மாவட்டங்களைக் கைப்பற்றினோம்: தலிபானுக்கெதிரான படைகள்

பன்ஜ்ஷிர் பள்ளத்தாக்குக்கு அருகேயுள்ள மூன்று மாவட்டங்களைத் தாம் கைப்பற்றியுள்ளதாக, வட ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராகப் போரிடும் படைகள் தெரிவித்துள்ளன. எஞ்சியுள்ள ஆப்கானிஸ்தான் அரசாங்கப் படைகளும், ஏனைய ஆயுதக் குழுக்களும் பன்ஜ்ஷிர் பள்ளத்தாக்கிலேயே கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் மேலும் 3,110  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 388,806 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 18,769  பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 342,159 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 39,661 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதேவேளை, மேலும் 198 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 7,183  பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஆப்கானிஸ்தான் ஆளும் சபையால் நிர்வகிக்கப்படும்’

ஆளும் சபை ஒன்றால் ஆப்கானிஸ்தான் நிர்வகிக்கப்படும் என்றும், அனைத்துக்கும் பொறுப்பானவராக தலிபான்களின் தலைவர் ஹைபதுல்லாஹ் அகுன்ட்ஸடா இருப்பார் என தலிபானின் சிரேஷ்ட உறுப்பினர் வஹீடுல்லாஹ் ஹஷிமி றொய்ட்டர்ஸுக்குத் தெரிவித்துள்ளார்.

ஐ.அ. அமீரகத்தில் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி

ஐக்கிய அரபு அமீரகத்தில், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கானி அடைக்கலம் புகுந்துள்ளதாக அமீரகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை நோக்கி தலிபான்கள் முன்னேறிய நிலையில் ஆப்கானிஸ்தானை விட்டு ஜனாதிபதி கானி கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேறியிருந்தார். இந்நிலையில், ஜனாதிபதி கானியையும், அவரது குடும்பத்தையும் மனிதாபிமான அடிப்படைகளில் வரவேற்பதாக அமீரகத்தின் வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, பாரியளவு பணத்துடன் தான் அமீரகத்துக்கு பயணமானதான வதந்திகள் முழுமையாக அடிப்படையற்றவை, பொய்கள் என ஜனாதிபாதி கானி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை: கொரனா செய்திகள்

மகாநாயக்கர்களின் கோரிக்கைக்கு அமைவாக நாட்டை ஒருவாரத்துக்கு முழுமையாக முடக்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார். இதுதொடர்பில், மகாநாயக்கர்களுக்கு தெளிவுப்படுத்தியதன் பின்னர், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உத்தியோபூர்வமாக அறிவிப்பார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.  இதேவேளை, இன்றிரவு 10 மணிமுதல் நாடு முடக்கப்படும் என சுகாதார அமைச்சர கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஆனால், அத்தியாவசிய சேவைகள் யாவும் இயங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐபிசிசி என்பது என்ன?

பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு (ஐபிசிசி) என்பது ஐநாவின் பருவநிலை மாற்றம் குறித்த அமைப்பு. 1988-ல் ஐநாவின் 195 உறுப்பு நாடுகளால் தொடங்கப்பட்டது! ஐபிசிசி மதிப்பீட்டு அறிக்கைகள் என்றால்…

பாகிஸ்தானுக்குப் படையெடுக்கும் ஆப்கன் மக்கள்

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் பாகிஸ்தானுக்குப் படையெடுத்து வருகின்றனர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கில் ஸ்பின் போல்டக் / சமான் எல்லைப் பகுதி வழியாக ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள் நுழைந்து வருகின்றனர். ஆப்கான் குடிமக்களுக்கான அடையாள அட்டையை வைத்திருப்பவர்கள் பாகிஸ்தானில் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றனர்”

அஷ்ரப் கானியை கைது செய்யுமாறு கோரிக்கை

தலிபான்களுக்கு பயந்து நாட்டைவிட்டு தப்பிச்சென்ற ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கானியை கைது செய்யுமாறு இண்டர்போலுக்கு தஜிகிஸ்தானிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உச்சம் தொட்டன கொரோனா மரணங்கள்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 171 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 102 ஆண்களும் 69 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுன், 60 வயதுக்கு மேற்பட்ட 134 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 35 பேர் மரணித்துள்ளனர். 30 வயதுக்குக் கீழ் 2 பேர் மரணித்துள்ளார்.