ரஷ்ய அதிபரின் அதிரடி உத்தரவு

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் ரஷ்ய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று ரஷ்ய அதிபர் விலாதிமிர் புடின் கூறியுள்ளார். இதேவேளை, உக்ரைன் இராணுவத்தை ஆயுதங்களைக் கீழே போடுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். “நான் ஒரு இராணுவ நடவடிக்கையின் முடிவை எடுத்துள்ளேன்,” என்று அவர் தொலைக்காட்சி   அறிக்கையில்  கூறினார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு  பிப்ரவரி 19 அன்று தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் சராசரியாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிக பட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதமும், குறைந்தப்பட்சமாக சென்னையில் 43.59 சதவீதம் வாக்குகளும் பதிவானது. 

உக்ரேனுக்குள் படைகளைச் செல்ல உத்தரவிட்ட புட்டின்

கிழக்கு உக்ரேனிலுள்ள பிரிந்த இரண்டு பிராந்தியங்களான டொனெஸ்டெக், லுகன்ஸ்க்க்கு படைகளைத் தரையிறக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார். இரண்டு பிராந்தியங்களையும் நேற்று முன்தினம் அங்கிகரித்ததைத் தொடர்ந்தே இந்நடவடிக்கையை ஜனாதிபதி புட்டின் மேற்கொண்டுள்ளார்.

உக்ரைன் அவசர நிலையை பிரகடனம் செய்தது

உக்ரைன் நாடு தழுவிய ரீதியில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. உக்ரைன் நாட்டின் உயர் பாதுகாப்பு அதிகாரி உக்ரைன் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார். டொனஸ்க் மற்றும் லஹான்ஸ் மாகாணங்களை தவிர்த்து இந்த உத்தரவு நாடு முழுவதும் உள்ளடங்கும். 

இயற்கை உரப் பாவனை குறித்து விழிப்புணர்வு

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாய நடவடிக்கையை மேற்கொள்ளுதல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு, இலங்கை இராணுவத்தின் கட்டை பறிச்சான் 223 படைப் பிரிவினரால் இன்று (22)   நடத்தப்பட்டது.

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா தொற்றாளர் தொகை அதிகரிப்பு. நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,283 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 639,297 ஆக அதிகரித்துள்ளது.

ஜெயக்குமாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில்  வைக்க எழும்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடந்தது. அன்றைய தினம் ராயபுரம் தொகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஒருவரை அதிமுகவினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கத் தொடங்கினர்.

ஐ.தே.க முன்னாள் எம்.பியுடன் மைத்திரி சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனை, முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பியுமான மைத்திரிபால சிறிசேன, சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

“தலைவர் பிரபாகரன் எங்கே?”

“பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் எதற்காகப் பிரபாகரனின் தாயாரிடம், ‘பிரபாகரன் எங்கு இருக்கின்றார்?’ என விசாரணை செய்தீர்கள் என்பதற்கான பதிலையும் கூறவேண்டும். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கும் பிரபாகரனின் தாயார் இதனைக் கூறியுள்ளார்.

கனடா தலைநகரைக் கைப்பற்றினோம்: பொலிஸார்

கனேடியத் தலைநகர் ஒட்டாவாவின் முக்கிய பகுதியை வேலிகளுடன் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளனர்.