பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு; நால்வர் மரணம்

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில்  நான்கு  பொலிஸார் உயிரிழந்துள்ளனர் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரோனிடமிருந்து யாரும் தப்பிக்க முடியாது

“உலக நாடுகள் ஒமிக்ரோன் தொற்றிடமிருந்து  தப்பிக்கவே முடியாது'”என உலக சுகாதார ஸ்தாபனம்  அதிர்ச்சித்  தகவலை வெளியிட்டுள்ளது. தென்ஆபிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட “ஒமிக்ரோன்” தொற்றனது உலகம் முழுவதும் மக்களிடையே பெரும்  அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறன.

இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து போராட்டம்

இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து, யாழ். மாவட்டக் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தால், நாளைய தினம் (24), யாழ். மாவட்டச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கிழக்கில் அதிகளவு பாரை மீன்கள்

திடீர் வானிலை மாற்றம் காரணமாக, அம்பாறை மாவட்டத்தின்  கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பாரிய மீன்கள் பிடிபடுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர்  3 வகையான  பாரிய பாரை மீன்கள், வளையா மீன்கள்  மற்றும் சுறா மீன்கள் என கரை வலைகள்  மூலம் பிடிக்கப்பட்டு,  பல இலட்சம் வரை விற்பனை செய்யப்பட்டன.

சீனா: கொரனா செய்திகள்

சீனாவின் மேற்கு பகுதியில் இருக்கும் Xi’an மாகாணத்தில் கொரோனா பரவி வரும் நிலையில், இப்பகுதி முடக்கப்பட்டுள்ளதுடன், கடுமையான  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சிலி நாட்டின் இளம் குடியரசுத் தலைவராக கம்யூனிஸ்ட் தலைவர் கேப்ரியல் போரிக்

சாண்டியாகோ: தென்அமெரிக்கா நாடான சிலியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 35 வயது இளம் இடதுசாரி தலைவரான கேப்ரியல் போரிக் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிக இளம்வயது அதிபர் என்ற பெருமையை போரிக் பெற்றுள்ளார். கேப்ரியல் போரிக், 35 வயதாகும் இவர் தான் சிலி நாட்டின் அதிபர் பதவியை அலங்கரிக்க இருக்கும் இளம் கம்யூனிஸ்ட் தலைவர். அதிபர் பதவி புதிது என்ற போதும் கடந்த காலங்களில் சிலி அரசின் முடிவுகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டக்களங்களில் கேப்ரியல் போரிக் மிகவும் பிரபலம்.

பிரபாகரனின் ஜீப் மஹரகமவில் ஓடுகிறது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய ஜீப் வண்டி, மஹரகமவைச் சேர்ந்த ஒருவர் தற்போது பயன்படுத்தி வருகின்றார்.

உயிருக்கு உத்தரவாதமில்லாத வட்டக்கொடை ரயில்வே கடவை

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட வட்டக்கொடை மேற்பிவு ரயில்வே கடவை பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதால் அதனை உடன் சீரமைத்து தருமாறு, வட்டக்கொடை மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கல்வி அமைச்சரின் அறிவிப்பு

தரம் ஒன்றுக்கான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தாமதமாகவே ஆரம்பிக்கப்படும் எனவும், இதற்கமைய 2022 ஏப்ரல் மாதம் முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார்.

குறிஞ்சாக்கேணி – கிண்ணியா பஸ் சேவை ஆரம்பம்

குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவுக்கு பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான இலவச பஸ் சேவை, இன்று (20) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறிஞ்சாக்கேணி பால புனரமைப்பு வேலைகள் நிறைவடையும்வரை இந்த பஸ் சேவையை வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுக்கவுள்ளது.