இலங்கை: கொரனா செய்திகள்

கொழும்பு, நீர்கொழும்பில் புதிய கொவிட் தொற்றாளர்கள் இன்று (19) இனங்காணப்பட்டனர். புதிய கொவிட் தொற்றாளர்கள் 63 பேர், இன்று (19) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் இனங்காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19  தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார் விவேக்கின் மனைவி

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விவேக். தமது நகைச்சுவை மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்தவர்.

விவேக் நினைவாக…

சின்னக்கலைவாணர் இயற்கை காவலன் நடிகர் விவேக்கின் மறைவின் அஞ்சலிக்காக பதினைந்து மாங்கன்றுகளை அன்னமலை பிரதேச வைத்தியசாலையில் நடுகை செய்யப்பட்து. கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் உள்ளிட்ட சுகாதாரத்துறையினர் மரநடுகையில் ஈடுபடுவதைக்காணலாம். (படங்கள்: சகா)

5 நாள்களில் 52 பேர் மரணம்

வாகன விபத்துகளால் கடந்த 5 நாள்களில் 52 பேர் உயிரிழந்துள்ளனரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். குறித்த காலப்பகுதிக்குள் 399 விபத்துகள் ஏற்பட்டுள்ளதுடன், இதில் 669 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மது​போதையில் வாகனம செலுத்திய 1834 சாரதிகளும் கடந்த 5 நாள்களில் கைதுசெய்யப்பட்டுள்ளனரென அவர் மேலும் தெரிவித்துள்ளார்

இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய மியன்மார் முடிவு

மியன்மாரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய தீர்மானித்துள்ளதாக மியன்மார் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மியன்மாரிலுள்ள இலங்கை தூதுவராலயம் ஊடாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதென, மீன்பிடி அமைச்சின் மீன்பிடி நடவடிக்கை பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரன தெரிவித்துள்ளார்.

வடக்கில் 1,600 இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைவு

வடக்கில் கடந்த 3 மாதங்களில் 1600 இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைந்துள்ளனரென இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யாழ்- பாதுகாப்பு படை தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இன்றும் பிரிவினைவாத கருத்துகளையுடைய நபர்கள் மற்றும் குழுக்களின் அச்சுறுத்தல் காணப்படும் நிலையில், யாழில் இவ்வாற இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைகின்றமை தமக்கு கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்துள்ளார்.

ஆறு அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவால், ஆறு அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இக்கட்சிகளுக்கிடையேயான உட்கட்சி முரண்பாடுகள் காரணமாக நீதி நடைமுறைகளின் கீழ் குறித்த கட்சிகள் இருக்கின்ற நிலையிலேயே கட்சிகளின் செயற்பாடுகளை இடைநிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிகேவா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். குறித்த கட்சிகளுக்கு தேர்தலொன்றில் பின்னடைவு ஏற்படுமென்பதால் குறித்த கட்சிகளின் பெயர்கள் வெளிப்படுத்தப்படாதென ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு அதிகரிப்பு

அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதையடுத்து, இந்தியாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கிழக்கு-மேற்கு பிளவை எடுத்துக் காட்டிய மனித உரிமைப் பேரவைத் தீர்மானம்!

VAANAVIL issue 123 – March 2021 has been released and is now available for download at the link below.

2021 ஆண்டு பங்குனி மாதத்திற்குரிய வானவில் (இதழ் 123) வெளிவந்துவிட்டது. இதனை கீழேயுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம்.

Please click on the link below to read the issue.

இதழினை வாசிப்பதற்கு கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://manikkural.wordpress.com/

பொதுமுடக்கத்தை அறிவித்திடுக.

(Dr Ravindranath GR)


கொரோனா பரவல் மிகவும் வேகமாக உள்ளது.
கட்டுக் கடங்காமல் உள்ளது.
பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
கொரோனாவில் இருந்து காத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
தடுப்பு நடவடிக்கைகளில் அக்கறை காட்டுங்கள்.