மறைக்கப்பட்ட வரலாறுகள்

சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் நாக அரச வம்சத்தினர் சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர்….நாக வம்சத்தினர் காலத்தில் தான் ஹரப்பா, சிந்து சமவெளி ,நகரங்கள் உருவாக்கப்பட்டு..செழிப்பாக இருந்தது…அப்போது வந்த வெளிறிய ஆரியர்கள் …இங்கு நிரந்தரமாக குடியேற வேண்டும் என ஆசைப்பட்டு…
நாக அரசர்களிடம் பணியில் அமர்ந்து சூழ்ச்சி செய்து அரசர்களிடையே பிரிவினையை உருவாக்கி…வெள்ளையர்கள் போல் பிரித்தாளும் கொள்கையை கடைபிடித்து…சில ராஜ்யங்களை கைப்பற்றினர்..

(“மறைக்கப்பட்ட வரலாறுகள்” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளுள்ள புதர்களின் மத்தியில் (அத்தியாயம் 4)

(அக்கினி ஞானாஸ்ஞானம்)

“அடோ கொட்டியா கவத ஆவே இ போம்ப மொனவத் கெனாவத’( அடோ புலி எப்ப வந்தனி குண்டு ஏதாவது கொண்டு வந்தியா) என்று கொழும்பிலுள்ள எங்கள் தலைமையகத்தில் பணிபுரியும் சிங்கள நண்பர் சிரித்தபடியே என்னைக்கேட்டுக்கொண்டு கட்டித்தளுவினார்.
“ போம்ப நவே அம்ப கெனாவ” ( குண்டு அல்ல மாம்பழம் கொண்டு வந்தனான்) என்று நான் கூறி முடிக்கும் முன்னரே சமயலறையை நோக்கிப்பறந்தார் என் நண்பர். அங்கு பணிபுரியும் பலரும் என்னைக்கண்டவுடன் சுகதுக்கங்களை விசாரித்து வன்னி நிலவரங்களை கேட்டறிந்தனர்.

(“முள்ளுள்ள புதர்களின் மத்தியில் (அத்தியாயம் 4)” தொடர்ந்து வாசிக்க…)

தங்க மகேந்திரன் அண்ணாவின் நினைவுகள்..

7௦ களின் ஆரம்பத்தில் நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் வீட்டில் கால் பதித்த பல ஆரம்பகால தமிழர் உரிமைப்போராட்ட போராளிகளில் தங்க மகேந்திரன் அண்ணாவும் ஒருவர். அதிகமாக வேஷ்டியே கட்டியிருப்பார். Trouser எப்போவாவது அணிவார். எத்தனை பேர் மத்தியில் இருந்தாலும் தங்க மகேந்திரன் அண்ணாவின் குரலும் கம்பீர சிரிப்பொலியும் எல்லோரையும் விஞ்சி நிற்கும். ஆஜானுபாகுவான தோற்றமும் இவருக்கே உரித்தானது. அக்கால இளைஞர்கள் பலரில் உடற்பயிற்சியில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.

(“தங்க மகேந்திரன் அண்ணாவின் நினைவுகள்..” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் தங்க மகேந்திரன் பற்றி போராட்ட அனுபவங்கள் – புஷ்பராணி

என் ஆரம்பகால இயக்கத்தோழர்கள் ஒவ்வொருவராக மறைவது பெரும் துன்பத்தை எனக்குத் தருகின்றது..கமிலஸ், பத்மநாபா, புஷ்பராஜா, பிரான்சிஸ் ,சந்திரமோகன் வரிசையில் இப்போது தங்கமகேந்திரன். தமிழ் இளைஞர்பேரவை, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் [TLO ..Tamil Liberation Organisation ]ஆகிய இயக்கங்கங்களில் இவரோடு இணைந்து முழுமூச்சாக இயங்கிய நாட்களை நினைத்துப்பார்க்கின்றேன்.

(“தோழர் தங்க மகேந்திரன் பற்றி போராட்ட அனுபவங்கள் – புஷ்பராணி” தொடர்ந்து வாசிக்க…)

திருமலை மைந்தன் தங்கமகேந்திரன் மறைந்தார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்க ஆரம்ப தலைமைகளில் ஒருவரான தங்கமகேந்திரன் காலமானார் என்ற செய்தியை கேட்டதும் என் நினைவுகள் பின்நோக்கி சென்றது. கிழக்கு மாகாணத்தில் வீசிய சூறாவளி புனர்வாழ்வு பணிக்கு தமிழ் அகதிகள் புனர்வாழ்வு கழகம் சார்பாக நிவாரண பொருட்களை பொதி செய்யும் வேலைக்கு எம்மை அழைத்தார் கதிரவேலு தேவானந்தா. அதே வேளை புனர்வாழ்வு வேலையில் ஈடுபட விரும்புபவரை மட்டக்களப்பு அனுப்பும் முயற்சியும் எடுக்கப்பட்டது. அப்போது மட்டக்களப்பு பிராந்திய பெற்றோலிய கூட்டுஸ்தாபன தலைவராக இருந்தவர் தேவாவின் தந்தை. சேதாரங்கள் பற்றி அறிய அவர் மட்டக்களப்பு பயணிக்க முற்பட்ட வேளை அவரது வாகனத்தில் நானும் தொற்றிக்கொண்டேன். இரத்தினபுரி பதுளை செங்கலடி ஊடான பயணம் அது.

