இலங்கை அரசில் இருந்து: ‘வெளியேறுவோர் வெளியேறலாம்’

அரசாங்கத்திலிருந்து வெளியேற விருப்பும்​​வோரிடம் எவ்விதமான சமரச பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்காமல் இருப்பதற்கு, அ​ரசாங்கத்தின் உயர்மட்டத்தின் தீர்மானித்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை: கொரனா செய்திகள்

உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று (06) காலை 6 மணி முதல் மூன்று மாவட்டங்களில் உள்ள சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மாத்தறை, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நான்கு பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பசிலுடன் பங்காளிகள் விரைவில் சந்திப்பர்’

வெற்றிடமாக இருக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பி பதவியின் வெற்றிடத்துக்கு, பசில் ராஜபக்ஷவின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் அறிவித்துள்ளார்.

‘7 பேர் விடுதலையில் ஜனாதிபதியை நிர்பந்திக்க முடியாது’

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள, பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவரை நிர்பந்திக்க முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சீனா கௌவிய கௌதாரி: வளங்களும் நலன்களும் பாதிப்பு

இலங்கையின் வடபுலத்தில், மிகவும் தொன்மையான வரலாற்றுப் பெருமை மிக்க இடங்களில் ஒன்றாக பூநகரி பிரதேசம் காணப்படுகின்றது. அதாவது அங்காங்கே தொன்மையான கோவில்கள், கடல் மார்க்க போக்குவரத்துக்கான துறைமுகங்கள், கோட்டைகள் என்பன இதற்குச் சான்றாகும்.

தொடர்ந்து அச்சத்தில் ஏறும் இலங்கை ரூபாய்

பத்து நாட்களுக்குள் இலங்கை அரசாங்கம் வரலாற்றுச் சாதனையாக ரூ. 231.5 பில்லியனை அச்சிட்டுள்ளது. ஏல விற்பனையின் போது திறைசேரி பத்திரங்கள் விற்பனையாகாததன் காரணமாக, அவற்றை கொள்வனவு செய்வதற்காக இந்தப் பணம் அச்சிடப்பட்டிருந்தது. இவ்வாறு ரூபாய் அச்சிடப்படுவது இந்த ஆண்டில் முதன் முறையாக இடம்பெறவில்லை என்பதுடன், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தொடர்பில் பொருளாதார வல்லுநர்கள் கடும் எச்சரிக்கையையும் அதிருப்தியையும் வெளியிட்டிருந்ததையும் காண முடிந்தது.

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கை கொள்வனவு செய்த முதல் தொகுதி பைஸர் தடுப்பூசி இன்று (05) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து டோஹாவுக்கு கொண்டுவரப்பட்ட  26,000 பைஸர் தடுப்பூசிகள், கட்டார் விமான சேவையின் கிவ். ஆர். 663 என்ற விமானத்தின் மூலம் அதிகாலை 2.15 அளவில் இலங்கையை வந்தடைந்தன.

புதுக்குடியிருப்பில் ’சௌபாக்கிய உற்பத்தி கிராமம்’

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், வேணாவில், கைவேலி ஆகிய கிராமங்களை இணைத்து, சௌபாக்கிய உற்பத்தி கிராமத்துக்கான ஆரம்ப பணிகள், இன்று (05) முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைய, தோல்பொருள்கள், பற்றிக் உற்பத்திகள், ஆடை உற்பத்திகளை மேற்கொள்வதற்காக பொதுகட்டடம் அமைப்பதற்கான அடிக்கல்லை, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்த் நாட்டிவைத்தார்.

‘ 5,939 பலா மரங்கள் வெட்டப்பட்டுள்ளன‘

மாத்தளை மாவட்டத்தில் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் மாத்திரம் 5,939 பலா மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட செயலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவல்களுக்கு அமைய, 2019ஆம் ஆண்டு 3,346 பலாமரங்களும் கடந்தாண்டு 2,593 மரங்களும் வெட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கையில் சுகாதார தொழிற்சங்கங்கள்

14 அம்சக் கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து, 10 சுகாதார ​தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. தாதியர் துணை மருத்துவ சேவையாளர்களின் பொது கோரிக்கைகளுக்கு தீர்வை வழங்குவதில் அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சும் வேண்டுமென்றே பிளவுகளை ஏற்படுத்தியுள்ளதால், இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதென, மருத்துவ சேவைகள் ஒன்றிணைந்த சபையின் தலைவர் ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார். இதற்கமைய, இன்று காலை 8 மணியிலிருந்து இத்தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதென்றார்.