யாழ் பல்கலைக் கழக துணை வேந்தர் தெரிவு

பேரா. சாம் தியாகலிங்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழக பழைய மாணவரும் போஸ்ரன் பல்கலைக்கழகத்தின் மருத்துவக்கல்லூரியின் பேராசிரியரும் சர்வதேசரீதியில் அதிகளவு கணிக்கப்பட்ட ஆய்வுகள் செய்த நேர்மையான academic. இவர்தான் இம்முறை யாழ் பல்கலைக்கழகத்துக்கான துணைவேந்தர் பதவிக்கு வெளியிலிருந்து விண்ணப்பித்தவர். இவரது விண்ணப்பத்தை உள்ளேயிருந்து தகுதிகுறைவான விண்ணப்பதாரிகள் பதவியிலிருப்பதால் நிராகரிக்க முயல்கின்றனர். குறிப்பாக பீடத்தலைவர்களாக இருக்கும் கணவனும் மனைவியுமான துஷ்யந்தினி, மிகுந்தன் குணசிங்கம் தம்பதியர் அதிக ஈடுபாடு இவர் விண்ணப்ப நிராகரிப்பில் காட்டுகின்றனர்.

(“யாழ் பல்கலைக் கழக துணை வேந்தர் தெரிவு” தொடர்ந்து வாசிக்க…)

சுரேஸ் கேட்பது புதிய மொந்தையில் பழைய கள்ளையே!

அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற எழுக தமிழ் மேடையில், சுரேஸ் பிரேமச்சந்திரன் முன்மொழிந்த விடயம், வடக்கு மாகாண முதல்வர் திரு விக்னேஸ்வரன் தலைமையில், ஒரு புதிய கட்சி ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதே. இது ஒன்றும் அவர் இப்போது எடுத்த முடிவல்ல. என்று அவர் தேர்தலில் தோல்வியடைந்தும், எதிர்பார்த்த தேசியப்பட்டியல் ஆசனம் கிடைக்கவில்லையோ! அன்று முதல் அவரின் சிந்தனையில் உதித்த விடயம் தான், முதல்வரின் தலைமையில் அரசியல் செய்வது. அன்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு முதல்வர் தலைமை தாங்க வேண்டும் என்றார்.

(“சுரேஸ் கேட்பது புதிய மொந்தையில் பழைய கள்ளையே!” தொடர்ந்து வாசிக்க…)

சசிகலா ஏன் முதல்வராக வேண்டும்..?

3 நிமிடங்களை ஒதுக்கி இந்த பதிவை முழுவதும் படித்து பாருங்கள்..!
உணர்ச்சி வயப்பட்டு அரசியல் முடிவுகளை எடுத்தே பழகிவிட்டவர்கள் நாம்.. சற்றே உங்கள் விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி விட்டு, அறிவுசார் தளத்தில் நின்று கீழே உள்ளவற்றை முழுமையாக வாசியுங்கள்.
ஒரே நாளில் புரட்சியாளராக உங்கள் கண்களுக்கு மாறியிருப்பவர் திரு.பன்னீர் செல்வம் அவர்கள். ஏன், எதற்கு, என்ன காரணம் என்றே தெரியாமல் மிகப்பெரிய வில்லியாக தெரிவார் சசிகலா.

(“சசிகலா ஏன் முதல்வராக வேண்டும்..?” தொடர்ந்து வாசிக்க…)

பன்னீர் செல்வம்

ஜெயலலிதாவிடம் ‘மிஸ்டர்’ விசுவாசம்…. சசிகலாவிடம் ‘மிஸ்டர்’ நம்பிக்கை… அமைச்சரவை சகாக்களிடம் ‘மிஸ்டர்’ பவ்யம்… அதிகாரிகள் மட்டத்தில் ‘மிஸ்டர்’ ஓ.பி.எஸ்… தமிழக மக்களிடம் ‘மிஸ்டர்’ பொம்மை… ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது ‘மிஸ்டர்’ மிக்சர்… பன்னீர் செல்வத்தின் கடந்த காலம் பெற்றுத்தந்த அடுக்கடுக்கான பட்டங்கள் இவை. ஏறத்தாழ 17 ஆண்டுகளாக, இந்தப் பட்டங்களை விரும்பியும் விரும்பாமலும் சுமந்து திரிந்தார் பன்னீர் செல்வம். ஆனால், 40 நிமிட தியானம்… வெறும் நாற்பதே நிமிட தியானம்; 20 நிமிடப் பேட்டி… வெறும் இருபதே நிமிடப் பேட்டியில் 17 ஆண்டு காலமாக தான் மீது வலுக்கட்டாயமாக சுமத்தப்பட்ட பட்டங்களை உடைத்து நொறுக்கி இருக்கிறார் பேச்சிமுத்து என்ற ஓ.பன்னீர் செல்வம் என்ற ஓ.பி.எஸ். இப்போது அவர் ‘மிஸ்டர்’ பரிசுத்தம் என்று பட்டத்தோடு வலம் வர ஆரம்பித்துள்ளார். குறிப்பிட்ட ஊடகங்கள் அவரை அப்படிக் காட்டுகின்றன. ‘ஐ சப்போர்ட் ஓ.பி.எஸ்’ என்ற ஹேஷ்டேக்காக சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. நாளுக்குநாள் அவர்களுக்கான பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் கூடிக்கொண்டே போகின்றனர்.

