அருமையான திட்டம்!

“அட்சய பாத்திரம்” என்ற பெயரில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சமுதாய குளிர்சாதன பெட்டியை மாநகராட்சி புதிய அலுவலக வளாகத்தில் நேற்று (17.10.2017) மாநகராட்சி ஆணையர் டாக்டர். அல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் துவக்கி வைத்தார்கள். இந்த குளிர்சாதன பெட்டியில் நம் வீட்டில் சமைத்து மீதமான உணவு பொருட்கள், (கெட்டுப்போனது அல்ல) பழங்கள், பேக்கிங் செய்யப்பட்ட உணவு பண்டங்கள் போன்றவைகளை இங்கு கொண்டு வந்து வைக்கலாம்.

(“அருமையான திட்டம்!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் தேசிய அரசியல் மூலம் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவே இல்லை!

(ரி. தர்மேந்திரன்)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் அப்பாவித் தமிழ் மக்களை ஏமாற்றுவனவாக உள்ளன, 1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தை கொண்டு வந்து அடுத்த தேர்தல் தமிழீழத்தில்தான் நடக்கும் என்று சொல்லி இளைஞர்களை உசுப்பேற்றினார்கள். கடைசியில் தமிழீழமும் கிடைக்கவில்லை, தமிழர்களுக்கு எந்த தீர்வும் கிட்டவில்லை, தமிழ் தேசிய அரசியல் மூலமாக இது வரை தமிழ் மக்களுக்கு எந்தவொரு உரிமையும் கிடைக்க பெறவில்லை என்பதோடு எந்தவொரு அபிவிருத்தியும் கிட்டவில்லை என்பதும் பெருங்கவலைக்கு உரிய விடயங்கள் ஆகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச முன்னாள் உப தவிசாளருமான பொறியியலாளர் வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி வழங்கிய சிறப்பு பேட்டியில் தெரிவித்தார். இவருடனான நேர்காணல் வருமாறு:-

(“தமிழ் தேசிய அரசியல் மூலம் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவே இல்லை!” தொடர்ந்து வாசிக்க…)

மோடிக்கு மாற்றாக வருகிறார் ராகுல்?

(எம். காசிநாதன்)
250 சட்டமன்றத் தொகுதிகளுக்கு குஜராத்திலும் ஹரியானாவிலும் நடைபெறப் போகும் சட்டமன்றத் தேர்தல் பிரதமர் நரேந்திரமோடியின் செல்வாக்கு சரிந்துள்ளதா, விரிவடைந்துள்ளதா என்பதை வெளிப்படுத்தும் “மந்திரக்கோலாக” இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் 182 தொகுதிகளுக்கும், இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டமன்ற தொகுதிகளும் இரு இந்திய தலைவர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகின்றன.

(“மோடிக்கு மாற்றாக வருகிறார் ராகுல்?” தொடர்ந்து வாசிக்க…)

பாலன் தோழரின் பதிவின் நகல்.

அந்த கையில் கட்டப்பட்டிருக்கும் மணிக்கூடு
இப்பவும் டிக் டிக் என அடித்துக்கொண்டே இருக்கிறது!
17.04.2000 யன்று பாதர் இமானுவேல் அடிகளார் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களுக்கு எழுதினார் “தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க துணிச்சலுடனும் முதுகெலும்புடனும் நீங்கள் செயற்பட வேண்டும் இல்லையேல் அரசியலில் இருந்து ஒதுங்குங்கள்”. இக் கடிதத்தை பாதர் முதுகெலும்புடன் எழுதும்போது அவர் கையில் இருந்த மணிக்கூடு டிக் டிக் என அடித்துக்கொண்டிருந்தது.

(“பாலன் தோழரின் பதிவின் நகல்.” தொடர்ந்து வாசிக்க…)

அவர் வாழும் போதே வாழ்த்துங்கள் தோழர்களே !…….

எமது முப்பாட்டன் மகாகவி பாரதியார் பற்றி படிக்கும் போதெல்லாம் என்மனம் துடிக்கும். வாழும் போது மட்டுமல்ல அவரின் சாவின் போதும் கலந்து கொண்டவர் எண்ணிக்கை பற்றிய செய்தி அறிந்து. பிராமண சமூகத்தின் திமிர் அதி உச்சத்தில் இருந்த வேளை அதை துச்சம் என தூக்கி எறிந்து மற்ற சமூகத்தின் எச்ச நிலையை எடுத்து இயம்பியவர் அவர்.

(“அவர் வாழும் போதே வாழ்த்துங்கள் தோழர்களே !…….” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் கைதிகளை மறந்து மோதிக்கொள்ளும் அரசியல்வாதிகள்

(கே. சஞ்சயன்)
அநுராதபுர சிறைச்சாலையில், மூன்று அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், மூன்றாவது வாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், அதை வைத்து அரசியல் நலன் தேடுவதற்காக இன்னொரு போராட்டமும், தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது. வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்த தமது விசாரணைகள், திடீரென அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதைக் கண்டித்தும், மீண்டும் தமது வழக்குகள் வவுனியாவிலேயே விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கோரியே, மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

(“அரசியல் கைதிகளை மறந்து மோதிக்கொள்ளும் அரசியல்வாதிகள்” தொடர்ந்து வாசிக்க…)

‘தாய்வான், தனிநாடாக பிரிவதற்கு அனுமதியோம்’

சாப்தத்துக்கு இரண்டு தடவைகள் இடம்பெறும், சீன ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், தமது நாட்டிலிருந்து தாய்வான் பிரிவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என, உறுதியாக அறிவித்துள்ளார். பெருத்த எதிர்பார்ப்புடன் ஆரம்பித்த இந்த மாநாட்டில், நாட்டைக் கொண்டு செல்வதற்கான தனது தூரநோக்குப் பார்வையை, ஜனாதிபதி ஸி வெளிப்படுத்தினார். ஏறத்தாழ மூன்றரை மணித்தியாலங்கள் நீடித்த உரை, பல்வேறு விடயங்கள் பற்றியும், தனது கவனத்தைச் செலுத்தியிருந்தது.

