குஷிநகர் விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்தார்

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இங்கு, இலங்கையில் இருந்து பௌத்த துறவிகளுடன் வந்த விமானம் முதலாவதாக தரையிறங்கியது.

4 வருடங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்ட இடுக்கி அணை

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணையில் இருந்து 4 ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

இலங்கை: கொரனா செய்திகள்

தொடர்ந்து சரிகிறது தொற்றாளர் எண்ணிக்கை. நாட்டில் மேலும் 461 பேர் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதன்படி, 532679 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளதுடன், இன்றையதினம் 339 பேர் பூரணமாகக் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை  493,314 ஆக அதிகரித்துள்ளது.

’ஆட்சியை கவிழ்க்க தற்போது அவசரம் வேண்டாம்’

தற்போது தெற்கு அரசியலில் ஆட்சி மாற்றம் என்ற ஒரு  காற்று வீசுகின்றது எனத் தெரிவித்த கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், வாக்களித்த சிங்கள மக்களே இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் கூறினார்.

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கம் அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது. அத்துடன் 25ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு செல்லவும், மாற்று தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதியிலிருந்து படிப்படியாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா தொற்று இன்றும் பாரிய வீழ்ச்சி. நாட்டில் மேலும் 467 பேர் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதன்படி, 532,115 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளதுடன், இன்றையதினம் 354 பேர் பூரணமாகக் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை  492,975 ஆக அதிகரித்துள்ளது.

போராட்டத்துக்கு குருநகர் மீனவர்கள் எதிர்ப்பு

இந்தியன் ரோலர் படகை தடை செய்யுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் இடம்பெற்ற முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரையான கவனயீர்ப்பு போராட்டத்துக்கு குருநகர் பகுதி மீனவர்கள்  எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

பிரிட்டிஷ் எம்.பி டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் பலி!

கன்சர்வேடிவ் எம்.பி. சர் டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.பிரிட்டன் உள்ளூர் நேரப்படி பகல் 12 மணியளவில் லீ-ஆன்-சீ-யில் எம்.பி சர் டேவிட் அமேஸ் கத்தியால் குத்தப்பட்டதாக தங்களுக்கு தகவல் வந்ததாகவும் அதன் பேரில் ஒருவரை கைது செய்ததாகவும் எஸ்ஸெக்ஸ் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தேர்தல் முறையில் மாற்றம் ; மலையக மக்களையே பாதிக்கும்

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விடயத்தில் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என தெளிவான முடிவில் இ.தொ.கா உள்ளதென்றும் மாகாண சபைத் தேர்தல் நடத்த தாமதமானால், உள்ளூராட்சி தேர்தலும் நடத்தப்படமுடியாது என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான தெரிவித்தார்.

இந்தியா: பயணிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

இந்தியாவில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வரும் நிலையில், வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இந்திய வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனையடுத்து, இன்று(15) முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான விசாக்களுக்கு அனுமதி வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.