தமிழ் அரசியல் கைதிகள் அனைவருக்கும் விரைவில் விடுதலை

தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ விரைவாக நடவடிக்கை எடுத்து வருகின்றார் எனத் தெரிவித்த இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ இளைஞர்களை கைதுசெய்து தடுத்து வைக்கவேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை
என்றார்.

டானியலும் சண்முகதாசனும் தேவை

வட்டுக்கோட்டைப் பகுதியில் நடந்த உயர்சாதியினரான வெள்ளாள இனத்தின் அடாவடித்தனங்கள் தொடர்பான வீடியோ ஒன்றைப் பார்த்தேன்.தமிழ்பேசும் வெள்ளாள இனத்தவர்கள் சிங்கள பொலிசார் ஆதரவோடு மோட்டார் சைக்கிள்களில் வந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்கள்மேல் தாக்குதல் நடாத்திவிட்டுப் போயிருக்கிறார்கள்.

ஐ.நாவில் பங்கேற்க தலிபான்கள் ஆர்வம்

ஐக்கிய நாடுகளின் புதிய நிரந்தரப் பிரதிநிதியாக ஆப்கானிஸ்தான் சார்பில் முஹம்மது சுஹைல் ஷாஹீனை நியமித்துள்ள தலிபான்கள், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் ஆப்கான் பங்கேற்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  

கல்முனையில் வாள்வெட்டு; காணொளியில் பதிவு

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை, மதரஸா வீதியில் இடம்பெற்ற சரமாரியான வாள்வெட்டில் காயமடைந்த கல்முனை இளைஞரன், அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஞானசார தேரரின் “சூத்திரதாரி” கருத்தால் சர்ச்சை

நியூஸிலாந்து பொலிஸாரினால் விடுதலைச் செய்யப்பட்ட ஒருவரே, மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளார். அவரிடம் ஐ.எஸ். சிந்தனை இருந்திருக்கிறது. ஒவ்வொரு முஸ்லிம்களிடத்திலும் ஐ.எஸ் சிந்தனை இருக்கும். யாரிடம் இருக்கிறது, யாரிடம் இல்லையென கண்டறிய முடியாது எனத் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரர் சரத் வீரசேகர, ஐ.எஸ். சிந்தனை எப்போது ​​வேண்டுமானாலும் வெடிக்கலாம்” என்றார்.

கொடநாடு வழக்கு: தொடர்கிறது தனிப்படை விசாரணை

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் 8 மற்றும் 9ஆவது சந்தேகநபர்களாக குற்றச்சாட்டப்பட்டுள்ள சந்தோஷ் சாமி, மனோஜ் சாமியிடம் தனிப்படை பொலிஸார் 2ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

புதிய பனிப்போரை உருவாக்க முயலவில்லை

பிளவுபட்ட உலகில் மீண்டும் ஒரு புதிய பனிப்போரை உருவாக்க நாங்கள் முயற்சிக்கவில்லை. அமைதியை பின்பற்றும் எந்த நாட்டுடனும் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 92 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 12,376 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான்: பாடசாலையில் மாணவிகளுக்கும் ஆசிரியைகளுக்கும் தடை

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தைத் தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அங்குள்ள பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களின் ஆடைகள், கல்வி, தொழில் உள்ளிட்ட பல விடயங்களில் பல கடுமையான விதிமுறைகளை விதித்துவருகின்றனர்.

’பட்டமளிப்பு நிகழ்வை நிராகரிக்கின்றோம்’

நிகழ்நிலையில் நடைபெறவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு நிகழ்வை  முழுமையாக நிராகரிக்கின்றோமென, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இன்று (20) வெளியிட்ட அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.