(“பன்னீர் செல்வம்” தொடர்ந்து வாசிக்க…)

கருணா தலைமையில் புதியக்கட்சி உதயமானது

வடக்கு, கிழக்கை இணைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்னும் பெயருடன், முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் இந்தப் புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று (11) காலை, மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள போக்கஸ் விடுதியில் நடைபெற்றது. மட்டக்களப்பில் இயங்கிவரும் நாம் திராவிடர் கட்சியும், இதன்போது தமது ஆதரவைப் புதிய கட்சியின் உருவாக்கத்துக்கு வழங்கியுள்ளது.

(“கருணா தலைமையில் புதியக்கட்சி உதயமானது” தொடர்ந்து வாசிக்க…)

ஓ.பன்னீர் செல்வம் உத்தமரா? ‘மிஸ்டர்’ பவ்யத்தின் மறுபக்கம்! – அத்தியாயம் 1

பன்னீர் செல்வம்

ஜெயலலிதாவிடம் ‘மிஸ்டர்’ விசுவாசம்…. சசிகலாவிடம் ‘மிஸ்டர்’ நம்பிக்கை… அமைச்சரவை சகாக்களிடம் ‘மிஸ்டர்’ பவ்யம்… அதிகாரிகள் மட்டத்தில் ‘மிஸ்டர்’ ஓ.பி.எஸ்… தமிழக மக்களிடம் ‘மிஸ்டர்’ பொம்மை… ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது ‘மிஸ்டர்’ மிக்சர்… பன்னீர் செல்வத்தின் கடந்த காலம் பெற்றுத்தந்த அடுக்கடுக்கான பட்டங்கள் இவை. ஏறத்தாழ 17 ஆண்டுகளாக, இந்தப் பட்டங்களை விரும்பியும் விரும்பாமலும் சுமந்து திரிந்தார் பன்னீர் செல்வம். ஆனால், 40 நிமிட தியானம்… வெறும் நாற்பதே நிமிட தியானம்; 20 நிமிடப் பேட்டி… வெறும் இருபதே நிமிடப் பேட்டியில் 17 ஆண்டு காலமாக தான் மீது வலுக்கட்டாயமாக சுமத்தப்பட்ட பட்டங்களை உடைத்து நொறுக்கி இருக்கிறார் பேச்சிமுத்து என்ற ஓ.பன்னீர் செல்வம் என்ற ஓ.பி.எஸ். இப்போது அவர் ‘மிஸ்டர்’ பரிசுத்தம் என்று பட்டத்தோடு வலம் வர ஆரம்பித்துள்ளார். குறிப்பிட்ட ஊடகங்கள் அவரை அப்படிக் காட்டுகின்றன. ‘ஐ சப்போர்ட் ஓ.பி.எஸ்’ என்ற ஹேஷ்டேக்காக சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. நாளுக்குநாள் அவர்களுக்கான பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் கூடிக்கொண்டே போகின்றனர்.

(“ஓ.பன்னீர் செல்வம் உத்தமரா? ‘மிஸ்டர்’ பவ்யத்தின் மறுபக்கம்! – அத்தியாயம் 1” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 102 )

மாகாண சபை தேர்தலை நடாத்த இலங்கை அரசும் இந்திய அரசும் ஆர்வம் காட்டின.தேர்தலுக்கு முன்பாகவே ஈ.பி.ஆர்.எல்.எப் மாகாண சபைக்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கியது.அந்த மாகாணசபையில் இணைந்து பணியாற்ற பலர் விரும்பியபோதும் புலிகள் மீதான பயம் காரணமாக ஒழிந்துகொண்டனர்.

