தேவதாசி

(V S Venkadesan)
20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.

விதிகளை ஏற்க கூகுள் ஆயத்தம்

இந்தியாவின் சட்டங்களுக்கு உட்பட்டு, புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்க தயார் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. சமூக ஊடகங்களான ‘டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டர்கிராம்’ போன்ற நிறுவனங்கள் தங்களது பயனாளர்களின் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தலைமை நடவடிக்கை அதிகாரி, சிறப்பு பணி தொடர்பு நபர், உள்ளுறை குறைதீர் அதிகாரி ஆகியோரை நியமிக்க வேண்டும் என்பது உட்பட பல புதிய விதிகளை மத்திய அரசாங்கம் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி வெளியிட்டது. இந்த விதிகளுக்கு இணங்கிச் செயல்பட சமூக ஊடகங்களுக்கு மூன்று மாத அவகாசம் அளிக்கப்பட்டது. ‘விதிகளுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு எதிராக தடை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஐந்தாவது இடத்தில் இந்தியா?

வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில், ஐந்தாவதாக இந்தியா இருக்கும் என்று எஸ்.பி.ஐ., எகோரேப் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 1.3 சதவீதம் வளர்ச்சி காணும் என, எஸ்.பி.ஐ., அறிக்கை தெரிவித்துள்ளது. அத்துடன், வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில், ஐந்தாவதாக இந்தியா இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

கொரோனா செய்தித் துளிகள்

பொகவந்தலாவை பொதுசுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்டப் பகுதிகளில், 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி. அம்பகமுவ பொதுசுகாதார பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், 51 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 740 ஆக உயர்வு. நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3481ஆக உயர்வு. நாவுல பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவருக்கு தொற்று உறுதி. தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை (வயது 65) கொரோனாவால் மரணம்.

பொருள்களைக் காவியவர்களைத் தேடும் பொலிஸார்

கொழும்பு துறைமுகத்துக்கு வடமேல் பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் தீ ஏற்பட்டு அது இரண்டாகப் பிளவுபட்டதால், அதிலிருந்து கடலில் விழுந்த கொள்கலன்களிலுள்ள வெவ்வேறு வகையான,இரசாயனப் பொருள்கள் கரையொதுங்குவதாகத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண,விசேடமாக பமுனுகம,துங்கால்பிட்டிய, கொச்சிகடை, நீர்கொழும்பு ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரையோரங்களில் மக்கள் ஒன்று கூடி இவ்வாறு மிதக்கும் பொருள்​களை கொண்டு செல்வதாக அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாம்களில் கொரோனா

தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாம்களில் கொரோனா, பாதிப்பிலும் தமிழக அரசுக்கு கொரோனா நிவாரண நிதிவழங்கிய முகாம் மக்கள்
தமிழகத்தில் 107 முகாம்கள் அமைந்துள்ளன,இவை தமிழக மக்கள் வாழும் குடியிருப்புகளுக்கு அண்;ணமையில் அரசு நிலங்களில் அமைக்கப்பட்டுள்ளது.முகாம் குடியிருப்புகள் ஆனது மிகவும் நெருக்கமாக தொகுப்புகளாக அமைக்கப்பட்டள்ளது. .இதனால் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால்,மற்றவர்களுக்கு எளிதில் பரவும் அபாயம் உள்ளது.

புத்தளம் நகர சபையின் தலைவர் விபத்தில் மரணம்

புத்தளம் நகர சபையின் தலைவர் ​கே.ஏ.பாயிஸ் (52), விபத்தொன்றில் இன்று (23) மரணமடைந்தார். அவருடைய ஜனாஸா, வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பாக புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு 2004, 2010ஆம் ஆண்டுகளில் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை: கொரனா செய்திகள்

தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடுகள் மாதம் 7ஆம் திகதி திங்கள்கிழமை வரையிலும் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அத்தியாவசியப் பொருள்களை கொள்வனவு செய்வதற்காக, மே-25, மே 31 மற்றும் ஜூன் மாதம் 04ஆம் திகதிகளில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். பயணக் கட்டுப்பாடுகுள் தளர்த்தப்படும் நாள்களில், அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்ய, அருகிலுள்ள கடைகளுக்கு சென்று திரும்பலாம் என்பதுடன், வாகன போக்குவரத்தை மட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

தோழர் தி. பாலகிருஷ்ணன் அவர்கள் மறைந்தார்

(பெ. முத்துலிங்கம்)

தோழர் பால நேற்று முன் தினம் (21ம் திகதி) நான் நடாத்திய இணையவழி சர்வதேச தேயிலைத் தின நிகழ்வில் கலந்துக் கொள்ள இருந்தார். அன்று நிகழ்வு நடந்துக்கொண்டிருக்கையில் பி.ப 3.30 க்கு தமிழகன் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை அனுப்பினார்.

தோழர் வசந்தன் இற்கு எமது அஞ்சலி

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஆரம்பகால தோழர்களில் ஒருவரும் கராட்டித் தோழர் என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவருமான தோழர். சிவபாதசுந்தரம்(மனேஜர்) தனது 71வது வயதில் ஜேர்மனியில் உள்ள பொகும் (Bochum) நகரில் 16.05.21 அன்று மாரடைப்பால் மறைந்தார் என்னும் செய்தியினை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.