அகதி வாழ்வு

(சாகரன்)
அகதி……… இன்றைய நவீன உலகத்தின் புதிய பிரச்சனை. ஆதி மனிதன் வறுமை, வறட்சி, வளம் இன்மை காரணமாக இடம் விட்டு இடம் பெயர்ந்து தமது வாழ்வை உறுதிப்படுத்தினான். அன்றெல்லாம் நாடுகள் என்ற எல்லைகள் இருக்கவில்லை. எனவே வாழ்வைத் தேடி தடையின்றி? நகரக் கூடியதாக இருந்தது. இன்று நாடுகள், தேசங்கள் என்று எல்லை வகுத்திருப்பதினால் இலகுவில் இடம் பெயர முடியவில்லை. அகதி வாழ்விற்கு பல காரணங்கள் இருந்தாலும் போர்… யுத்தம் என்பனவே முதன்மைக் காரணிகளாக அமைகின்றன. மக்கள் பாதுகாப்பைத் தேடி இடம் பெயர்ந்து அகதியாகும் போது பாதுகாப்பிற்கு சம அளவில் தமது பொருளாதார நிலைப்படுத்தலைக் கவனித்தில் கொள்கின்றனர். நாடுகளும் தமக்கு குறைந்த கூலியில் ‘பிரச்சனைகள் அற்ற” மனித வளம் தேவைப்படுவதைக் கருத்தில்; கொண்டே அகதிகளை எற்கின்றனர். ஆனால் நாடுகள் மனிதாபிமானம், உதவுதல் போன்ற கோஷங்களையே முன்னிலையில் வைக்கின்றனர் இலங்கைத் தமிழரான நாங்களும் எமது மொழி, காலச்சாரம், பழக்க வழக்கம் போன்றவற்றுடன் ஒத்திசையும் தமிழ் நாட்டிற்கு அகதிகளாக இடம் பெயருவதை விட மேற்கத்திய நாடுகளுக்கு பொருளாதார உறுதிப்பாட்டை சீர்தூக்கிப் பார்த்து அகதிகளாக இடம்பெயர விரும்புகின்றனர். இல்லாவிடின் நாம் இந்தியாவின் தமிழ் நாட்டிற்கே அதிகம் இடம்பெயர்ந்து இருந்திருப்போம். இதுவே இன்று சிரியா போன்ற நாட்டிலும் நடைபெறுகின்றது. போர்கள் நிறுத்தப்படாத வரைக்கும் அகதிகள் உருவாதல் நிறுதப்பட முடியாது. குறைந்த கூலியில் மனித வளம் தேவைப்படும் வரை யுத்தங்களும், அகதிகள் பிரச்சனைகளையும் முதலாளித்துவ நாடுகள் தக்க வைத்துக்கொண்டே இருக்கும்

மதம்பினித்த யானையும் மனிதனும் ஒன்றுதான்.

“எனது வாழ்நாளிலேயே மதம் என்பது முற்றிலுமாக அழிந்து போக வேண்டும் என்று நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்”
மதத்தினால் தூண்டுதல் பெற்றோம் என்று கூறிக் கொள்பவர்களுக்கு அளவுக்கு அதிகமாக அனுதாபம் காட்டப்படுகிறது. வெறும் வெறுப்பின் அடிப்படை யிலேயே செயல்படும் மக்களுக்கு இத்தகைய அனு தாபம் காட்டப்படக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். மிகவும் ஆழமாகச் சிந்திக்கப்பட்டு வெளியிடப்பட்ட கருத்தாகவே இதனைக் கருத வேண்டும். மதம் மனிதனுக்குப் பிடித்தாலும் சரி, மிருகங் களுக்குப் பிடித்தாலும் ஆபத்தானதுதான். இதில் உள்ள கெட்ட வாய்ப்பு என்னவென்றால் மதத்தைப் பற்றி விமர்சிக்கவே கூடாது என்று செய்து வைத்திருக்கும் மோசமான ஏற்பாடாகும்.

(“மதம்பினித்த யானையும் மனிதனும் ஒன்றுதான்.” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையில் சுமந்திரன் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். தமிழகத்தில் திருமுருகன் காந்தி யார்?

