இலங்கைக்கு ஐ.நா எச்சரிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகிற நிலையில், ஐ.நா. சபை முக்கிய அறிவிப்பு ஒன்றை இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐ.நா சபை,

இராஜினாமாவை ஏற்க ஜனாதிபதி மறுப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ள இரண்டு இராஜினாமா கடிதங்களை ஏற்க மறுத்துவிட்டார். பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் ராமநாதன் ஆகியோரினால் அனுப்பிவைக்கப்பட்ட இராஜினாமா கடிதங்களையே ஜனாதிபதி ஏற்க மறுத்துவிட்டார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்றிரவு இடம்பெற்ற சந்திப்பின்போதே, ஜனாதிபதி அது தொடர்பில் அறிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிராக வேலைநிறுத்தம்

அரசாங்கத்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை (08) இரண்டு மணி நேர அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் அறிவித்துள்ளது.

நிபுணர்கள் குழுவை நியமித்தார் ஜனாதிபதி

பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக புகழ்பெற்ற நிதி மற்றும் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

தேர்தலுக்கு செல்லலாமா?

அரசாங்கத்திடமே பெரும்பான்மை உள்ளது. அவ்வாறு பெரும்பான்மை இல்லையென்பதை நிரூபித்தால், பாராளுமன்றத்தை கலைப்பதற்கான யோசனையை நிறைவேற்றி தேர்தலுக்கு செல்ல முடியுமென சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

‘பெரு’ நாட்டிலும் வெடித்தது மக்கள் போராட்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதேவகையில், பெரு நாட்டிலும் பெட்ரோல் டீசல் விலை ஏற்றம், சுங்க கட்டணம் விலை உயர்வு உள்ளிட்டவற்றை எதிர்த்து மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். இதனால் அங்கும் ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானிலும் இதே நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிக்கிக்கொண்டார் அமைச்சர் டக்ளஸ்

கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத்தில் உள்ள காரியாலயத்தில் சிக்கிக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் பல மட்டங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. யாழ். பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் மாணவர்கள் மட்டுமன்றி சிங்கள மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் காரியாலயத்தை சுற்றி வளைத்தமையால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அந்தக் காரியாலத்துக்குள் சிக்கிக்கொண்டுள்ளார் என அறியமுடிகின்றது.

(Tamil Mirror)

பதவியை துறந்தார் ஜீவன்

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பதவியை இராஜினாமா செய்துவிட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறினார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(04) இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் கட்சியாக ஒரு தீர்மானம் எடுத்து தாம் பதவி விலகுவதற்கு முடிவெடுத்துள்ளதாகவும், அதற்கான கடிதம் ஏற்கனவே பிரதமருக்கு அனுப்பப்பட்டு, ஜனாதிபதி அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜீவன் தொண்டமான் ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார்.

கூட்டமைப்பும் நிராகரித்தது

தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘எங்களுக்கும் வலி தெரியும்’ – நெருக்கடியிலும் உக்ரைன் சுற்றுலா பயணிகளுக்கு உதவும் இலங்கை மக்களின் மனிதம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் இலங்கைத் தீவில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களுக்கு இலங்கைவாசிகள் உதவி வருகின்றனர்.