சென்னையில் காற்று விற்பனை

120 முறை சுவாசிக்கும் ஒட்சிசன் குடுவையின் விலை 975 ரூபா இந்தியாவில் முதல் முறையாக துாய்மையான ஒட்சிசன் எனப்படும் பிராண வாயு குடுவை விற்பனைக்காக சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை, எழும்பூரில் இனவேட்டிவ் என்ற தனியார் நிறுவனம் ஒட்சிசன் குடுவைகளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஒரு குடுவையில் 120 முறை சுவாசிக்கும் அளவிற்கான 99.6 சதவீதம் துாய்மையான ஒட்சிசன் நிரப்பப்பட்டு உள்ளது. எளிதாக அனைத்து இடங்களுக்கும் எடுத்து செல்லும் வகையில் உள்ள அந்த குடுவையின் விலை 975 ரூபாயாகும்.

(“சென்னையில் காற்று விற்பனை” தொடர்ந்து வாசிக்க…)

ஐ. நா. செயலாளர் நாயகம் பதவியில் கண் வைத்திருக்கும் தமிழ் இளைஞன்!

ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பதவியில் கண் வைத்து காத்திருக்கின்றார் தமிழ் இளைஞன் ஒருவர். எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலப் பகுதிக்குள் ஐ. நா. செயலாளர் நாயகமாக வருவார் என்று இவர் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கூறினார். அதாவது மூன்றாவது உலக யுத்தம் ஆரம்பம் ஆவதற்கு முன்பாக இப்பதவியை அடைந்து விடுவார் என்றார். இவர் இப்போது இலங்கை வந்து உள்ளார். யாழ்ப்பாணத்தில் நல்லூரில் உள்ள துர்க்கா மணி மண்டபத்தில் இவரை எதிர்வரும் வியாழக்கிழமை சந்திக்க முடியும்.

(“ஐ. நா. செயலாளர் நாயகம் பதவியில் கண் வைத்திருக்கும் தமிழ் இளைஞன்!” தொடர்ந்து வாசிக்க…)

தழிழரசுக் கட்சியின் மும்மூர்த்திகள் தமிழ் மக்கள் பேரவை பற்றி முரண்பாடான கருத்துகள்

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வரும் முயற்சிக ளுக்கு தமிழ்மக்கள் பேரவை குந்தகம் விளை விக்குமா னால் அது தமிழ் மக்களுக்கு செய்யப்படும் துரோகமாகும் என இரா.சம்பந்தன் தெரிவித் துள்ளார்.
அதே வேளை பேரவையின் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்கு தாங்கள் எதிரானவர்கள் அல்லர் எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஓர் தடையாக இருக்காது எனவும் மாவை சேனாதிராசா அறிவித் துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில் தமிழ்மக்களின் பிரச்சினைக்கு பேரவை ஓர் தீர்வுத்திட்டத்தை முன் வைத்தால் அது குறித்து பரிசீலீக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாராக இருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

(“தழிழரசுக் கட்சியின் மும்மூர்த்திகள் தமிழ் மக்கள் பேரவை பற்றி முரண்பாடான கருத்துகள்” தொடர்ந்து வாசிக்க…)

கல்முனையில் இன்று தமிழர்கள் எதிர்ப்பு பேரணி

கல்முனை அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (28) திங்கட்கிழமை கல்முனை தொகுதி தமிழ் மக்கள் மாபெரும் கண்டன எதிர்ப்பு பேரணியில் ஈடுபடவுள்ளனர். கல்முனை பிரதான வீதியிலுள்ள தரவைப் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக இன்று காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகும் கண்டனப் பேரணி கல்முனை நகர் ஊடாக கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம், கல்முனை மாநகர சபை ஆகிய இடங்களுடாகச் செல்லவுள்ளது.