(“பற்குணம் A.F.C (பகுதி 102 )” தொடர்ந்து வாசிக்க…)

வியட்நாமும் நம்ப மலையகமும்

சுமார் இருபது வருடங்கள் அமெரிக்காவுடன் நடந்த உக்கிரமான போரில் சுமார் 51 லட்சம் மக்களை வியட்நாம் இழந்தது மட்டுமன்றி அந்த கொடூர போரில் போராளிகள் மற்றும் அமெரிக்க படையினர் என 14 லட்சம் பேர் பலியாகினர் இதில் பலியான அமெரிக்க படையினரின் தொகை ஐந்து லட்சத்தை கடந்துள்ளது, ஹோ சி முங் என்ற புரட்சி தலைவனால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் வியட்நாமிய மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அரங்கேறியது . இப்படி பல இழப்புகளை சந்தித்த இந்த நாடு இன்று சீனாவுக்கு அடுத்த இடத்தில் பொருளாதாரத்தை தன்னகத்தே கொண்டு உலகில் முன்னணி வகிக்கிறது, எமது நாட்டை போன்றே அரிசி, தேயிலை, கோப்பி, ரப்பர் மற்றும் மீன்பிடி என்ற உற்பத்திகளுடன் முன்னேறியுள்ளது. மலை முகடுகளை செதுக்கி சிற்பமாக்கி அங்கே விவசாயம் மேற்கொள்கிறார்கள் அங்கு பாவிக்கப்படும் உரம் இயற்கையாக எடுக்கப்படுவது ரசாயனம் இல்லை, இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால் இதே போன்ற வளம் கொண்ட மலையக பகுதிகளில்தான் நாமும் வாழ்கிறோம், நீர்விழ்ச்சிகளை விவசாய நிலம் நோக்கி திசை திருப்பினாலே போதும் தரிசு நிலங்களை விளை நிலமாக்கலாம்.

(வரதன் கிருஸ்ணா)

முள்ளுள்ளபுதர்களின் மத்தியில் (அத்தியாயம் 10)

(அக்கினிஞானஸ்நானம்)

மீண்டும் ஓர் கூட்டம்.
ஆனால் இது சற்றுவித்தியாசமானது.
ஜக்கியநாடுகள் சபையின் ‘ஆயுதப் போரட்டத்தில் சிறுவர்கள்’என்றபிரிவின் உலகளாவியதலைவர் திரு. ஓலராஒட்டுண்ணு 3 நாள் வன்னிவிஜயத்தின் இறுதியில் வன்னியில் பணிபுரியும்சகலசர்வதேசஅரசசார்பற்ற நிறுவனங்களினுடனான ஒன்றுகூடல். வன்னியில் புலிகளால் அவருக்கு அமோகவரவேற்ப்பு அளிக்கப்பட்டது. அவர் பங்குபற்றியசகல கூட்டங்களிலும் புலிகள் கலந்துகொண்டார்கள்.  ஆனால் நான் குறிப்பிடும் இந்தக்கூட்டத்திற்குபுலிகள் அழைக்கப்படவில்லை.
இந்தக்கூட்டத்தில் நான் ஒருவனே இலங்கைப்பிரசை. (வெள்ளாட்டுமந்தையில் கறுப்பாடு!)

(“முள்ளுள்ளபுதர்களின் மத்தியில் (அத்தியாயம் 10)” தொடர்ந்து வாசிக்க…)

பெற்றோரே! உங்கள் பிள்ளைகளை ”அவையத்து முந்தி இருக்க” செய்வீர்களா?  

வட மாகாணத்தில் இன்று பிரதான பேசுபொருளாக இருப்பது போதைப் பொருள் பாவனை. அதிரடிப் படையை களம் இறக்கி தேடுதல் வேட்டை முதல் கைதுகள் வரை தொடர்வதும், நீதிமன்றம் கடும் தண்டனைகள் விதிப்பது  மூலமாகவும் மட்டும்,  இதனை கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியவில்லை.காரணம் இது எம் சமூகம் சார்ந்த பிரச்சனை. இதனை செய்பவர்கள் இந்த சமூகத்தை சார்ந்தவர்கள். இவர்கள் யார் என்பது இந்த சமூகத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். போதைப் பொருள் கடத்துபவரை வேண்டுமானால் ஒரு சிலருக்கு மட்டும் தெரிந்திருக்கலாம்.

(“பெற்றோரே! உங்கள் பிள்ளைகளை ”அவையத்து முந்தி இருக்க” செய்வீர்களா?  ” தொடர்ந்து வாசிக்க…)