சுமந்திரன் மீது விமர்சனம் ஒருபுறம் இருக்கட்டும்.
அவரை விமர்சிக்க வேண்டியவர்கள் வாக்களித்த மக்களும் ஈழ தமிழர்களுமே! புலத்திலும், உள்நாட்டிலும் அரசியல்வாதிகளாலும்
ஊடகங்களினாலும்மோசமான விமர்சனங்களை கடந்து, மக்கள் ஆதரவினால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்.
அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.

(“இலங்கையில் சுமந்திரன் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். தமிழகத்தில் திருமுருகன் காந்தி யார்?” தொடர்ந்து வாசிக்க…)

என் நண்பனே மீண்டும் எழுந்து வருவாயோ…..?

தங்கம்(ன்) என் பால்ய நண்பன். இன்றுவரை தொடரும் நட்பு. மெலிதாக பேசும் சுபாவம். என் நட்புடன் கூடவே எனது சமூக விடுதலைக் போராட்டத்திலும் என்னோடு பயணித்தவன். நான் புலம் பெயர்ந்து வேறு தேசங்களில் வாழ்ந்த போதும் தொடர்ந்து தேடித் தேடி நட்பை, தோழமையைப் பாராட்டியவன். புலம் பெயர் தேசத்தில் பண்டிகைகளை நான் மறந்திருந்போதும் வாழ்த்துக்கள் கூற என்னை தொடர்ந்து அழைத்த வண்ணம் இருந்தவன். கடைசியாக ஊருக்கு போன போதும் என் கரம் பற்றி ‘…எனக்குத் தெரியும் நீ சாமி கும்பிடுவது இல்லை….’ என்று கூறியபடி…. எனக்காக தன்னுடன் தனது வீட்டிற்கு அருகில் உள்ள சிறிய கோவிலுக்கு அழைத்துச் சென்றவன். பிரசாதத்தை தந்து இதனை ஏற்பாயா என்று அன்புடன் என்னை ஏற்க வைத்தவன். இருதய நோயால் பாதிக்கப்பட்ட போது உதவி கேட்டு பதிலுக்கு காணியை தருகின்றேன் என்று கூறியபோது என்னிடம் ஏச்சு வாங்கியவன். பின்பு என்னுடன் இணைந்த அவரின் நண்பர்களும், ஊரவர்களும் இணைந்து உதவியதில் அறுவைச் சிகிச்சை மூலம் ஆரோக்கியம் பெற்றவன். ஒவ்வொரு வருடமும் தனக்கு மீள்வாழ்வு தந்தவர்களை (பண உதவி செய்தவர்களை) நன்றியுடன் தவறாது கடித மூலமும், தொலைபேசி மூலமும் அழைத்து அளவளாவி நன்றி பகிர்ந்து மகிழ்ந்தவன். உதவி வேணுமா?… என்றால் தயங்கி ‘வேண்டாம்’ என்பதே இவன் பதில் இதனை மீறி உதவிகள் செய்த போதெல்லாம் மறு தினமே தொலைபேசியில் அழைத்து என்னை அன்புடன் நலன் விசாரித்து அன்பு பாராட்டியவன். பால்ய நட்புக் காலத்தில் தனது வீட்டிற்கு அழைத்து தேனீர், சாப்பாடு படைத்த அந்த நாட்களும், தனது வீட்டு முற்றத்தில் இருந்த திராட்சைப் பழங்களை ஆய்ந்து எங்களுடன் உண்டு மகிழ்ந்தவன். வேட்டி, சாரம் என்பதை மட்டும் அணியும் பழக்கம் இருந்தாலும் எனது பல்கலைக்கழக அறையிற்கு ‘விசிட்’ அடித்து அளவளாவிச் சென்றவன். கூடவே கிராமத்து இனிய உணவுகளை உடன் எடுத்து வந்து எனக்கு பரிமாறி மகிழ்நதவன். இந்த இழப்பு என்னை சற்றே நிலை குலையத்தான் செய்து விட்டது. அடுத்த முறை ஊருக்கு வரும் போது உன்னைத் தேடி என் கால்கள் நிச்சயம் உன் வீடு வரும்… ஆனால் நீ அங்கில்லை என்பதால் என் கணகளில் நீர்த் துளிகளை நான் காணிக்கையாக உனக்கு தருவதை என்னால் தவிர்க்க முடியாது அல்லவா என் நண்பனே. உன் நினைவுகள் என்றும் என்னுடன் பயணித்துக்கொண்டே இருக்கும்.(சிவா ஈஸ்வரமூர்த்தி)

