அமைச்சரவை மாற்றத்தின் முழு விவரம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தில் மற்றுமொரு தடவை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், அமைச்சுக்கள் சில கைமாற்றப்பட்டன.

1. ஜி.எல்.பீரிஸ்-  வெளிநாட்டலுவல்கள்
2. தினேஸ் குணவர்தன-  கல்வி
3. பவித்ரா வன்னியாராச்சி- போக்குவரத்து
4.. கெஹலிய ரம்புக்வெல –சுகாதாரம்
5. காமினி லொக்குகே- மின்சக்தி
6. டலஸ் அழகபெரும- ஊடகம்
7. நாமல் ராஜபக்ஷ- இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுக்கு மேலதிகமாக அபிவிருத்திகளை மேற்பார்வை செய்யும் அமைச்சர்

கவலை கொண்டார் மலாலா

தலிபான் ஆதிக்கம் அதிர்ச்சியளிக்கிறது.  பெண்கள், சிறுபான்மையினரை நினைத்து கவலை கொள்கிறேன் என மலாலா தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகத் தெரிகிறது. ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகுவதாகவும், தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை

தோட்டத் தொழிலாளர்களை திட்டமிட்ட அடிப்படையில் ஏமாற்றி, தொழில் சட்டங்களையும், நியதிகளையும் தோட்டக்கம்பனிகள் அப்பட்டமாக மீறிச்செயற்படுவதாகத் தெரிவித்த கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், இவற்றை தடுப்பதற்கான தொழிற்சங்க பொறிமுறையும் திருப்திகரமானதாக இல்லை. எனவே, தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றார்.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் மேலும் 3,640 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 358,608 ஆக அதிகரித்துள்ளதாகவும் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. கடந்த ஐந்து நாட்களில் பிந்திக்கிடைத்த 3,640 தொற்றாளர்களின் எண்ணிக்கையை மொத்தத் தொகையுடன் சேர்த்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“எல்லாம் நன்மைக்கே’’ மனதை திடப்படுத்திக்கொண்ட பவித்ரா

தான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை இவ்வாறானதொரு மாற்றம் ஏற்படும் என தெரிவித்துள்ள போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி,  எனினும் வாழ்க்கையில் நடப்பவை எல்லாம் நன்மைக்கே என மனதை தேற்றிக்கொள்வதாகவும் தெரிவித்தார். இன்று (16) அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், சுகாதார  அமைச்சிலுள்ள அதிகாரிகளிடம் உரையாடிய போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘தலிபானுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை‘

தலிபான் ஒரு சுதந்திரமான விடுதலைப் படையாகும். தமிழீழ விடுதலைப்  புலிகளுடன் (எல்.ரி.ரி.ஈ) எமக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்த தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேச பேச்சாளருமான சுஹெய்ல் சஹாப்தீன், நாட்டின் சுதந்திரத்திற்காகவும் வெளிநாட்டு படைகளை எதிர்த்தும் கடந்த 20 வருட காலமாக போராடி வருகிறோம் என்று கூறினார்

போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.  ஜனாதிபதி  அஷ்ரப் கானி தனது நாட்டை விட்டு நேற்று வெளியேறினார்.  இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நான்கு அமைச்சர்களின் அமைச்சுக்களில் மாற்றம்

நான்கு அமைச்சரவை அமைச்சர்களின் அமைச்சுக்களை மாற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன, டலஸ் அழகப்பெரும மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோரின் அமைச்சுக்களே மாற்றப்படவுள்ளன.

ஆலய திருவிழாக்கள் நடத்த முற்றாக தடை

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர், பிரதேச மக்களுக்கான கொவிட் 19 சுகாதார நடைமுறைகளை அமுல்படுத்தல் தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளார்கள்.

இலங்கை: கொரனா செய்திகள்

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று (13) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும். இதேவேளை,  கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டதற்கான சான்றிதழ் இல்லாமல் பொது இடங்களுக்குள் நுழைய முடியாது. இது செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் அமுலாகும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.