‘அச்சுவேலியில் ஏற்பட்டது நிலஅதிர்வு எனக்கூறமுடியாது’

அச்சுவேலி நவக்கிரி பகுதியில் நிலத்தில் ஏற்பட்ட விரிசலானது, பாறைகளில் ஏற்பட்ட அதிர்வுகள் மற்றும் விரிசல்கள் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர். ஏஸ்.ரீ.வீ. இராஜேஸ்வரன், தமிழ்மிரருக்கு ஞாயிற்றுக்கிழமை (24) தெரிவித்தார். அச்சுவேலி, நவக்கிரியில் தருமசிறி என்பவரின் வீட்டுச் சுவரில் சனிக்கிழமை (23) அதிகாலை பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், வீட்டிலிருந்து தோட்டத்தரவைகள் வரையில் நிலத்திலும் விரிசல்கள் ஏற்பட்டன.

(“‘அச்சுவேலியில் ஏற்பட்டது நிலஅதிர்வு எனக்கூறமுடியாது’” தொடர்ந்து வாசிக்க…)

வவுனியாவில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம், இன்று காலை 10 மணிக்கு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த கலந்துரையாடலில், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் மேலும் பலர் கலந்துகொண்டுள்ளனர். அத்துடன், புதிய அரசியலமைப்பு, மக்களுக்கான தீர்வுத் திட்டம், காணாமல் போனோர் தொடர்பான விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை பத்மநாபா E.P.R.L.F காரியாலயத்தில்

 

திருகோணமலை பத்மநாபா E.P.R.L.F காரியாலயத்தில் மாவட்ட அமைப்பாளர் சத்தியன் தலைமையில் “கல்வி சேவை” என்னும் நிகழ்வில் வசதி குறைந்த மாணவர்களுக்கு புத்தகப்பை , கற்றலுக்கான உபகரணங்கள் 17/01/2016 அன்று வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் முன்னாள் வடகிழக்கு மாகாண சபை முதலமைச்சர் வரதராஜபெருமாள், பத்மநாபா E.P.R.L.F பொது செயலாளர் ஸ்ரீதரன், யாழ் மாவட்ட அமைப்பாளர் தோழர் மோகன் , தோழர் கிருபா மற்றும் திருமலை தோழர்களும் கலந்து கொண்டனர். இவ் நிகழ்வில் வழங்கப்பட்ட கற்றலுக்கான உபகரணங்களால் நூற்று கணக்கான பாடசாலை மாணவர்கள் நன்மை அடைந்ததனால் வறுமை நிலையிலுள்ள பெற்றோர்களின் சுமைகளும் குறைக்கப்பட்டன. இவ் நிகழ்வு மலை 6 மணி அளவில் நிறைவு பெற்றது.

வசந்தம் ரிவி அரசியல் கலந்துரையாடலில் அ. வரதராஜப்பெருமாள்

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24.01.2016) மாலை ஏழு மணிக்கு (7.00 பி.ப.) வசந்தம் ரிவியில் அதிர்வு (அரசியற் கலந்துரையாடல்)  Adhirvu (Political Hard Talk)  என்ற நிகழ்ச்சியில் வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வர-தராஜப் பெருமாளின் பேட்டி இடம் பெறவுள்ளது. இதனை http://www.vasantham.lk/ எனும் இணையத் தளம் ஊடாகவும் அதன் நேரடி ஒளிபரப்பைக் காணலாம்.

கைவிடப்பட்ட மக்களுக்காக கருத்தரங்கு – சுன்னாகம் தெற்கு சனசமூக நிலையத்தில்

போலி தமிழ்த் தேசியம் பேசிய அனைவரும் சுன்னாகம் பேரழிவைக் கண்டும் காணாமல் கண்களை மூடிக்கொண்டிருக்கும் நிலையில் வைத்தியக் கலாநிதி முரளி வல்லிபுரநாதன் மற்றும் துவாரகன் போன்ற ஒரு சில தனி நபர்களின் முயற்சி மக்களுக்கு நம்பிக்கை தருகிறது. பல்வேறு ஆபத்தான சூழ்நிலைகளைக் கடந்து போராடும் மக்களின் நம்பிக்கையாக ஒரு சில தனிநபர்களே எஞ்சியுள்ளனர்.

