அதிபர், ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம் தவிர்க்கவியலாதது

(பஸ்தியாம்பிள்ளை ஜோண்சன்)

இலங்கை அதிபர், ஆசிரியர் சேவைகளைச் சேர்ந்த, அதிபர்களதும் ஆசிரியர்களதும் தொழிற்சங்கப் போராட்டம், தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. பெரேரா ஆணைக்குழுவின் சம்பள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்ற கோரிக்கை உட்பட, ஆறு கோரிக்கைகளை முன்வைத்து, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

செரினா

செரினாவை நினைத்தவுடன் எனக்கு ஞாபகத்திற்கு வருகிற முதல் காட்சியென்பது, குக்கூ நிலத்தின் மண்கட்டிடத்துள் ஒரு சிறு அகல்விளக்கு முன்பாக, நான்கைந்து மணிநேரங்கள் முழங்காலிட்டுப் பிரார்த்தித்த குரலும், கண்ணீரோடு கூடிய விம்மல் சத்தமும் சேர்ந்த அன்றைய தினம்தான்! ஆனந்த விகடன் இதழால் சாத்தியமடைந்துள்ள இக்காணொளி, மனதிற்குள் மிகுந்த நெகிழ்வையும், பரவசத்தையும், நம்பிக்கையையும் உண்டாக்குகிறது. இதனை நிகழ்த்தித்தந்த தோழமை வெ. நீலகண்டன் அவர்களுக்கு எங்கள்கரங்குவிந்த நன்றிகள்!

முடக்கத்துக்குள் சாதனை

(வ. சக்திவேல்)

“பயன்பாட்டுக்கு உதவாமல், கழிக்கப்பட்ட பொருட்களை வைத்துக் கொண்டு, அதாவது, இரண்டு சக்கர உழவு இயந்திரத்தின் எஞ்சின், கியர் பெட்டி, போன்றவற்றையும் ஏனைய உதிரிப்பாகங்களையும் தேடி எடுத்து, முற்றாக புதிய வடிவிலான, சிறிய அளவிலான உழவு இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளேன். குறைந்த அளவில் விவசாயம் செய்பவர்களுக்கு, இந்த உழவு இயந்திரம் உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இதனை மேற்கொண்டேன். நான் உருவாக்கிய இந்தப் புதிய உழவு இயந்திரத்திரத்துக்கு, அரசாங்கம் அதற்குரிய பதிவுச் சான்றிழைப் பெற்றுத்தந்தால், மென்மேலும் விவசாயத்துக்குத் தேவையான கருவிகளையும் இயந்திரங்களையும் உருவாக்க முடியும்” என்கிறார், மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி கோகுலரஞ்சன்.

எங்கே இந்தக் கிராமங்கள்?

(க. அகரன்)

ஓர் இனம் வாழ்ததற்கான அடையாளங்களாக, பல்வேறு சான்று பொருட்கள் அந்தப் பிரதேசங்களில் காணப்படும். அவற்றை வைத்தே வரலாற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வேட்டி பற்றிய கனவு

(மொஹமட் பாதுஷா)

‘வேட்டி பற்றிய கனவில் மூழ்கியிருந்த போது, கட்டியிருந்த கோவணமும் பறிபோனது’ என்ற முதுமொழிக்கு ஏற்ப, தற்போது அரசியல், சமூக, பொருளாதார பரப்புகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவும் அதனால், மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள அவதிகளும், அச்சொட்டாக பொருந்திப்​போவதுபோன்ற போக்குகளே காணப்படுகின்றன.  

சொந்த நாட்டின் ஏதிலிகள்

(க. அகரன்)

தமிழர் வாழ்வில் புலம்பெயர்தல் என்பது தவிர்க்கமுடியாத வரலாறாகிப்போயுள்ள நிலையில் இந்தியாவுக்கும் பலரும் இடம்பெயர்ந்திருந்தனர். சுமார் 30 வருடங்களாக இந்தியாவில் மூன்றாவது சந்ததியுடன் வாழும் இலங்கைத் தமிழர் தொடர்பில் தற்போது பேசுபொருள் உருவாகியுள்ளது.

வறுமை ஒழிப்பு புரட்சியை ஏற்படுத்திவரும் பசுமை இல்லம்

(வ. சக்திவேல்)

புலம் பெயர் உறவுகளின் ஒத்துழைப்புடன் வடக்கு-கிழக்கு முழுவதும் இயங்கிவரும், ‘பசுமை இல்லம்’ எனும் அமைப்பால் கொவிட் – 19 உக்கிரமடைந்துள்ள இக்காலத்தில், மக்கள் வீட்டிலிருக்கும்போது வீணாக பொழுதைக் கழிக்காமல், வீட்டுத் தோட்டப் பயிற்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நல்லின பயிர் கன்றுகள் வழங்கப்பட்டு வரப்படுகின்றன.

மயக்கம் தரும் அவசரகாலச் சட்டம்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

அத்தியாவசிப் பொருட்களின் சீரான விநியோகத்தை நோக்கமாகக் கூறி, ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி, அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பிறப்பித்தார். ஆனால், அதன் முக்கியத்துவத்தையோ பாரதூரத் தன்மையையோ, தமிழ்ப் பத்திரிகைகள் தவிர்ந்த இந்நாட்டின் ஏனைய ஊடகங்கள் காணவில்லைப் போலும்!

மம்மூட்டி

(Rathan Chandrasekar)

இப்போது அல்ல. 87, 88 இருக்கும்.
தூர்தர்ஷனில் மம்மூட்டியை நேர்காணுகிறார்கள்.
சினிமா எனக்குத் தொழில். என்னை ரசிக்கலாம். ஆராதிக்கக்கூடாது என்கிற மாதிரியே சென்றுகொண்டிருந்த அந்தப் செவ்வியில் – அவரை “கேரளத்தின் சூப்பர் ஸ்டாரான நீங்கள்….” என்றபடி, எதுவோ கேட்க முற்படுகிறார் நேர்காணுகிறவர்.
மம்மூட்டி சொல்கிறார் :
“நான் கேரள சினிமாவின் சூப்பர் ஸ்டார் அல்ல. மோகன்லால்தான் அங்கே சூப்பர் ஸ்டார்!”

மறைந்திருக்கும் வெடிபொருட்கள்: இன்னும் அதிரும் மண்

(சுப்பிரமணியம் பாஸ்கரன்)

இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இடம் பெற்ற உள்நாட்டு போரிலும், போருக்கு பின்னரான காலத்திலும் கண்ணிவெடிகளின் ஆபத்து சவால் மிக்கதாகவே உள்ளது.