முறிந்து பனை ரஜனியை நினைவு கூரவோம்

முறிந்து பனை ரஜனியை நினைவு கூரவோம். விஷணுபிரியாவும் எதையோ உணர்த்திவிட்டுத்தான் மறைந்துள்ளாரோ? ரஜினி திரணகமவின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாகின. விஷ்ணுப்பிரியா சொல்ல வந்தது, இந்த ஜனநாயக அரசின் அங்கங்கள் ஜனநாயக விரோத பாசிச சக்திகளால் ஆட்டுவிக்கப்படுகின்றன. சட்டம் தன் கடமையைச் செய்ய இயலாத நிலை. இந்திய மக்களே, நான் இந்த ஜனநாயக்க் குடியரசின் அடையாளம். எனது நிலையில் நமது சட்டம் சார் அரசு உள்ளது. என்பதை உணர்த்திய செயல். பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் தன் தன் கொலையை தானே அறிவித்தார். அவரைக் காக்க வேண்டிய அதிகாரம் விஷ்ணுப்பிரியா. அவரும் தற்கொலை. இரண்டுமே திருச்செங்கோடு. இரண்டிற்குமே காரணம் சட்டம் அல்ல. சட்டத்தின் இயலாமை. இந்தியத் தாலிபான் ஆர்எஸ் எஸ் .நான் சொல்வதைப் புரிந்து கொள்ள மீண்டும் வாசிப்போம் முறிந்த பனை
(Kanniappan Elangovan)

ஒலுவில் கடற்கரையும் கீரைக்கடை அரசியலும்

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டுமென்று சொல்வார்கள். ஓர் ஊரில் ஒரேயொரு கீரைக்கடை மட்டுமே இருந்தால் அவரே தனியுரிமை உள்ள வியாபாரியாக இருப்பார். விலையை ஏற்றி விற்றாலும் பழுதடைந்த கீரையையே கொண்டு வந்து தந்தாலும் யாரும் கேட்க முடியாது. ஆனால், அவரது கடைக்கு அருகில் இன்னுமொரு கீரை வியாபாரி கடையைப் போட்டுவிட்டால் நிலைமைகள் மாறிவிடும். போட்டி வியாபாரச் சூழல் என்பதால் குறைந்த விலையில் தரமான பொருட்களை விற்பதற்கு இருவரும் நான் முந்தி, நீ முந்தியென செயற்படுவார்கள். இதனால் வாடிக்கையாளர்களுக்கு நல்லது நடக்கும். ஒலுவில் பிரதேசம் பற்றி எல்லோருக்கும் தெரியும். அம்பாறை மாவட்டத்தின் கரையோரத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தை இரண்டு விடயங்களால் முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ர‡ப் அழகுபடுத்தினார். ஒன்று, தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றையது, ஒலுவில் துறைமுகம். இவற்றுள் ஒலுவில் துறைமுகம் பல சமூக, புவியியல் எதிர்விளைவுகளை தோற்றுவித்திருக்கின்றது. தலைவர் அஷ்ர‡ப் ஒலுவில் வெளிச்சவீட்டை திறந்து வைத்த போது, உண்மையில் விடயமறியா மக்கள் அதனை துறைமுகம் என்றே பேசிக் கொண்டனர். அதனைப் பார்ப்பதற்கு அயல்; ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் இரவுபகலாக வந்து சென்றது ஞாபகமிருக்கின்றது.

(“ஒலுவில் கடற்கரையும் கீரைக்கடை அரசியலும்” தொடர்ந்து வாசிக்க…)

ஜெனீவாவில் இந்தியாவின் நிலை என்ன?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் ஒன்றிலேயே இடம்பெற்றிருக்கிறது. ஒரு பக்கத்தில் ஐ.நா விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டுள்ள சூழல், இன்னொரு பக்கத்தில், ஜெனீவாவில் அந்த அறிக்கை தொடர்பான விவாதங்கள் நடக்கவுள்ள சூழல், மற்றொரு புறத்தில் இந்த அறிக்கையின் தொடர்ச்சியாக இலங்கை தொடர்பான அடுத்தகட்ட நகர்வு என்ன என்று சர்வதேச சமூகம் தீர்மானிக்கவுள்ள சூழல். இந்தப் பின்னணியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புதுடெல்லிப் பயணத்தின் போது, இந்த விவகாரம் குறித்து இந்தியத் தரப்புடனான பேச்சுக்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

(“ஜெனீவாவில் இந்தியாவின் நிலை என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

முகப்பு புத்தகத்தில் கருத்துப் பரிமாற்றம்…… அனந்தியே ஒரு போர் குற்றவாளி….