(“கைவிடப்பட்ட மக்களுக்காக கருத்தரங்கு – சுன்னாகம் தெற்கு சனசமூக நிலையத்தில்” தொடர்ந்து வாசிக்க…)

ஸ்காபரோவில் தமிழர் மரபுப்படி தேர்தல் திருவிழா

கனடா ஸ்காபரோ ரூஜ் ரிவர் பகுதி முன்னாள் ரொறொண்டோ கல்விச்சபை உ றுப்பினர் சூன் சான் நம் இராதிகாவை வென்று பாராளுமன்றம் சென்றபடியால் கல்விச்சபை அறங்காவலர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். எனவே அங்கு ஒரு இடைதேர்தல் எதிர்வரும் திங்கள் 25.01.06அன்று நடை பெற இருக்கின்றது.

(“ஸ்காபரோவில் தமிழர் மரபுப்படி தேர்தல் திருவிழா” தொடர்ந்து வாசிக்க…)

கட்சித்தாவ சோமவன்ச முயற்சி

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் இயங்கும் கூட்டு எதிரணியுடன் கைகோர்க்கவுள்ளதாக தெரியவருகிறது. மக்கள் சேவகர்கள் கட்சியை ஸ்தாபித்த அமரசிங்க, தினேஷ் குணவர்தன மக்கள் ஐக்கிய முன்னணியின் பிரதிநிதிகளுடன் அண்மையில் பேசியுள்ளார். அச்சந்திப்பில், கூட்டு எதிரணியுடன் சேர அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இவர், கடந்த வருடம் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து விலகி, புதிய கட்சியைத் தோற்றுவித்தார். அத்துடன் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியில் இணைந்து செயற்படுவதற்கு அவர், ஏற்கெனவே இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வினயமான வேண்டுகோளை ஏற்றார் விக்னேஸ்வரன்!

வட மாகாணசபை பேரவைத்தலைவர் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் கடந்த 18-01-2016 திகதி நடத்திய ஒன்றுகூடலின் பின் முதல்வரிடம் கலந்துரையாட வேண்டிய மூன்று விடயங்கள் சம்மந்தமாக 20-01-2116 திகதி நேரம் ஒதுக்கி தரும்படி அவர்களால் வினயமாக விடப்பட்ட கோரிக்கையை முதல்வர் விக்னேஸ்வரன் ஏற்று அவர்கள் கேட்டுக்கொண்டபடி 20-01-2016 திகதி மாலை 5 மணிக்கு நேரம் ஒதுக்கி கொடுத்துள்ளார்.

(“வினயமான வேண்டுகோளை ஏற்றார் விக்னேஸ்வரன்!” தொடர்ந்து வாசிக்க…)

வெற்றிலை சின்னத்தில் சு.க போட்டியிடும்

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்‌ஷ, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் சகலரையும் ஒன்றிணைத்து ஐ.ம.சு.முவின் வெற்றிலைச் சின்னத்திலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சு.க போட்டியிடுமென அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார். சு.கவில் பிளவை ஏற்படுத்தினால் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது தொடர்பில் சு.கவில் உள்ளவர்களுக்கும், இடதுசாரிக் கட்சிகளுக்கும் நன்றாகத் தெரியும் என்றும் அவர் கூறினார்.

(“வெற்றிலை சின்னத்தில் சு.க போட்டியிடும்” தொடர்ந்து வாசிக்க…)

புதிய அரசியலமைப்புத் தொடர்பில் விவாதம் நடக்காது

புதிய அரசியலமைப்பை வரைவதற்கான செயன்முறைகளைத் தொடக்குதல் மீதான தீர்மானத்தை எடுப்பதற்கான விவாதம் எதிர்வரும் 26ஆம் திகதியன்று இடம்பெறாது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தீர்மானத்தை எடுப்பதற்கான விவாதத்தை எதிர்வரும் 26ஆம் திகதியன்று நடத்துவதற்கு, முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. ஆயினும், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இதனை ஒத்திப் போடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக, அடுத்தவாரம் வேறுவிடயங்கள் நிரலிடப்பட்டுள்ளன. இவற்றுள் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் தாக்குதலும் அடங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

(“புதிய அரசியலமைப்புத் தொடர்பில் விவாதம் நடக்காது” தொடர்ந்து வாசிக்க…)