அமெரிக்காவின் பிரகடனப்படுத்தாத ஆக்கிரமிப்பு

(Rathan Chandrasekar)

அய்யோ,
இந்தக் கியூபாவை
அமெரிக்கா படுத்துகிற பாடு இருக்கிறதே!
மிகக் கொடுமை!
கொரோனாக் காலத்தில் உலகின் பல நாடுகளுக்கும்
தன் மருத்துவர்களை அனுப்பி – உயிர் காத்த
இந்த சின்னஞ்சிறிய நாடு – அமெரிக்காவின் பொருளாதார முற்றுகையால் பேரவதிப்படுகிறது.

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளமையால், நாட்டை முழுமையாக முடக்குவதற்கு அல்லது மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகளை இன்னும் கடுமைப்படுத்துவது தொடர்பிலான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

’டெல்டா குண்டு’ வெடித்துச் சிதறலாம்

நாட்டின் முன்னால் வெடிப்பதற்கு தயாராக “டெல்டா குண்டு” உள்ளது என்றும் மக்கள் கவனமாக இல்லாவிட்டால் அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்றும்  ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமான தெரிவித்தார்.

இலங்கை: கொரனா செய்திகள்

இன்னும் சில நாள்களில் நாட்டில் அன்றாடம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,000 ஐ கடக்கும். அத்துடன், நாளொன்றுக்கு இடம்பெறும் மரண எண்ணிக்கை ஆகக் குறைந்தது 200 ஆக இருக்கும் என்றும் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை: கொரனா செய்திகள்

ஓகஸ்ட் 7ஆம் திகதி வரையிலும் கொரோனா ​தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்கள் எண்ணிக்கை தொடர்பிலான புள்ளிவிவரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் மொத்த சனத்தொகை, 2 கோடி​யே 19 இலட்சத்துக்கு 19ஆயிரம் பேர். அதில், 30 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 இலட்சத்துக்கு 45ஆயிரத்து 788 ஆவர்.

கொரோனா மரணங்கள்; காரணம் சொன்ன ரணில்

தற்போது ஏற்படும் கொரோனா மரணங்களுக்கு கொரோனா ஒழிப்பு செயலணியே காரணம் என்று முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். வீடியோ தொழிநுட்பம் மூலம் கொழும்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டபோதே இவ்விடயத்தை அவர் தெரிவித்தார்.

’இந்திய மீனவர்களால் இரண்டு கோடி ரூபாய் நட்டம்’

இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறை காரணமாக, தமது வாழ்வாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றமையினால், எந்த வழியிலேனும் இந்தியக் கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்துமாறு, யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் வலியுறுத்தினர்.

ஸ்ரீசபாரத்தினத்தை விடுதலைப் புலிகளே கொன்றனர் – செல்வம் அடைக்கலநாதன்

ஸ்ரீசபாரத்தினத்தினை விடுதலைப்புலிகளே கொன்றனர்.  வடுக்கள் எமது மனங்களில் இருந்தாலும், தேசத்தின் விடுதலைக்காக விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணியாற்றினோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.  

மட்டக்களப்பில் கண்டன பேரணி

கொத்தலாவல பல்கலைக்கழக சட்ட மூலத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்தும் இலவச கல்வியில் இராணுவத்தின் தலையீட்டைக் கண்டித்தும் மட்டக்களப்பில், இன்று (05) பேரணி நடைபெற்றது. இலங்கை ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து இந்தப் பேரணியை  முன்னெடுத்தன.