நல்லாட்சித் தத்துவம் எனக் கூறிக்கொண்டு சமாதானப் புறாவாக வலம்வருகின்ற முன்னாள் ஜனாதிபதி சந்தி ரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் போர்க் குற்றவாளி தான் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். அனந்தியே ஒரு போர் குற்றவாளி…. – Ratnasingham Annesley
புலிகளுக்கும் ஏனைய விடுதலை அமைப்புக்களுக்கும் இடையே உள்ள பாரிய வேறுபாடு புலிகள் பொது மக்களையும் மாற்றுக் கருத்தாளர்கள் மாற்று விடுதலை விடுதலை அமைப்பினரை தமது இயக்கத்தின் கொள்கையாக பிரகடனப்படுத்தி செயற்படுத்தினர். ஸ்தாபன மயப்படுத்தியே செய்தனர். மற்றைய இயக்கத்தினர் இவற்றை தமது நடைமுறைத்தவறுகளுடூ செய்திருக்கின்றனர்.

(“முகப்பு புத்தகத்தில் கருத்துப் பரிமாற்றம்…… அனந்தியே ஒரு போர் குற்றவாளி….” தொடர்ந்து வாசிக்க…)

90 களின் பின்னர் யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை

உங்கள் வாழ்வில் நீங்கள் உண்ட ஆகச்சிறந்த உணவு எது என்று எப்போதாவது யோசித்துப்பார்த்து இருக்கின்றீர்களா? அந்த உணவை ஆக்கிய முகத்தை உங்களால் நினைவுக்குக் கொண்டுவரக்கூடியதாக உள்ளதா? எப்போதாவது அந்த உணவை ஆக்கியவர்களைத் தேடிச்சென்று பாராட்டுத் தெரிவித்தது உண்டா? பொதுவாக எல்லாருக்கும் எப்போதும் வீட்டுச் சாப்பாடோ, அம்மாக்கள் தயாரித்த உணவுகளோ, மனைவியர் கைப்பக்குவமோ, அரிதான சிலருக்கு தந்தையரின், கணவன்மார்களின், நண்பர்களின் கைப்பக்குவமோ அல்லது வேறும் ஏதோ ஒரு உறவு தயாரித்த உணவுகளோ பிரியமானதாக இருக்கும். இன்னும் சிலருக்கு அதைவிடுத்து நாம் உணவுண்ட சாப்பாட்டுக்கடைகளின், தேநீர்க்கடைகளின், உணவு வண்டிகளின், இனிமையான பொழுதுகளை மீளநினைவூட்டும் குளிர்பானச்சாலைகளோ கூட இந்தக் கேள்விகளுக்குப் பதில்சொல்வதாக அமையக்கூடும்.

(“90 களின் பின்னர் யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை” தொடர்ந்து வாசிக்க…)

வாரம் ஒரு ஆய்வாளர் பகுப்பாய்வு 3: DBS. ஜெயராஜ்.

1999 ம் ஆண்டுDBS Jeyaraj உடன் நான் (நட்சத்திரன் செவ்விந்தியன்) பேசிய நீண்ட தொலைபேசி உரையாடலில் DBS Jeyaraj மனந்திறந்து
பேசினார். புலிகளின் அனைத்துலக பொறுப்பாளராக
லண்டனில் இருந்த கேணல் கிட்டுவிடம் அனுமதிபெற்றே தான்
ராஜீவ் காந்தி கொலைகாரன் ஒற்றைகண் சிவராசன் பற்றிய
Profile விபரங்களை Frontline(The Hindu)இலும் Lanka Guardian இலும் எழுதினார் என்பதை ஒப்புகொண்டதோடு அந்த சனவரியில் கிட்டு
கொல்லப்பட்டபின் திலகர் அனைத்துலக பொறுப்பெடுத்த
பின்னர் பெப்ரவரி காதலர் தினத்திலேயே திலகரின் மிரட்டல்களுக்கு பிறகே தான் தாக்கப்பட்டதை ஒப்புவித்தார்.

(“வாரம் ஒரு ஆய்வாளர் பகுப்பாய்வு 3: DBS. ஜெயராஜ்.” தொடர்ந்து வாசிக்க…)