(“திருமலை மைந்தன் தங்கமகேந்திரன் மறைந்தார்.” தொடர்ந்து வாசிக்க…)

அடக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணயம் எதிர்கொள்ளும் கோட்பாட்டுச் சவால்கள்

(இளையதம்பி தம்பையா)
(இணை அழைப்பாளர் இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்)

(இக்கட்டுரை 2014.60.2014 அன்று ‘தந்தையின் தடங்கள்’ என்ற மகுடத்தின் கீழ் வெளியிடப்பட்ட அமரர் மாணிக்கம் திருநாவுக்கரசு அவர்களின் நினைவு மலரில் வெளிவந்ததாகும். இச் சிறிய கட்டுரையானது குறிப்பாக இடதுசாரிகள் என்று சொல்லப்படுபவர்கள் சுயநிர்ணய உரிமையை நேரடியாகவும் மறைமுகமாகவும் மறுதளிக்கும் போக்குகளை அம்பலப்படுத்தும் நோக்குடன் எழுதப்பட்டதாகும். இன்று இலங்கை அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு மாற்றம் பற்றிய முன்னெடுப்புகளின் போது சுயநிர்ணய உரிமை என்ற சொல் தீண்டதகாததாக மாற்றப்பட்டுள்ளது. பழைய, புதிய பாராளுமன்ற இடதுசார்கள் மட்டுமன்றி தமிழ்த்தேசிய வாதிகளும் பெருந்தேசியவாதத்திற்கு அடிபணிந்து சுயநிர்ணய உரிமையை நிராகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, காலப் பொருத்தம் கருதி இக்கட்டுரையை உங்களுடன் பகிர்கின்றோம்.)
(“அடக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணயம் எதிர்கொள்ளும் கோட்பாட்டுச் சவால்கள்” தொடர்ந்து வாசிக்க…)

நடிகர் பாக்யராஜ் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி..!

உங்கள் மனம் கவர்ந்த மற்றொரு மகாத்மா யார்?

ஒரு மாட்டு வண்டிக்காரன் ஒரு சிறுவனை ஏற்றிக் கொண்டு போகிறான்.அவன் பேச்சோட வட்டார வழக்கிலிருந்து அவன் தீண்டத்தகாத சிறுவன் னு தெரிஞ்சதும் மாட்டை கழட்டி விட்டு வண்டியை குடை சாய்க்கிறான் வண்டிக்காரன்.
தாகத்துக்கு அந்த சிறுவன் தண்ணீர் கேட்கிறான்; அதோ அதுதான் உனக்கான தண்ணீர் னு சாலையோரப் பள்ளத்தில் தேங்கிக் கிடந்த மழைத் தண்ணீரை காட்டினாங்க..
உயர்சாதிக்காரர்கள். (“நடிகர் பாக்யராஜ் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி..!” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் மனமாற்றமும் மதமாற்றமும்

முன்னாள் புலிப் போராளி ஒருவர், தனது குடும்பத்துடன் முஸ்லிமாக மதம் மாறியுள்ளார்! இது ஒன்றும் புதினம் அல்ல. ஏற்கனவே நூற்றுக் கணக்கான முன்னாள் புலிப் போராளிகள் (பெந்தெகொஸ்தே) கிறிஸ்தவர்களாக மதம் மாறியுள்ளனர். அதற்குக் காரணம் ஆதரவின்மை, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை. (“புலிகளின் மனமாற்றமும் மதமாற்றமும்” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் அமெரிக்காவுக்கு கடன்பட்டுள்ளனர் – சர்ச்சையை ஏற்படுத்தும் புதிய புத்தகம்

புலிகள் அமெரிக்காவுக்கு கடன்பட்டுள்ளனர் என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பு 2009 ஆம் ஆண்டு முற்றாக அழிக்கப்பட்டதால், அமெரிக்காவின் எதிர்பார்ப்பு முற்றாக சிதைந்து போனதாக அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கைகளை கடுமையாக விமர்சித்து, அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் ஓய்வுபெற்ற அரசியல் ஆலோசகரான தயா கமகே என்ற முன்னாள் சிங்கள அதிகாரி இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

(“புலிகள் அமெரிக்காவுக்கு கடன்பட்டுள்ளனர் – சர்ச்சையை ஏற்படுத்தும் புதிய புத்தகம்” தொடர்ந்து வாசிக்க…)

“பணிவு” : உலகின் ஆகப் பெரிய கெட்டவார்த்தை

மோடி அரசின் நடவடிக்கைகளைப் பற்றி விமர்சிக்கும்போதெல்லாம் நான் ஒன்றைச் சொல்லி வருவதை நண்பர்கள் கவனித்திருக்கலாம். அது:

“அரசு மக்கள் மீது தன் இருப்பை மேலும் மேலும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது.”

அரசு ஒரு மிகப்பெரிய சுமையாக நம் மீது அமர்ந்திருப்பது மட்டுமல்ல, அரசை மறந்து நீங்கள் ஒரு கணமும் இருக்க இயலாது எனும் நிலையை மோடியின் ஆளுகை உச்சபட்சமாக நிலை நிறுத்துகிறது.

(““பணிவு” : உலகின் ஆகப் பெரிய கெட்டவார்த்தை” தொடர்ந்து வாசிக்க…)