டப்படி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

(“கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துடன் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினர்(SDPT)” தொடர்ந்து வாசிக்க…)

“அவரது பெயர் கமலேஸ்வரன்…” குமாரபுரம் படுகொலையின் சாட்சியங்கள்

96ஆம் ஆண்டு குமாரபுரம் படுகொலை சம்பவத்தில் உயிர்தப்பியவர்களுக்கு மறுக்கப்பட்ட நீதி

“என்னை சுடுங்கள். ஆனால், தயவுசெய்து எனது பிள்ளைகளைக் கொல்ல வேண்டாம்”, என்று கந்தப்பொடி கமலாதேவி கிளிவெட்டி, குமாரபுரத்திலுள்ள தமது வீட்டுக்கு வெளியில் வைத்து இலங்கை இராணுவத்தால் தாம் சுட்டுக்கொல்லப்படுவதற்கு சற்று முன்னதாக அவரது தலைக்கு மேலாக இரு கைகளையும் கூப்பி கெஞ்சியிருந்தார்.

(““அவரது பெயர் கமலேஸ்வரன்…” குமாரபுரம் படுகொலையின் சாட்சியங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

என்மனவலையிலிருந்து………..

(சாகரன்)

1987 மாகாண அரசும் இன்றைய மாகாண அரசும்

பலரும் இன்று தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக பேசியும் வரிந்து ஏற்றுக் கொண்டிருக்கும் மகாணசபையும் இதற்கான பதவிகளும் 1987 புலிகள் உட்பட சகல அமைப்புக்களும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று போர் நிறுத்தம் செய்து ஆயுத ஒப்படைப்பும் செய்தனர். இதில் புலிகளே இந்திய இராணுவத்தை நிறைகுடம் வைத்து வரவேற்று அவர்களின் இராணுவ வாகனத்தில் புலிக் கொடியையும் இந்தியக் கொடியையும் கட்டிக்கொண்டு ஊர்வலமும் நடத்தினர். இந்திய அரசும் மற்றய விடுதலை அமைப்புக்களை அதிகம் கண்டு கொள்ளவில்லை. மாற்று அமைப்புக்களின் ஜனநாயக அரசியல் செயற்பாடுகளை ஈழத்தில் அனுமதித்ததில் உடன்பாடற்று இருந்த புலிகளின் இந்திய இராணுவத்தின் மீதான தாக்குதல்களை வேறு காரணங்களை முன்னிறுத்தி ஆரம்பித்தனர்.

(“என்மனவலையிலிருந்து………..” தொடர்ந்து வாசிக்க…)

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான ஊழல் மீண்டும் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது.

சுன்னாகம் பிரதேசத்தில் மின் உற்பத்தியை மேற்கொண்டு, யாழ்ப்பாணம் முழுமைக்கும் மின்சார சேவையை மகிந்த ஆட்சிக் காலத்தில் வழங்கிய நிறுவனமான நோதேர்ன்பவர் மற்றும் அதன் தாய் நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் பெரும் பணத்தொகை பரிமாறப்பட்டுள்ளதாக மல்லாகம் நீதிமன்றம் துணிகரமான தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது. இப் பணப்பரிமாற்றத்தில் வட மாகாண சபை முதலமைச்சர், அவரை பின்னணியில் இயக்கும் நிமலன் கார்த்திகேயன் என்ற அவுஸ்திரேலிய குடியேற்றவாசி, விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் போன்றவர்களே செயற்பட்டனர் என்ற தகவல்களை இனியொரு ஆரம்பம் முதல் வெளிப்படுத்தி வந்துள்ளது.

(“வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான ஊழல் மீண்டும் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது.” தொடர்ந்து வாசிக்க…)

அம்பாறை உடும்பன்குள படுகொலை

19.2.1986 அன்று அம்பாறை உடும்பன்குளத்தில் இனவெறியர்களால் பெண்கள் குழந்தைகள் என 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 31ம் ஆண்டு நினைவுநாள் நேற்றாகும். ஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில் கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் பல தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்தும் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த அதேவேளை பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தியும் வீடுகளோடு சேர்த்து எரித்தும் கொன்றுள்ளனர் . இந்தவகையில் பல ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் மரண ஓலத்தை கிழக்க மாகாணம் கண்டிருக்கிறது. இக்கிராமமானது வயல் நிலங்களையும் மலைகளையும் அழகான அருவிகளையும் அமையப் பெற்ற அழகிய கிராமமாகும்.

(“அம்பாறை உடும்பன்குள படுகொலை” தொடர்ந்து வாசிக்க…)