(“கல்முனையில் இன்று தமிழர்கள் எதிர்ப்பு பேரணி” தொடர்ந்து வாசிக்க…)

பேரவை அவசர கூட்டத்தால் அரசியல் பரபரப்பு

யாழ். மாநாட்டில் அரசியல் தீர்வு குறித்து ஆராய 15 பேர் கொண்ட குழு நியமனம்

தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டம் நேற்று (28)யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

(“பேரவை அவசர கூட்டத்தால் அரசியல் பரபரப்பு” தொடர்ந்து வாசிக்க…)

பிளவுபடும் நிலையில் த.தே.கூ; வெளிப்படுத்திய பேரவை

சம்பந்தன் – விக்கி பேச்சு தோல்வி

பங்கேற்ற கூட்டமைப்பினரிடம் விளக்கம் கோருகிறார் மாவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில், கூட்டமைப்புக்குள் விரிசல் வலுவடைந்துள்ளமை தெளிவாகியிருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

(“பிளவுபடும் நிலையில் த.தே.கூ; வெளிப்படுத்திய பேரவை” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் மக்கள் பேரவையின் கதவு திறந்துள்ளது – சி.வி

தமிழ் மக்கள் பேரவை கொண்டுள்ள எண்ணங்கள், கொள்கைகள் கொண்ட யார் வேண்டுமானாலும் இதில் இணைந்து செயற்பட முடியும் என்று, வடக்கு மாகாண முதலமைச்சரும் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். ‘இங்கு யாரும் பின்வாசலால் வரவில்லை அனைவரும் முறையாக அழைக்கப்பட்டு முன்வாசல் வழியேதான் வந்தார்கள். எனவே, சுமந்திரனும் விரும்பினால் இந்த அமைப்பில் இணையலாம். அவர் தனது நிலைப்பாட்டை எம்மிடம் வெளிப்படுத்துவாரேயானால் நாம் அவருக்கும் அழைப்பு விடுப்போம்’ என்று முதலமைச்சர் கூறினார்.

(“தமிழ் மக்கள் பேரவையின் கதவு திறந்துள்ளது – சி.வி” தொடர்ந்து வாசிக்க…)

சிம்புவை கைது செய்ய தனிப்படைகள்

‘பீப் பாடல்’தொடர்பான புகாரில் நடிகர் சிம்புவை கைது செய்ய போலீஸார் 3 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். நடிகர் சிம்பு பாடிய ‘பீப் பாடல்’ யூடியூப் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வரிகள் இருப்பதாகக் கூறி சிம்பு, அனிருத் மீது சென்னை, கோவை சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்களின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு சிம்புவுக்கு கோவை போலீஸார், 2 முறை சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

(“சிம்புவை கைது செய்ய தனிப்படைகள்” தொடர்ந்து வாசிக்க…)

இன்று…. வெங்கொடுமைக்கு பலியான வெண்மணித் தியாகிகள்…

1968-ம் வருடம், டிசம்பர் 25 – தமிழக வரலாற்றில் கருப்பு நாள்.கீழத்தஞ்சையில், (இன்றைய நாகை மாவட்டம்) கீழ்வெண்மணி என்கிற கிராமத்தில், தாழ்த்தப்பட்ட (தலித்) சமுகத்தை
சேர்ந்த 44 அப்பாவி கூலி ஏழை விவசாயிகளை, ஒரே குடிசையில் பூட்டி வைத்து கதறக்கதறத் தீயிட்டுப் பொசுக்கினர்,
இரிஞ்சூர் பண்ணையார் கோபால கிருஷ்ண (நாயுடு) தலைமையிலான நிலப்பிரபுத்துவ கொடுங்கோலர்கள், 20 பெண்கள், 19 சிறுவர்கள், 5 ஆண்கள் எரித்து கரிக்கட்டைகளாக்கப்பட்டனர். சாதி-தீண்டாமையோடு, பண்ணையடிமைகள் அடங்கிக் கிடக்க வேண்டும் என்கிற, ஆதிக்கத் திமிரும் இந்த படுகொலையில் அடங்கியிருந்தது. “என்ன தோழரே! இப்பொழுதெல்லாம் சாதி – தீண்டாமையை யார் பார்க்கின்றனர்?” என்று ‘உலகறிந்த’ பலரும் நம்மை பார்த்து கேட்கின்றனர். ஆனால், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்திய மனித வளம் குறித்த ஆய்வானது , கிராமப்புறங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் தீண்டாமையைக் கடைபிடிப்பதை அம்பலப்படுத்துகிறது. ஒத்துக்கொள்வதாக தெரிவிக்கிறது. நகர்ப்புறத்திலோ, ஐந்தில் ஒருவர் தீண்டாமையை கடைபிடிப்பதாக மேற்படி ஆய்வு தெரிவிக்கிறது. சாதி- தீண்டாமையானது பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது. எத்தனை இழிவுகள்! எத்தனைக் கொடுமைகள் !

(நன்றி: வினவு.)