ஆறுகளை இணைக்கும் திட்டம் நிறைவேறியது

களுகங்கையையும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தையும் இணைத்து மலைகளுக்கு அடியில் இரண்டு பக்கங்களிலும் இருந்து தோண்டப்பட்ட இலங்கையின் மிக நீண்ட சுரங்கம் நடுவழியில் சந்தித்துள்ளது. மொத்தம் 7.9 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சுரங்கம் இலங்கையில் நீர்ப்பாசன வரலாற்றில் ஒரு அத்தியாயமாகும். மொத்தமாக 28 கிலோமீட்டர் சுரங்கப் பாதைகள் இந்த திட்டத்தில் அமைக்கப்படவுள்ளதோடு இறுதியில் மஹாவலி நதியும் கனகராயன் ஆறும் இணைக்கப்பட்டு முழுமையான ஒரு வடக்கு தெற்கு நீர்வழியிணைப்பு ஏற்படுத்தப்படும். ஹீரடிய ஓயாவுக்கு மேலால் அமைக்கப்படவுள்ள 400 மீற்றர் நீளமான (Aqueduct )நீரிணைப்பாலம் மிகவும் அழகான காட்சியை இலங்கை மக்களின் கண்ணுக்கு விருந்தாக்கும்.

‘சம்பந்தனின் மரணத்துக்காக காத்திருப்பவன் நானல்ல’

“சம்பந்தனின் மரணத்துக்குப் பின்னர் தலைவர் ஆவதற்கான பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை” என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார். கிழக்கு மாகாணம் தொடர்பில் பரந்த திட்டங்களுடன் தாம் செயற்படுவதாக தெரிவித்த அவர், கிழக்கு மாகாணத்தின் சுபீட்சம் நோக்கியே தமது பயணம் உள்ளதாகவும் தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பில், மட்டக்களப்பில் வைத்து, நேற்று (28) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சீன நாட்டு பிரஜை ஒருவரும், கோட்டாபய முகாமுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு செய்வதற்கு நேற்றும் (29) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையால் அங்கு பெரும் பதற்றமான நிலைமையொன்று இன்றுக்காலை முதல் ஏற்பட்டிருந்தமை யாவரும் அறிந்த விடயமாகும்.

ரிஷாட் கட்சியுடன் கூட்டணிக்கு இட​மே இல்லை: சஜித் அதிரடி பதில்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு கைகளை உயர்த்தியவர்கள் ரிஷாட் பதியுதீனின் கட்சிக்குள் இருக்கும் வரையிலும். தற்போது முகங்கொடுக்கும் பல்வேறான சிக்கல்கள் தீர்வுக்கு கொண்டுவரப்படும் வரையிலும் அந்த கட்சியுடன் எந்தவோர் கூட்டணியும் அமைக்கப்படாது. என எதிரக்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கோமாளிகள்: சயந்தனை மேடையில் உட்கார வைத்து விளாசிய முதலமைச்சர்!

வெலிப்படை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட ரெலோவின் தலைவர்கள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்டவர்களின் 35வது நினைவுதினம் இன்று ரெலோவினால் அனுட்டிக்கப்பட்டது. கரவெட்டி பிரதேசசபை மண்டபத்தில் இந்த நிகழ்வு நடந்தது.இதில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜபெருமாள் உரையாற்றியபோது, வடமாகாணசபையின் கடந்த அமர்வை காட்டமாக விமர்சித்தார்.

சார்பாட்டா பரம்பரைக்காக பா.ரஞ்சித்தை பாராட்ட மாட்டேன்…?

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓடிடி-யில் வெளியான ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இப்படம் ரஞ்சித் மற்றும் ஆர்யாவுக்கு மட்டும் வெற்றி படமாக அமையாமல் , அந்த படத்தில் நடித்த அனைவருமே பிரபலமாகும் வகையில் அமைந்திருந்தது.

ஈரான்: தண்ணீர்த் தட்டுப்பாடு தொடர்பில் ஆர்ப்பாட்டங்கள்

மோசமான தண்ணீர்த் தட்டுப்பாடு தொடர்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளும் மக்களுக்கு எதிராக ஈரானின் தென் மேற்கு குஸெஸ்டான் மாகாணத்திலுள்ள பாதுகாப்புப் படைகள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளன. இப்பிராந்தியத்தில் வெப்பநிலையானது 50 பாகை செல்சியஸை தொடும் என்ற நிலையிலேயே தண்ணீர்த் தட்டுப்பாடு தற்போது நிலவுகின்றது. இந்நிலையில், ஆர்ப்பாட்டங்களானது அரசாங்கம் மற்றும் நாட்டின் மீயுயர் தலைவருக்கு எதிரானதாக மாறியுள்ளதுடன், பல்வேறு நகரங்களுக்கு பரவியுள்ளது.

ஆப்கானிஸ்தானில்…. ‘யுத்தபூமியில் விளையாட்டு முற்றுப்பெறவில்லை’

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சுமார் 212க்கும் அதிகமான மாவட்ட மையங்களை தம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு முழுமையடையாத வெற்றியை பிரசாரப்படுத்தி வருகின்றனர் என்று அமெரிக்க உயர்மட்ட ஜெனரல் ஒருவர் கூறியுள்ளார்.

துனீஷியாவில் நெருக்கடியில் ஜனநாயகம்

துனீஷியாவானது கடந்த பத்தாண்டில் அதன் மிகப் பெரிய ஜனநாயக நெருக்கடி ஒன்றை இன்று எதிர்கொள்கின்றது. அரசாங்கத்தை ஜனாதிபதி கை சயீட் கலைத்ததுடன், பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளை முடக்கியதையடுத்தே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.