இலங்கை: கொரனா செய்திகள்

ஆதிவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னிலா எத்தோ கொரோனா தடுப்பூசியை இன்று (30) பெற்றுக்கொண்டார். தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இலங்கையின் முதலாவது பழங்குடியினர் அவராவார்.

மத்தியக் கிழக்கு பயணிகளுக்கான தடை நீக்கம்

மத்திய கிழக்கின் ஆறு நாடுகளிலிருந்து வருகை தரும் விமானப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை, நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளது. “கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், ஓமன், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கே நிபந்தனைகளுடனான அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார். இந்த அனுமதி இன்று (30) முதல் வழங்கப்பட்டுள்ளது என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் கூறினார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் மீண்டும் மலரும் ஜனநாயகம்: நிரந்தர அமைதிக்கு வித்திடட்டும்

ஜம்மு மற்றும் காஷ்மீரில், நடைமுறையில் உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரவும், ஒன்றியப் பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தலை விரைவில் நடத்தவும், அந்தப் பிராந்தியத்தில் உள்ள முன்னணி அரசியல் தலைவர்களுடனும் கருத்தொற்றுமையை ஏற்படுத்தவும் ஒன்றிய அரசு கொண்டிருக்கும் அக்கறையை காஷ்மீர் தலைவர்களுடனான பிரதமரின் சந்திப்பு வெளிப்படுத்தியுள்ளது.

மெகெல்லேயில் திக்ரேயின் முன்னாள் ஆட்சியாளர்கள்

எதியோப்பியாவின் திக்ரே பிராந்தியத் தலைநகரான மெகெல்லேயை மீண்டும் கட்டுப்படுத்துவதாக அப்பிராந்தியத்தின் முன்னாள் ஆட்சியாளர்கள் நேற்று தெரிவித்துள்ளனர். ஏறத்தாழ எட்டு மாத மோதல்களின் பின்னரே குறித்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒருதலைப்பட்சமான யுத்தநிறுத்தமொன்றை குறித்த ஆட்சியாளர்களை வெளியேற்றிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்க ஆரம்பித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியாக மொடேர்னா அல்லது ஃபைசர் தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சின் ஆலோசனைக்குழு அனுமதியளித்துள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்றை சுகாதார அமைச்சு இன்று (28) முதல் ஆரம்பித்துள்ளது. இதன்படி, வீடுகளில் தங்க வைக்கப்படும் தொற்றாளர்களுடன் தினமும் தொலைபேசி ஊடாக வைத்தியர்கள் தொடர்புக்கொண்டு, தொற்றாளர்களின் நிலைமையைக் கண்காணிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் தொற்றுக்குள்ளானோரை வைத்தியசாலைகளில் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கனடாவில் மேலும் தேவாலயங்கள் எரிப்பு

மேற்கு கனடாவிலுள்ள பழங்குடியினச் சமூகங்களில் மேலுமிரண்டு கத்தோலிக்கத் தேவாலயங்கள் நேற்றுக் காலையில் எரிக்கப்பட்டுள்ளன. குறித்த இரண்டு தேவாலயங்களிலும் ஒரு மணித்தியாலத்துக்குள்ளேயே தீ ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டு கட்டடங்களும் முழுமையாக அழிவடைந்துள்ளதாகவும், தீகளை சந்தேகத்துக்கிடமானதாகக் கருதுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

’கடல் வளம் சுரண்டப்படும் நிலையில் மாற்றம்’

தமது கடல் வளம் வெளிமாவட்ட மீனவர்களால் சுரண்டப்படும் நிலையில் இருந்து, இப்போது வெளிநாட்டவர்களைக் கொண்டு சுரண்டும் நிலைக்கு மாறியுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

சட்டவிரோத மணல் அகழ்வு: ’சாதகமான தீர்ப்பை பெற்றுத் தருவோம்’

கௌதாரிமுனையில், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், இது தொடர்பில் மக்களுக்குச் சாதகமான தீர்ப்பை பெற்றுக்கொடுப்போம் என்றும் கூறினார்.

மணிவண்ணனுக்கு எதிராக முறைப்பாடு

யாழ்ப்பாணம் மாநகர மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக, வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தில், இன்றைய தினம் (28) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகர சபை உறுப்பினர் ஜெ.ரஜீவ்காந்தால், இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.