சோசலிசம்

மனிதர்களாகிய நாம் இயற்கையில் அமைந்த பொருள்களை மாற்றியமைப்பதன் மூலம் மனித வாழ்க்கைக்கு தேவையான சாதனங்களை உற்பத்தி செய்து கொள்கின்றோம்.இவ் உற்பத்திக்கும், அதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கும் நாங்கள் உழைத்து வழங்கும் பங்களிப்பே நாம் செய்யும் “தொழில்” எனப்படுகிறது. இந்த உற்பத்தி நடவடிக்கைக்கான செலவீனத்திற்கு (மூலப்பொருட்கள், உற்பத்தி சாதனங்களின் தேய்மானம், எமது உழைப்பிற்கான கூலி) மேலதிகமாக ஈட்டப்படும் வருமானம் இலாபம் ஆகும்.

(“சோசலிசம்” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளுள்ளபுதர்களின் மத்தியில் – அத்தியாயம் 5

(அக்கினி ஞானாஸ்ஞானம்)

‘மாத்தையாஎன்டகிவ்வா’ (ஜயா வரட்டாம்) என்றகுரல் கேட்டது. முக்கால் மணிநேரமாக வவுனியா வாகன தொடரணி சோதனை முகாமிற்கு அருகாமையிலிருந்த மரநிழலின் கீழ் பத்திரிகைவாசித்துக்கொண்டிருந்த நான் திடுக்குற்று நிமிர்ந்து பார்த்தேன். கையில் துப்பாக்கியுடன் இராணுவச் சிப்பாய் எதுவித உணர்ச்சிகளுமின்றி என்னைப் பார்தவாறு நின்றிருந்தான். எனக்கு நெஞ்சுதிக்கென்றது. இராணுவச்சிப்பாய் என்னுடன் கதைத்தது சுற்றியிருந்த பலரின் கவனத்தை எனதுபக்கம் திருப்பியது. வன்னியில் பணிபுரியும் பலஅரச.

(“முள்ளுள்ளபுதர்களின் மத்தியில் – அத்தியாயம் 5” தொடர்ந்து வாசிக்க…)

முகநூலில் முகமூடிகளின் பதிவுகள்?!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது ஏற்புடையது என்றால், முகநூலில் வரும் பதிவுகள் பற்றி நீங்கள் பதிவேற்றும் பதில் பதிவுகள் தான், உங்களின் உண்மையான மனநிலையின் பிரதிபலிப்பு என கொள்வது தவறா?. ஒருவர் கருத்தை ஏற்ப்பதும் மறுப்பதும் நீங்கள் தான் என்பது உண்மை அல்லவா?.சமூகவலைத்தளம் மூலம் நாம் உண்மைக்கு வரவும், பொய்மைக்கு விலக்கும் செய்தல் நன்றல்லவா.

(“முகநூலில் முகமூடிகளின் பதிவுகள்?!” தொடர்ந்து வாசிக்க…)

எங்கடை தமிழ் சனம் – முதலமைச்சர் தன்ரை வேலையைப் பாக்காமல்

நான் யாழ்ப்பாணம் சென்று அங்கே கனடாவாழ் மக்களின் பணத்தில் உருவாக்கப்பட்டு செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஆடைத் தொழிற்சாலையைப் பார்த்து வந்ததை பற்றி அறியவென எனது நண்பன் என்னைத் தேடி வந்தான். வரும்போதே சிரித்துக் கொண்டே சொன்னான் ‘எல்லாரும் ஏறின குதிரையிலை சக்கடத்தாரும் ஏறி சறுக்கி விழுந்தாராம்’ என்று. ஆரைக் குறிப்பிடுகின்றாய் எனக் கேட்டேன். ‘வேறை ஆர் முதலமைச்சர்தான். அவர் கனடா வாறாராம். முதலமைச்சர் தனக்கென ஓர் நிதியத்தை உருவாக்க போகிறாராம். அதுக்கு நிதி சேகரிக்க வாறாராம’; என்றான்.

(“எங்கடை தமிழ் சனம் – முதலமைச்சர் தன்ரை வேலையைப் பாக்காமல்” தொடர்ந்து வாசிக்க…)

சம்பந்தன் கூட்டியுள்ள கூட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் உயர்மட்டச் சந்திப்பு, எதிர்வரும் 6ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) முதல், தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போது, புதிய அரசியலமைப்புத் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.

(“சம்பந்தன் கூட்டியுள்ள கூட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

போராளி சுந்தரம் பற்றி பதிவுகள்….!

