கையேந்துவதை விட இருப்பதை காப்போம்

கையேந்துவதை விட இருக்கும் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைக் காப்போம். சிறுபான்மையினரின் பூரண ஒத்துழைப்பின்றி, பெரும்பான்மை இன மக்களின் அமோக விருப்பத்துடன் இந்த அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறியிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதியாகப் பதவிப்பிமாணம் செய்ததன் பின்னர், நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையிலேயே அது தெட்டத்தெளிவானது.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் இந்த மாதம் 30ஆம் திகதி வரை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் மேல் மற்றும் வடமேல் மாகாண பாடசாலைகளை மாத்திரம் தற்காலிகமாக மூடுவதற்கு கல்வி அமைச்சு அறிவித்திருந்த நிலையில், இன்று சகல பாடசாலைகளையும் மூட நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை, சகல தனியார் வகுப்புகளுக்கும் தடை ​விதிக்கப்பட்டுள்ளன.

வாபஸ் பெறுவதற்கான படிமுறைகள் ஆரம்பித்தன

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறுவதின் திட்டமிடப்பட்டதன் அங்கமொன்றாக உள்ளூர் நடவடிக்கை ஆரம்பித்துள்ளதாக, ஆப்கானிஸ்தானிலுள்ள வெளிநாட்டு இராணுவப் படைகளின் தளபதியான, ஐக்கிய அமெரிக்க இராணுவ ஜெனரல் ஸ்கொட் மில்லர் நேற்று தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தான் படைகளிடம் படிப்படியாக வெளிநாட்டு இராணுவத் தளங்கள் கையளிக்கப்படுமென மில்லர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்கு தங்களது அனைத்துப் படைகளும் தயாராவதாகவும், உத்தியோகபூர்வமான குறிப்பிட்ட திகதி மே மாதம் முதலாம் திகதி என மில்லர் தெரிவித்துள்ளார்.

3 ஒஸ்கார் விருதுகளை அள்ளிய ’ நோ மேட்லாண்ட்’

க்ரோய் சாவ் எனும் சீனப் பெண்ணின் இயக்கத்தில் உருவான நோ மேட்லாண்ட் எனும் திரைப்படத்துக்கு 93ஆவது ஒஸ்கார் விழாவில் 3 விருதுகள் கிடைத்துள்ளன. அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெறும் ஒஸ்கார் விருது விழாவி​லேயே இந்த விருதுககள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய, சிறந்த படத்துக்கான விருதை சுவீகரித்த இந்த திரைப்படம், சிறந்த நாயகிக்கான விருதையும் சிறந்த இயக்குனருக்குமான விருதையும் சுவிகரித்துள்ளது.

யாரை திருப்திப்படுத்த ரிஷாட்டை கைது செய்தீர்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கைது அநாகரீகமானது, அருவருக்கத்தக்கதென்றும் சாடிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரான அமீர் அலி, யாரை திருப்திப்படுத்துவதற்கு ரிஷாட் கைதுசெய்யப்பட்டார் என வினவினார்.

இலங்கை: கொரனா செய்திகள்

தற்போதைய கொரோனா நிலைமை காரணமாக, அரச ஊழியர்களை பகுதி,பகுதியாக வேலை செய்ய அழைப்பது தொடர்பான சுற்றறிக்கை நாளை (26) வெளியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

மன்றத்தில் தூங்குவது யார்

பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்ட விதம் தொடர்பான புள்ளிவிபர தகவல் தொடர்பில் கடைசி பத்து இடங்கள் தொடர்பில் கலாய்த்துக் கொண்டிருக்கும் எம்மவர்க்கு சில விஷயங்களை புரிய வைக்க வேண்டியுள்ளது.

‘பாலியில் நீர்மூழ்கி மூழ்கியது’

பாலிக் கரையோரத்தில் 53 பேருடன் கடந்த புதன்கிழமை காணாமல்போன நீர்மூழ்கியொன்று இழக்கப்பட்டுள்ளதாக, இந்தோனேஷியக் கடற்படை நேற்று தெரிவித்துள்ளது.

புதுடெல்லியில் ஊரடங்கு நீடிக்கும் அபாயம்

புதுடெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, அதைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முறையான அறிவிப்பு இன்று வெளியாக லாம் எனத் தெரிகிறது.