தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றதால், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தற்போதைய பாஜக துணைத் தலைவருமான அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முருகனுக்கு அமைச்சர் பதவி?

இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் இருக்குமா? என்ற ரீதியில் நிறைய எதிர்பார்ப்புகள் எழுந்தன. அந்த வகையில், எல்.முருகனுக்கு அமைச்சர் பதவி உறுதியாக கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நான்கு நாள் வாரம் வெற்றி

ஐஸ்லாந்தில் நான்கு நாள் வாரம் ஒன்றுக்கான சோதனைகள் பாரியளவில் வெற்றியடைந்துள்ளதாகவும், இதனால் பல பணியாளர்கள் குறைந்தளவு மணித்தியாளங்கள் நகருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற சோதனைகளின்போது குறுகிய மணித்தியாலங்களுக்கு அதேயளவான ஊதியத்தை பணியாளர் பெற்றிருந்தனர்.

‘பந்துல கூறுவதை மனைவியே கேட்பதில்லை’ – அநுரகுமார

அமைச்சர் பந்துல குணவர்தன கூறாதது ஒன்றுமே இல்லை, அவருடைய கூற்றை அவரது மனைவியே கேட்பதில்லை எனத் தெரிவித்த அநுரகுமார திஸாநாயக்க எம்.பி, குடும்பமொன்றை நடத்துவதற்கு 2,500 ரூபாய் மாதமொன்றுக்கு போதுமென்றார், நிவாரணம் வழங்கப்படும் என்றார். உரமானியம் வழங்கப்படும் என்றார் ஒன்றுமே நடைபெறவில்லை. ஆகையால், கொஞ்சம் அமருங்கள் என்றார்.

பழம்பெரும் நடிகர் திலீப்குமார் காலமானார்

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார். இவர் 1944-ல் சினிமாவில் அறிமுகமாகி தேவதாஸ், கங்கா யமுனா, ஆன், தஸ்தான் உள்பட பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். வயது மூப்பு காரணமாக இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. அந்த வகையில் கடந்த வாரம், இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த திலீப்குமார், இன்று காலை காலமானார். இவருக்கு வயது 98. திலீப் குமாரின் மறைவு பாலிவுட் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆவணங்களில் கையெழுத்திட்டார் பெசில்

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார். இந்த நிலையில், அவர் நாளை (08) எம்.பி.யாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் எம்.பி.யாக அவரது பெயர் வர்த்தமானியில் இன்று (07) வெளியாகியுள்ளது.

துமிந்த நாகமுவ கைது

முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – 02 இராமநாயக்க மாவத்தை பகுதியில் இன்று (07) காலை முன்னெடுக்கப்படவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறாத போதும், சம்பவ இடத்திலிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலருடன் இருந்த துமிந்த நாகமுவவும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அரசில் இருந்து: ‘வெளியேறுவோர் வெளியேறலாம்’

அரசாங்கத்திலிருந்து வெளியேற விருப்பும்​​வோரிடம் எவ்விதமான சமரச பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்காமல் இருப்பதற்கு, அ​ரசாங்கத்தின் உயர்மட்டத்தின் தீர்மானித்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை: கொரனா செய்திகள்

உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று (06) காலை 6 மணி முதல் மூன்று மாவட்டங்களில் உள்ள சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மாத்தறை, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நான்கு பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பசிலுடன் பங்காளிகள் விரைவில் சந்திப்பர்’

வெற்றிடமாக இருக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பி பதவியின் வெற்றிடத்துக்கு, பசில் ராஜபக்ஷவின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் அறிவித்துள்ளார்.