சூர்யாவுக்கு எதிராக தீர்மானம்!

மாணவர்களைக் குழப்பும் வகையில் நீட் தேர்வுக்கு எதிராக உண்மைக்கு மாறான தகவலை பரப்பி வரும் நடிகர் சூர்யா, மத்தியஅரசாங்கம் கொண்டுவரும் மக்கள் நல திட்டங்களை, உள்நோக்கத்துடன் எதிர்த்து வருகிறார் என நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி கூட்டத்தில் தீர்மான நிறைவேற்றப்பட்டுள்ளது.

அடையாளப்படுத்தப்படாத 182 புதைகுழிகள் கண்டுபிடிப்பு

கனடாவின் பிரித்தானியக் கொலம்பியாவிலுள்ள முன்னாள் வதிவிடப் பாடசாலை ஒன்றின் நிலங்களுக்கு அருகில் 182 பேரின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டிலுள்ள பழங்குடியின தேசம் ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

சீனாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட மேலும் ஒருதொகை சி​னோர்ஃபாம் தடுப்பூசி மருந்துகள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ​இன்று (04) அதிகாலை வந்தடைந்தது. அந்த தொகுதியில் ஒரு மில்லியன் தடுப்பு மருந்துள்ள உள்ளன.

’கொச்சைப்படுத்துவது போல் தெரிகிறது’

இந்திய அரசாங்கத்தை ஒன்றிய அரசாங்கம் என்று சொல்வது நமது இந்தியத் திருநாட்டைக் கொச்சைப்படுத்துவது போல் சிறுமைப்படுத்துவது போல் அமைந்துள்ளதாக அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அதிமுக) ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

‘வெளிநாட்டுப் படைகளின் தலைகள் துண்டிக்கப்படும்’

சீனாவை அச்சுறுத்த முயலும் வெளிநாட்டுப் படைகளின் தலைகள் துண்டிக்கப்படும் என சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் இன்று எச்சரித்துள்ளார். சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியானது உருவாக்கப்பட்டமையின் நூற்றாண்டு பூர்த்தியான நிலையிலேயே ஜனாதிபதி ஜின்பிங்கின் கருத்து வெளியாகியுள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் மேலும் ஆயிரத்து 888 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் மொத்தமாக 2 இலட்சத்து 27 ஆயிரத்து 840 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சட்ட விரோத மணல் அகழ்வு

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டல் காடு, மணல் ஆறு, நடுஊற்று ஆகிய பிரதேசங்களில் அனுமதிப்பத்திரமின்றி சட்டத்துக்கு விரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஆறு நபர்கள் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர் என, கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.எச்.சீ.கே. சமிந்த பெர்ணான்டோ தெரிவித்தார்.

மெகெல்லேயைக் கைப்பற்றியதிலிருந்து முன்னேறும் போராளிகள்

எதியோப்பியாவின் திக்ரே பிராந்தியத் தலைநகரான மெகெல்லேயை அரசாங்கப் படைகளிடமிருந்து கைப்பற்றியதையடுத்து, அங்குள்ள போராளிகள் தொடர்ந்து முன்னேறுகின்றனர்.

’மீன் வியாபாரம் செய்தால் வருமானம் கிடைக்கும்’

முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள சந்தையில், மீன் உள்ளிட்ட கடலுணவுகளை வியாபாரம் செய்வதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்தினால், கரைதுறைப்பற்று பிரதேச சபையால் பாரியளவில் வருமானதை ஈட்டமுடியும் என, கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை தெரிவித்தார்.

சிறுமி விற்பனை; மேலும் 17 பேர் கைது

15 வயது சிறுமி ஒருவரை இணையத்தளம் ஊடாக கல்கிசையில் பாலியல் செயற்பாடுகளுக்காக கொள்வனவு செய்த மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (30) தெரிவித்தார்.