அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை இந்தியா புறக்கணித்தது

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் வருடாந்த உச்சி மாநாட்டிற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வருகைதரவுள்ளார்.

ஐரோப்பாவில் மீண்டும் கொரோனா அலை

மீண்டும் உருவாகியுள்ள கொரோனா வைரஸ் அலையால், ஐரோப்பா போராடி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. மேலும் ஐரோப்பின் தற்போதைய நிலைமை குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட்டுள்ளதோடு, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த வருடம் மார்ச்  மாதத்துக்குள் ஐந்து இலட்சம் பேர் உயிரிழப்பார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

நுவரெலியாவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நுவரெலியா மாவட்டத்தில் விவசாயிகள்,மரக்கறி உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக  இன்று  (21) காலை நுவரெலியா நகரின் மத்தியில் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

’தேச வழமை சட்டத்தில் உள்ள நல்லதையும் பெற்றே ஒரு சட்டத்தை உருவாக்குவோம்’

தேசவழமைச் சட்டத்தில் உள்ள நல்லதையும்  அதேபோன்று கண்டியச் சட்டம், முஸ்லிம் சட்டம் ஆகியவற்றில் உள்ள நல்லதையும் பெற்று, சிறந்ததொரு சட்டத்தை ஏற்படுத்துவோமென, ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

இலங்கை: கொரனா செய்திகள்

மீண்டும் அதிகரித்தது தொற்றாளர் எண்ணிக்கை. நாட்டில் மேலும் 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 697 பேர் இன்றையதினம் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதன்படி,  இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 556,626 ஆக அதிகரித்துள்ளது.

பேஸ்புக்கின் புதிய பெயர் அறிவிக்கப்பட்டது

சமூக வலைதளங்களில் உலகின் முன்னணி நிறுவனமாக பேஸ்புக் இருக்கிறது. உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

580 ஆண்டுக்கு பிறகு இன்று நீண்ட சந்திர கிரகணம்

சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. 

லண்டனில் தீ; பச்சிளம் குழந்தை உட்பட இலங்கையர்கள் பலர் பலி

பிரித்தானியாவில் தென்கிழக்கு லண்டனில் வீடொன்றில் பரவிய தீயினால் நான்கு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் வியாழன் மாலை ஏற்பட்டுள்ளதாகவம் தெரிவிக்கப்படுகின்றது.
Hamilton சாலையில், Bexleyheath கட்டிடமே தீப்பிழம்புகளால் சூழப்பட்டது.

சீன உர விவகாரம்; தடை உத்தரவு நீடிப்பு

சேதன  பசளை தொடர்பில் சீன நிறுவனங்களுக்கு, பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி மற்றும் மற்றும் அதன் தேசிய முகவர்களுக்கு மீது விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு இம்மாதம் 30 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.