யாழ். கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க பிள்ளையார் களத்தில்!

 

யாழ். இராசாவின் தோட்டம் வீதியில் பொறுப்பற்ற விதமாக கழிவுகளை கொட்டிவந்த பொறுப்பற்ற மக்களை திருத்த பிள்ளையாரே களத்தில் இறங்கிவிட்டார். சூழலை பாதுகாக்க சட்டங்களால் முடியவில்லை. சாமிகளால் முடிகிறது…..?. குங்குமம் பொட்டர் விக்னேஸ்வரனின் ஐடியாவோ….?(குடாநாட்டான்)

காணாமற் போனோர் உறவுகளை மிரட்டிய சிவாஜிலிங்கம்!

தமிழ் மக்கள் ஏதாவது ஓர் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம் நடத்தினால் ஓடிவந்து அங்கிருந்து ஊடகங்களுக்குப் பேட்டி கொடுப்பதில் சிவாஜிலிங்கம் முதல்வர்! மாவீரர்கள் தினம் வந்துவிட்டால் கோவிலுக்குப் போகும் இதர பக்தர்களுடன் போவிலுக்கு மூன்று பேருடன் நுழைந்து, கற்பூரம் பொளுத்திவிட்டு, அதனைப் படம் பிடித்து, மாவீரர் தினம் கொண்டாடியதாக கதை விடும் இவர், காணாமற்போனோரது உறவுகள் மேற்கொள்ளும் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் இதுவரை அழையா விருந்தாளியாக தலைகாட்டி வந்தார். இவர் போன்ற சிலர் இடையில் கலந்துகொண்டு, அரசியல்லாபம் தேடிக்கொள்வதால் தங்களது கோரிக்கைள் எடுபடாததை உணர்ந்த காணாமற்போனவர்களது உறவினர்கள், இவருக்குத் தெரியாமல் நேற்றைய தினம் ஒரு கவன ஈர்ப்பு போராட்டத்தை யாழ் பஸ் நிலையத்தில் ஆரம்பித்திருந்தனர். இதனை சற்றும் எதிர்பார்த்திராத சிவாஜிலிங்கம், அதனை ஏற்பாடு செய்தவர்களுக்கு தொலைபேசி எடுத்து, ‘எனக்கு சொல்லாமல் ஏன் இதனை செய்தீர்கள்? ஏதாவது பின்விளைவுகள் வந்தால் யார் பொறுப்பு? இனிமேல் என்னிடம் சொல்லாமல் இப்படியெல்லாம் செய்யக்கூடாது’ என மிரட்டியுள்ளார். அரசியலில் எப்படியெல்லாம் சம்பாதிக்கிறார்கள் பாருங்கள்!

நீடித்து நிலைக்கும் தட்டிவான் பயணம்!

 

உலகமயமாக்கலிலும் மாற்றமுறாது தொடரும் பருத்தித்துறை – கொடிகாமம் தட்டிவான் பயணம் காலமாற்றம் காணாதது. இயற்கை காற்று உடலை தழுவும். அதில் கலந்துவரும் புழுதி மண் வாசனை புத்துணர்ச்சி தரும். இந்த இயற்கை இன்பம் சொகுசு வாகன பயணத்தில் கிடைக்குமா? கோடைகாலத்து குளிரூட்டி எம் மண்ணின் பருவகால காற்று. மாரி காலத்தில் உடலை சூடேற்ற பயணிகளை நெருக்கி அடையும் நடத்துனர். தட்டிவானுக்கு ஏசி தேவை இல்லை. ஹீற்றர் போடும் அவசியம் இல்லை இயற்கையோடு வாழ்ந்து ஓசோன் படலத்தை பாதுகாக்கும் எம் பயணத்தை ஒரு தடவை ஊர் வந்து அனுபவி புலம் பெயர் தமிழா!

(Ram)

அதிசயம் ஆனால் உண்மை!

தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு ’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான,ஆச்சர்யமளிக்கும், நிகழ்வுகள் சில, இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்.

(“அதிசயம் ஆனால் உண்மை!” தொடர்ந்து வாசிக்க…)

தற்கொலைக்கு தூண்டியது எது? – 3 மாணவிகளின் உருக்கமான கடிதம்!

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள எஸ்.வி.எஸ்.யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்த வந்த மோனிஷா, சரண்யா, பிரியங்கா என்ற மூன்று மாணவிகள், கல்லூரிக்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மாணவிகளின் மரணம். மூன்று மாணவிகளும் தற்கொலைக்கு முன் எழுதியுள்ள கடிதம் தற்போது சிக்கியுள்ளது. இந்த கடிதத்தில், அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், காலேஜில நாங்க படிச்சத விட வேலை பார்த்ததுதான் அதிகம் என்றும் தங்கள் மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

(“தற்கொலைக்கு தூண்டியது எது? – 3 மாணவிகளின் உருக்கமான கடிதம்!” தொடர்ந்து வாசிக்க…)

அவுஸ்திரேலியாவை குடியரசாக்க முயற்சி

அவுஸ்திரேலியாவை ஒரு குடியரசா க்குவதற்கு பெரும்பாலும் அந்நாட்டின் அனைத்து மாநில மற்றும் பிராந்திய தலைவர்களும் ஆதரவாக கைச்சாத்திட்டுள்ளனர். எலிசபெத் மகாராணியை நாட்டின் தலைவர் பொறுப்பிலிருந்து மாற்ற, அரசியல் சாசனத்தில் மாறுதல் கொண்டுவர வேண்டும் எனக் கோரும் மனுவொன்றை அவுஸ்திரேலியக் குடியரசு இயக்கம் முன்னெடுத்துள்ளது.

(“அவுஸ்திரேலியாவை குடியரசாக்க முயற்சி” தொடர்ந்து வாசிக்க…)

வேளாண்மை விஞ்ஞானம் படைத்தவர்கள் தமிழர்கள் கவிஞர் வைரமுத்து

முல்லைத்தீவில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உழவர் பெருவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். கவிஞர் வைரமுத்து பேசியதாவது, இந்தத் தியாகத் திரு மண்ணில் நான் உணர்ச்சிமயமாக இருக்கிறேன். என் பேச்சு நிறைவடைவதற்குள் இருதயமே உடைந்துவிடாதே, என் கண்ணே கலங்கிவிடாதே என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். ஆசியாவிலேயே அதிகம் கல்வி கற்ற இனம் இலங்கைத் தமிழினம். தமிழினத்தின் முகவரியை உலகம் எங்கும் எழுதியவர்கள் இலங்கைத் தமிழர்கள். ஆனால் இன்று எல்லாவற்றையும் இழந்து நிற்கிறீர்கள் உங்கள் நம்பிக்கையைத் தவிர. அந்த நம்பிக்கையை ஊட்டத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.

(“வேளாண்மை விஞ்ஞானம் படைத்தவர்கள் தமிழர்கள் கவிஞர் வைரமுத்து” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம்

இன்று (25) காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. காணாமல்போன சகலரையும் கண்டுபிடிக்குமாறு கோரியும் சகல தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இப்போராட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட காணிகள் இன்று மக்களிடம் கையளிப்பு

அரசாங்கத்தின் துரித மீள்குடியேற்ற வேலைத்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் காணிகளை உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று(22) நடைபெறவுள்ளது. வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகம் மற்றும் வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகம் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினரின் வசமிருந்த காணிகள் இனறைய தினம்(22) மக்களிடம் கையளிக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின்செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்தார்.

(“விடுவிக்கப்பட்ட காணிகள் இன்று மக்களிடம் கையளிப்பு” தொடர்ந்து வாசிக்க…)