(சுகன், விஜய பாஸ்கரன், சாகரன்)

சுந்தரத்தின் கொலையில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு .அமிர்தலிங்கத்திற்கு “நோக்கம் இருக்குமா ?” என ஒரு பலமான அல்லது லேசான அபிப்பிராயம் எப்போதும் இருந்துவந்திருக்கிறது .
அவரது புதியபாதை அரசியல் நிலைப்பாடுகள், அமிர்தலிங்கம் மீதான கடும் வெளிப்படையான விமர்சனம் என்பவை இவற்றிற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது ,இதனுடன் துரையப்பா கொலை பின்னணியும் சேர்த்து நோக்கப்படுகிறது அமிர்தலிங்கம் சுந்தரத்தின் மரணச்சடங்கில் கலந்துகொண்டிருக்கிறார் ,ஆனால் சுந்தரத்தை தனக்குத் தெரியாது நேரில் பார்த்ததில்லை என அவைக்கு தெரிவித்திருக்கிறார் .

(“போராளி சுந்தரம் பற்றி பதிவுகள்….!” தொடர்ந்து வாசிக்க…)

புதிய ஆண்டில் வியூகங்கள் புதுப்பிக்கப்படுமா?..

புதிய ஆண்டில் பழையன கழிதலும் புதியன புகுதலும் உண்மை என்றால், 2016ல் தீர்வு என்ற எதிர்வு கூறலை நினைவில் கொண்டு எவரும் பழையதை கிளறக்கூடாது. அடுத்த கட்ட நகர்வை பற்றிய சிந்தனை மட்டுமே மனதில் ஒருமுகப்பட வேண்டும். நடக்கும் என நினைத்து நம்பிக்கை வைத்து முயன்றபின்னர், அது நடக்காவிட்டால் சோர்ந்து போகாதே என்பதை உறுதியுடன் நிகழ்த்திக் காட்டிய கஜனி முகமது, விடா முயற்சிக்கும் அதனூடான இறுதி வெற்றிக்கும், எமக்கான முன் உதாரண புருசன் ஆவார்.

(“புதிய ஆண்டில் வியூகங்கள் புதுப்பிக்கப்படுமா?..” தொடர்ந்து வாசிக்க…)

சம்பந்தனும், சுமந்திரனும் காரணமின்றி உள்ளே இருக்க மாட்டார்கள்!

அரசியலமைப்பைத் தயாரிக்கும் விடயத்தில் குறைபாடுகள் உருவாகும் பட்சத்தில் அவற்றை உள்ளிருந்து பேச்சுக்களைத் தொடர்வதன் மூலமும், கலந்துரையாடுவதன் மூலமுமே தீர்த்துக் கொள்ள முனைய வேண்டும். அதனை விடுத்து ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்ற விதத்தில் செயற்பட முனைவதால் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்பது எட்டாக்கனியாகவே தொடரும்.

(“சம்பந்தனும், சுமந்திரனும் காரணமின்றி உள்ளே இருக்க மாட்டார்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

மோடி முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு தன் – பதவியை ராஜினாமா செய்த ஐ ஏ எஸ் அதிகாரி

இப்படியும் ஒரு IAS அதிகாரி …!!! இந்தியனே மோடியின் நர பலி முகத்தை மறந்துவிடாதே மோடி முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு தன் – பதவியை ராஜினாமா செய்த ஐ ஏ எஸ் அதிகாரி.

மசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே அனுமார் சிலையும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட்டுள்ளன வேதனையோடும் வெட்கத்துடனும் இதை பகிர்கின்றேன – ஹர்ஷ் மந்தேர் IAS

(“மோடி முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு தன் – பதவியை ராஜினாமா செய்த ஐ ஏ எஸ் அதிகாரி” தொடர்ந்து வாசிக்க…)

சிவில் பாதுகாப்புப் பிரிவு என்ற படைமுகாமுக்கு முன்னே நூற்றுக்கணக்கான பெண், ஆண் போராளிகள்

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மிகக் கடினமான வாழ்க்கைச் சூழலுக்குள்ளாகியிருக்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னர் எழுதியிருந்தேன். போர் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. இந்தப் போராளிகள் தடுப்பு முகாமிலிருந்து விடுதலையாகி வந்து அல்லது அரசாங்கம் பெருமிதமாகச் சொல்வதைப்போல புனர்வாழ்வு பெற்று வந்து ஐந்து ஆண்டுகளாகி விட்டன. ஆனால், வேலை வாய்ப்பில்லாமல் தங்களுடைய வாழ்க்கையை ஒழுங்கு படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். மாகாணசபையோ தமிழ்த்தேசிய அரசியலாளர்களோ அரசாங்கமோ இவர்களுக்கு உதவவில்லை என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தேன்.

(“சிவில் பாதுகாப்புப் பிரிவு என்ற படைமுகாமுக்கு முன்னே நூற்றுக்கணக்கான பெண், ஆண் போராளிகள்” தொடர்ந்து வாசிக்க…)