(“‘தாய்வான், தனிநாடாக பிரிவதற்கு அனுமதியோம்’” தொடர்ந்து வாசிக்க…)

பொய்மைகளாலும் புரட்டுக்களாலும் கட்டமைக்கப்படும் வாய்ப்புவாதப் பாராளுமன்ற அரசியல் அடித்தளத்தை 6வது திருத்தச் சட்டம் பற்றிய தெளிவே உடைத்துச் சுக்குநூறாக்கி விடும்

எப்போதுமே எதையுமே தொடக்கத்தில் இருந்தே சொல்லவேண்டியிருப்பதே ஒருவகை வரலாற்று அவலம் என்பார்கள். எனினும் அரசியல் வரட்சி தலைவிரித்தாடும் ஈழத் தமிழர்களின் அரசியல் வெளியில் அரசியல் பாலபாடத்தில் கூடத் தேர்ச்சி பெறும் தகைமையில்லாதோரெல்லாம் முகநூலில் சொட்டைப் பதிவுகளிட்டு ஆய்வாளர்களாகிப் போன துன்பியற் சூழலில் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே எடுத்துச் சொல்ல வேண்டியது வரலாற்றுக் கடமை என்றாற் போலாகிவிட்டது. அஃதில்லையெனில் புரட்சிகர சக்திகளாக அணியமாக வேண்டிய தமிழ் இளையோர்கள் பாராளுமன்ற அரசியற் பித்தலாட்டக்காரர்களுக்கான ஓட்டுப் பொறுக்கிகளாக அலையும் துயரத்தை மாற்றியமைக்க வழியிராது. பாராளுமன்ற அரசியலின் கையாலாகாத்தன்மையைக் குறிப்பிட்ட ஒரு கட்சியின் இரண்டகமாகக் கதையளப்பவர்கள், தாம் அவ்வழி நின்று எதுவெல்லாம் செய்வோமெனக் கூற அதையே நம்பி ஏமாறும் இளவட்டங்களும் அரசியல் வரட்சியில் உலவித் திரியும் ஒரு சில முதியோரும் இனியும் ஏமாறாதிருக்க 6 ஆம் திருத்தச் சட்டத்தை அவர்கள் கூடுமிடங்களில் பேசு பொருளாக்கியே தீர வேண்டுமென்றெண்ணி அது குறித்துத் தொட்டுச் சென்று அரசியற் தெளிவூட்டுவதை இப்பத்தி முதன்மை நோக்காகக் கொண்டுள்ளது.

(“பொய்மைகளாலும் புரட்டுக்களாலும் கட்டமைக்கப்படும் வாய்ப்புவாதப் பாராளுமன்ற அரசியல் அடித்தளத்தை 6வது திருத்தச் சட்டம் பற்றிய தெளிவே உடைத்துச் சுக்குநூறாக்கி விடும்” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் !

ஆனால் முஸ்லிம்களைப் பொருத்தவரை வடக்கிலும் கிழக்கிலும் நிலத் தொடர்பற்ற முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கி முஸ்லிம் மாகாண சபை ஒன்றை நிறுவுவதோ அல்லது நிர்வகிப்பதோ நடைமுறையில் மிகுந்த சவாலான விடயமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்கள் தெற்கிலே சிங்கள சமூகத்துடன் வாழும் நிலையில் தமிழர் தரப்பினரின் தாயக் கோட்பாட்டை , சுய நிர்ணயக் கோட்பாட்டை அடியொற்றி முஸ்லிம் “தாயக “, “தன்னாட்சி” கோட்பாடுகளைக் கொண்டு சுயாட்சி அலகு கோருவதென்பது நடைமுறையில் சாத்தியமானதா என்பது மிக முக்கிய கேள்வியாகும்.

(“வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் !” தொடர்ந்து வாசிக்க…)

மைத்திரியின் யாழ். வருகையும் எதிர்வினையும்

(புருஜோத்தமன் தங்கமயில்)
புறக்கணிப்புகள், சத்தியாக்கிரகங்கள், ஊர்வலங்கள் என்பவற்றை மேற்கொள்வதற்கு என்று சந்தர்ப்பங்கள் உள்ளன. எடுத்ததற்கெல்லாம் அவற்றை செய்யப்போனால், அவற்றுக்குரிய மதிப்பும் பெறுமானமும் குறைந்துவிடும். இந்தப் போராட்டங்கள் அனைத்தும் என்னுடைய ஆட்சியில்தான் நடைபெறுகின்றன. முந்தைய ஆட்சியில் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற்றிருந்தால், வெள்ளை வானில் வந்து பிடித்துக் கொண்டு சென்றிருப்பார்கள்”. கடந்த மார்ச் மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ‘ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்’ நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

(“மைத்திரியின் யாழ். வருகையும் எதிர்வினையும்” தொடர்ந்து வாசிக்க…)